நிதிஷ் குமார்: பாஜகவுடனான எதிரி - நண்பன் உறவு எப்படி இருந்தது?

நிதிஷ் குமார் - பாஜக

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

பிகார் மாநில ஆளுநர் பாகு செளஹானை நிதிஷ்குமார் செவ்வாய்கிழமையன்று சந்தித்த பின், தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவுடன் இணைந்து ஆளுநரை சந்தித்து 164 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

ராஜிநாமா செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருந்தது. அதன்படி, நாங்கள் இங்கு வந்து, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யும் கடிதத்தை தந்துள்ளோம் என்றார்.

அதே சமயம், தேஜஸ்வி யாதவ் கூறுகையில், 'இன்று பாஜகவைத் தவிர அனைத்து கட்சிகளும் பிகார் சட்டமன்ற உறுப்பினர்களும் நிதிஷ்குமாரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர்' என்று கூறியுள்ளார்.

நிதிஷ் குமார் தனது அரசியல் சவால்கள் மூலம் பாஜகவின் உயர்மட்டத் தலைமையை அதிர்ச்சியடைய வைத்ததாக நம்பப்படுகிறது. ஏனெனில், 2024 தேர்தலுக்கு முன் பிகார் போன்ற மாநிலத்தின் அதிகாரத்தை இழப்பது பாஜகவுக்கு அரசியல் ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால், இதுபோன்று தனது கூட்டணி மற்றும் எதிர்கட்சிகளை வியப்படைய வைப்பது நிதிஷ் குமாருக்கு இது முதல் முறையல்ல.

பாஜகவுடனான உறவு

இதுவரை ஏழு முறை பிகாரின் முதலமைச்சராக பதவி வகித்துள்ள நிதிஷ் குமார், பல தலைமுறை பாஜகவினருடன் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்த பிகார் தலைவர்களில் ஒருவர்.

அவர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் இருந்து லால் கிருஷ்ண அத்வானி, நரேந்திர மோதி, அமித் ஷா வரை பாஜகவுடன் இணைந்து பணியாற்றியவர்.

நிதிஷ் குமார்

பட மூலாதாரம், Getty Images

இதுமட்டுமின்றி, 20 ஆண்டுகளுக்கும் மேலான தனது அரசியல் பயணத்தில், பா.ஜ.கவின் உயர்மட்ட தலைவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பவர்.

1996 ஆம் ஆண்டு பார்ஹ் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று பாஜகவுடன் கைகோர்த்தபோது, நிதிஷ் குமாருக்கும் பாஜகவுக்கும் இடையிலான உறவு தொடங்கியது.

இதற்குப் பிறகு, அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, நிதிஷ்குமாருக்கு மத்தியில் பல முக்கியப் பொறுப்புகளை வழங்கியது.

1999ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், நிதிஷ் குமாரின் கட்சி, பா.ஜ.கவுடன் இணைந்தது, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு பலத்த போட்டியாக இருந்தது.

மேலும் 2000 ஆம் ஆண்டு, பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் முதல்முறையாக பிகார் முதல்வராக பதவியேற்றார்.

அடல் பிஹாரி வாஜ்பாயுடன் நிதிஷ் குமார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அடல் பிஹாரி வாஜ்பாயுடன் நிதிஷ் குமார்

இந்த தேர்தலில் எந்த கூட்டணிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேசிய ஜனநாயக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 151 எம்எல்ஏக்கள் இருந்தனர். அதே சமயம் லாலு பிரசாத் யாதவுக்கு 159 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது.

ஆனால், நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்ற 7 நாட்களில் அவர் ராஜிநாமா செய்தார். இதன்பிறகு, அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் மத்திய ரயில்வே அமைச்சர் முதல் மத்திய வேளாண்துறை அமைச்சர் வரை நிதிஷ்குமார் பல முக்கியப் பதவிகளை வகித்தார்.

இது நிதிஷ்குமார் நரேந்திர மோதியின் ரசிகராக இருந்த காலம்.

2003 ஆம் ஆண்டு, குஜராத்தின் கட்ச் பகுதியில் ஒரு ரயில் திட்டத்தைத் தொடக்கி வைத்து பேசிய நிதிஷ் குமார், "நரேந்திர மோதி நீண்ட காலம் குஜராத்தில் மட்டும் இருக்க மாட்டார். அவரது சேவை நாட்டுக்கு தேவை என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்," என்று கூறியிருந்தார்.

2005ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன் நிதிஷ்குமார் இரண்டாவது முறையாக பிகார் முதல்வராக பதவியேற்றார்.

அடுத்த சட்டசபை தேர்தலிலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன், பிகாரில் நிதிஷ்குமார் ஆட்சி அமைத்தார். இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 206 இடங்களும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு 22 இடங்களும் கிடைத்தன.

ஆனால், 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன், நிதிஷ் குமாருக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்த விரிசலுக்கு நரேந்திர மோதிதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனுடன், பா.ஜ.கவில் அடல்-அத்வானி சகாப்தம் முடிவுக்கு வந்த பின், புதிய தலைமையுடன் சேர்ந்து பணியாற்றுவதில், நிதிஷ் குமாருக்கு கடினமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், பாஜக மீது நிதிஷ் குமார் எவ்வளவு கோபமாக இருந்தார் என்பது அவர் சட்டசபையில் அளித்த அறிக்கையில் பிரதிபலித்தது. நிதிஷ்குமார், 'நாங்கள் இருந்தாலும், மண்ணில் போனாலும், உங்களுடன் கைகோர்க்க மாட்டோம்." என்று கூறியிருந்தார்.

பாஜகவுடனான நிதிஷ் குமார் உறவு

பட மூலாதாரம், Getty Images

' அடல்ஜியின் காலம் அது. அப்போது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்போது அடல்ஜியின் காலம் இல்லை," என்று கூறியிருந்தார்.

பாஜக தனது நம்பிக்கையை உடைத்ததாகவும் நிதிஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால், 2014ம் ஆண்டு நரேந்திர மோதி மாபெரும் வெற்றிப்பெற்ற பிறகு, அவர் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். தனது கட்சி மோசமாக செயல்பட்டதற்கும் அவர் பொறுப்பேற்றார்.

நரேந்திர மோதி- அமித்ஷா தலைமையில் பாஜகவுடனான நட்பு

நிதிஷ் குமாரின் மனதை அறிவது மிகவும் கடினம் என்று அவரது நெருங்கிய வட்டம் கருதுகிறது.

2014-ம் ஆண்டு ராஜிநாமா செய்த நிதிஷ்குமார், 2015-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கடும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்டதால், தேஜஸ்வி யாதவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

ஆனால் அந்த ஆட்சியை நடத்துவது நிதிஷ்குமாருக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனையும் குறிப்பிட்டுள்ளார். தேஜஸ்வி யாதவ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, நிதிஷ் குமார் பகிரங்கமாக, "ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர்கள் மீது ஊழல் புகார்கள் கூறப்பட்டதால், அவர்களிடம் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நாங்களே தேஜஸ்வியை சந்தித்து இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க கேட்டோம்," என்றார்.

இதற்குப் பிறகு, நிதிஷ்குமார் மீண்டும் ராஜினாமா செய்தார். இது அவரது அரசியல் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோதி, ட்விட்டரில், "ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்த நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள், இந்த நேர்மையை 125 கோடி குடிமக்கள் வரவேற்று ஆதரிக்கின்றனர்," என்று பதிவிட்டார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இது குறித்து நிதிஷ் குமார் கூறுகையில், 'நாங்கள் எடுத்த முடிவு குறித்து மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோதியின் ட்வீட் மூலம் அளித்த பதிலுக்கு நன்றி," என்று பதிலளித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இதன் பிறகு, 2020ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் இணைந்து நிதிஷ்குமார் மீண்டும் பிகார் முதல்வரானார். ஆனால், அப்போது அவர் அரசியல் ரீதியில் சற்றே பலம் குறைந்திருக்கிறார்.

இந்தத் தேர்தலில் அவரது கட்சி 43 இடங்களையும், பாஜக 74 இடங்களையும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை 75 இடங்களையும் பெற்றன.

அதன் பிறகு, தற்போது 2022 ஆம் ஆண்டில், நிதிஷ் குமார் மீண்டும் தனது பதவியை ராஜினாமா செய்து, ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கைகோர்த்து, பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: