குஷ்புவின் பில்கிஸ் பானு, நிர்பயா பற்றிய ட்வீட்டுகள் - வலுக்கும் சர்ச்சை

பட மூலாதாரம், KHUSHBU
இந்தியாவில் பெண் பாதுகாப்பு குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பிய சம்பவம், 2012ஆம் ஆண்டு நிகழ்ந்த நிர்பயா கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு. தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் இந்த வழக்கு காரசாரமான வாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்தின் பின்னணியில் இந்த நிர்பயா விவகாரம் மீண்டும், பேசுபொருளாகியுள்ளது.
நடந்தது என்ன?
2002ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக நடைபெற்ற குஜராத் கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினர் 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 பேரையும் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு செய்து சிறையிலிருந்து விடுதலை செய்தது.
இந்த சம்பவம் குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி புதன்கிழமை கருத்து பதிவிட்ட குஷ்பு, "பாலியல் வல்லுறவால் ஆன்மா அச்சுறுத்தப்பட்ட ஒரு பெண்ணுக்கு கட்டாயம் நீதி கிடைக்க வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் யாரும், வெளியில் இருக்கக் கூடாது. அப்படி நடந்தால், அது மனிதகுலத்துக்கும் பெண்ணினத்துக்குமான பெரும் அவமதிப்பாகும். பில்கிஸ் பானு மட்டுமல்ல, எந்தப் பெண்ணாயினும் இந்த விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு உதவ வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
"இப்படி பாலியல் குற்றவாளிகளை விடுவித்த கட்சி/அரசின் பெயரை குறிப்பிட தயங்குகிறீர்கள்? அப்படியானால் ஏன் இன்னும் அந்தக் கட்சியில் இருக்கிறீர்கள்?" என்று இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார் வங்காள எழுத்தாளர் அக்னிவோ நியோகி.
இதற்கு பதிலளித்த குஷ்பு, "நிர்பயா சம்பவம் நடைபெற அனுமதித்த கட்சியில் நான் இருந்தேன். அதைவிட வெட்கக்கேடானது வேறொன்றும் இல்லை. உங்களை எண்ணி பரிதாபப்படுகிறேன்." என்று பதிலுக்கு ட்வீட் செய்திருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இந்த ட்வீட்டின் விளைவாகத்தான் சமூக வலைதளங்களில் மீண்டும் நிர்பயா விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.

நிர்பயா வழக்கு என்றால் என்ன?
- 2012 டிசம்பர் 16 அன்று டெல்லியில் 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர்.
- மறுநாள் டிசம்பர் 17 அன்று முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம் சிங் கைது செய்யப்பட்டார். அடுத்த சில தினங்களில் அவரது சகோதரர் முகேஷ்சிங், ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்த வினய் குமார் சர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
- முக்கிய குற்றவாளியும், பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது, 2013 மார்ச் 11 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவனின் குற்றத்தை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்தச் சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்கவேண்டும் என தீர்ப்பளித்தது. அவர் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
- 2013 செப்டம்பர் 13ஆம் தேதி இந்த வழக்கில் பிற நான்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், வினய் ஷர்மா, அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
- 2014 மார்ச் 13: நால்வரின் மரண தண்டனையை தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
- 2014 மே-ஜூன்: குற்றம் சாட்டப்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ததால், அதை பரிசீலித்து தீர்ப்பு வழங்கும்வரை மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியது.
- 2017 மே: தில்லி உயர் நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
- 2020ஆம் ஆண்டு மார்ச் 20, காலை 5:30 மணி அளவில் இந்த நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது "நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது" என்று நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3

ட்விட்டரில் நடக்கும் விவாதம்
"உண்மைகளை சரியாக பேசுங்கள். நிர்பயா விவகாரம் நடைபெற காங்கிரஸ் அரசு அனுமதிக்கவில்லை. ஆம் அது ஒரு மோசமான குற்றம்தான். ஆனால், பில்கிஸ் பானு விவகாரம், அரசின் ஆசியுடன் நடந்த வன்முறையில் நிகழ்த்தப்பட்டது. அத்துடன், 5 பாஜக உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுதான் குற்றவாளிகளை விடுதலை செய்ய வைத்தது" என்று ட்விட்டரில் பதிலளித்துள்ளார் ஆசிரியர் ஒருவர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
"இந்த விடுவிப்பே அரசியல்தான். இந்த ஒப்பீட்டுக்கு வருந்துகிறேன். ஆனால், செய்ய வேண்டியிருக்கிறது. இந்தக் குற்றவாளிகள் வேறு மதத்தினராக இருந்து, ஒரு இந்து பெண்ணுக்கு இதே பாதிப்பு நடைபெற்றிருந்தால், குஜராத் அராசாங்கம் அவர்களை இதேபோல விடுதலை செய்யுமா? நிச்சயமாக இல்லை." என்று குறிப்பிட்டுள்ளார் நாகஜோதி என்ற பதிவர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
"Allowed to happen & released by court - இந்த understandingஉடன் எதற்கு நேற்று அந்த "கண்டன ட்வீட்டு "இதுக்கு பருத்தி மூட்டை கோடோனிலே இருந்தருக்கலாமே. எல்லா பெண்களும் இதை கண்டனம் செய்யவில்லை. ஆரத்தி எடுத்த பெண்களும் உண்டு. அவர்களது புரிதலுக்கும் உங்கள் புரிதலுக்கும் ஒரு வித்தியாசம் கூட இல்லை" என்று கார்த்திகேயன் என்பவர் பதிலளித்துள்ளார்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா? படியுங்கள் என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 7
அத்துடன், "நடக்க அனுமதித்தார்களா?" நிர்பயா சம்பவத்தை நிகழ்த்தும்படி அந்த குற்றவாளிகளுக்கு காங்கிரஸ் அனுமதி கொடுத்தது போல பேசுகிறீர்கள். தவறான தகவல்களையும் திசைதிருப்புதலையும் நிறுத்துங்கள். ஸ்மிரிதி இராணி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரின் மௌனத்தை கேள்வி கேட்க உங்களுக்கு பயமாக இருக்கிறதா? இப்படி போட்டாபோட்டி போடுவதற்கு பதில் ஏதாவது தேவையானதை செய்யுங்கள்" என்று காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில செய்தித் தொடர்பாளரான லாவண்யா பல்லால் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 8
அத்துடன், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் அரசு நிர்பயா விவகாரத்தில் செய்தது என்ன என்றும் குஷ்புவின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக பதிலளித்து வருகின்றனர்.
இந்த வாத பிரதிவாதங்கள் நிர்பயா என்ற ஹேஷ்டேகின் கீழ் நடைபெற்று வருகின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்