அமித் ஷாவின் காலணிகளை தூக்கிய பாஜக தலைவர் - 'குஜராத் அடிமைகள்' என்று விமர்சித்த டிஆர்எஸ்

தெலங்கானா மாநிலம் செகந்தராபாதில் உள்ள கோவிலுக்கு சென்று வந்த இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் காலணிகளை மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான பண்டி சஞ்சய் குமார் எடுத்துக் கொடுத்த சம்பவம், சமூக ஊடகங்களில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மூத்த தலைவர்கள், அமித் ஷாவையும் பாரதிய ஜனதா கட்சியினரையும் கடுமையாகச் சாடி கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
தெலங்கானாவில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக செகந்தராபாத் வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்குள்ள உஜ்ஜைனி மகாகாளி மாதா தேவஸ்தானம் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று தரிசனம் செய்தார். பிறகு அவர் கோவிலை விட்டு வெளியே வந்தபோது, அங்கு காலணி விடும் இடத்தில் இருந்த அமைச்சரின் காலணிகளை மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் எடுத்துக் கொடுக்க, அதை அணிந்தபடி அமித் ஷா செல்வது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் திங்கட்கிழமை காலையில் இருந்து வைரலானது.
இதையடுத்து, ஆளும் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகனும் தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர்களில் ஒருவருமான கே.டி.ராமராவ், "தெலங்கானா பெருமை" என்ற ஹேஷ்டேக்குடன் சில இடுகைகளை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
அதில் அவர், "டெல்லியின் காலணிகளை குஜராத்தின் அடிமைகள் சுமப்பதை மாநில மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தெலங்கானாவின் சுயமரியாதையை இழிவுபடுத்தும் எந்த முயற்சியை அவர்கள் முறியடிப்பார்கள்," என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இதைத்தொடர்ந்து, டிஆர்எஸ் கட்சியின் சமூக ஊடக அணியின் ஒருங்கிணைப்பாளர் ஒய். சதீஷ் ரெட்டி, "பண்டி சஞ்சய்யின் சேவை "குலாம்கிரியில் சிறப்பாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். குலாம்கிரி என்பது அடிமை சேவகம் செய்வது என இந்தியில் பொருள்படும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
"செருப்புகளை எடுத்து வருவதில் காட்டும் வேகமும் கவனமும் நாளை நமது மாநிலத்தை அமித்ஷாவின் காலடியில் பாஜக அடகுவைக்கும் என்பதை காட்டுகிறது. தெலங்கானா மக்களே ஜாக்கிரதை" என்று டிஆர்எஸ் தலைவர்களில் ஒருவரான எம். கிரிஷண் ட்வீட் செய்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்பியும் தெலங்கானா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "தெலங்கானா பாஜக மாநில தலைவர் சஞ்சய் பண்டி, அமித் ஷாவின் காலணிகளை எடுத்து வைக்கிறார். பாஜகவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு தலைவரின் நிலை என்ன என்பதை பாருங்கள்," என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
சமீபகாலமாக, தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே பல்வேறு பிரச்னைகளில் வெளிப்படையாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது.
மரியாதை அடிமையாகாது: பாஜக எம்பி விளக்கம்
இந்த நிலையில், அமித் ஷாவின் செருப்பை எடுத்து வைத்து தொடர்பாக சர்ச்சைக்குள்ளான பண்டி சஞ்சய் குமார் விளக்கம் அளித்துள்ளார். "குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கு வயதில் இளையவர்கள் காலணிகளை எடுத்துக் கொடுப்பது ஒரு வழக்கம்," என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், "தேவை இருந்த நேரத்தில் காலை வாரி விடுபவர் நாங்கள் அல்ல. அது எங்களுடைய பழக்கமும் அல்ல. நாங்கள் அடிமைகளும் அல்ல," என்று பண்டி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
தந்தை, தாயை கொன்று விட்டு ஒளரங்கசீப் பாணியில் ஆட்சிக்கு வந்தவர்கள் நீங்கள். எங்களுடைய கலாசாரத்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
தெலங்கானாவில் ஆளும் முதல்வரின் குடும்பத்தினர், அதிகாரத்துக்கான போட்டியில் தங்களுக்குள் மோதிக் கொள்கிறார்கள். தங்களுடைய பிரச்னைகளை திசைத்திருப்ப அவர்கள் இதுபோன்ற விஷயங்களை பெரிதுபடுத்துகிறார்கள் என்றும் பண்டி சஞ்சய் குற்றம்சாட்டினார்.
தெலங்கானா மாநிலத்தின் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள மனுகோடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை வந்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, மாநில மக்களின் நம்பிக்கையைக் குலைத்து ஆட்சிக்கு வந்த கட்சி டிஆர்எஸ் என்று கூறினார்.
டிஆர்எஸ் அழிவு தொடங்கியது - அமித் ஷா
அமித் வருகையின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜகோபால் ரெட்டி பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி தன்னை இணைத்துக் கொண்டார். அவரை வரவேற்றுப் பேசிய அமித் ஷா, "ராஜகோபால் ரெட்டி பாஜகவில் சேர்ந்தது மாநிலத்தில் ஆளும் கேசிஆர் அரசாங்கத்தை வேரிலேயே அழிப்பதற்கான தொடக்கம். செப்டம்பர் மாதம் தெலங்கானா தினத்தை கொண்டாட டிஆர்எஸ் கட்சி விரும்பியது. ஆனால், மஜ்லிகள் மீதுள்ள அச்சத்தால் அப்படி செய்யாமல் தவிர்க்கிறது," என்றார்.
டிஆர்எஸ் கட்சியில் நிலவும் வாரிசு அரசியலை பற்றி பேசிய அமித் ஷா, "மாநிலத்தில் டிஆர்எஸ் ஆட்சி அமைந்தால் தலித் சமூகத்தை சேர்ந்தவரை முதல்வராக்குவோம் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை அப்படி செய்யவில்லை. மீண்டும் அந்த கட்சியை தேர்வு செய்தால் கே.சி.ஆருக்கு பதிலாக அவரது மகன் கே.டி.ஆர் ஆட்சிக்கு வருவாரே தவிர தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் எவரும் முதல்வராக மாட்டார்," என்றார்.
கேசிஆர் மகன் எதிர்வினை
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
அமித் ஷாவின் இந்த கூற்றுக்கு எதிர்வினையாற்றும் வகையில் கேடி ராமராவ் தமது ட்விட்டர் பக்கத்திலேயே பதில் கொடுத்துள்ளார். அதில், "உங்களுடைய மகன் ஜெய் ஷாதான் இப்போது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக இருக்கிறார்," என்று கேடிஆர் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் ஹைதராபாதில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதி வந்தபோது, அவரை வரவேற்க பாஜகவினர் எழுப்பியிருந்த டிஜிட்டல் ஃபிளெக்ஸ் பேனர்களுக்கு அருகிலேயே தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர், பிரதமர் மோதியை விமர்சிக்கும் ஃபிளெக்ஸ் டிஜிட்டல் பேனர்களை வைத்திருந்தனர்.
இந்த விவகாரத்துக்குப் பிறகு இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது. இதற்கு மத்தியில் தெலங்கானா மாநிலத்தில் வேரூன்ற முற்பட்டுள்ள பாஜக, அரசியல் ரீதியாக டிஆர்எஸ் கட்சியை தற்போது எதிர்கொண்டு வருகிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்