உடல் பருமன் குழந்தைகள் இந்தியாவில் அதிகமாகி வருவது ஏன்?

பல வார சிகிச்சை மற்றும் இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, 14 வயதான மிஹிர் ஜெயின் எடை 237 கிலோவிலிருந்து 165 கிலோவாகக் குறைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல வார சிகிச்சை மற்றும் இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, 14 வயதான மிஹிர் ஜெயின் எடை 237 கிலோவிலிருந்து 165 கிலோவாகக் குறைந்துள்ளது.
    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

உலகில் அதிக வளர்ச்சி குன்றிய குழந்தைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் நீண்ட காலமாக முதலிடத்தில் இந்தியா இருக்கிறது. இந்த நிலையில், இப்போது குழந்தைப்பருவ உடல் பருமன் நிலை அதிகரித்து வருகிறது. இதை அவசரமாக அணுகித் தீர்வு காணாவிட்டால், இது தொற்றாக மாறலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

14 வயதான மிஹிர் ஜெயின், 2017ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் இருந்தபடி, டாக்டர் பிரதீப் சௌபேயிடம் ஆலோசனை கேட்டபோது, "என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை" என்று உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சை நிபுணர் (bariatric surgeon) கூறினார்.

"மிஹிர் மிகவும் பருமனாக இருந்தார். அவர் 237 கிலோ எடையும், அவரது உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) 92 ஆகவும் இருந்தது." உலக சுகாதார அமைப்பின் (WHO) கணக்குபடி, பிஎம்ஐ 25 அல்லது அதற்கு மேற்பட்ட அதிக எடை கொண்டதாக கருதப்படுகிறது.

பல வார சிகிச்சை மற்றும் 2018ஆம் ஆண்டு நடந்த இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மிஹிரின் எடை 165 கிலோவாக குறைந்தது. அந்த நேரத்தில், மிஹிர் 'உலகின் அதிக எடையுள்ள பதின் பருவ வயதுடையவர்' என்று அழைக்கப்பட்டார். இந்த முத்திரை மிகை மதிப்பீடாகக் கூட இருக்கலாம்.

உடல் பருமன்

ஆனால் இந்தியாவில் அதிக எடை மற்றும் பருமனான 18 மில்லியன் குழந்தைகள் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

2019-21 ஆண்டில் நடத்தப்பட்ட சமீபத்திய தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு (NFHS-5), சுகாதாரம் மற்றும் சமூகக் குறிகாட்டிகள் பற்றிய அரசின் மிக விரிவான குடும்பக் கணக்கெடுப்பு, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 3.4% அதிக எடையுடன் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இது 2015-16இல் 2.1% ஆக இருந்தது.

மேலோட்டமாகப் பார்த்தால், இந்த எண்ணிக்கை சிறியதாகத் தோன்றலாம். ஆனாலும், இந்திய மக்கள்தொகையின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, "மிகச் சிறிய சதவிகிதம் கூட மிகப் பெரிய எண்ணிக்கையைக் குறிக்கும்," என்று இந்தியாவில் உள்ள யுனிசெப்பின் ஊட்டச்சத்துப் பிரிவின் தலைவர் டாக்டர் அர்ஜன் டி வாக் கூறுகிறார்.

2022ஆம் ஆண்டிற்கான யுனிசெஃப்பின் உலக உடல் பருமன் அட்லஸின் படி, 2030ஆம் ஆண்டின்போது, உலகளவில் 10 குழந்தைகளில் ஒருவரைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இந்தியா 27 மில்லியனுக்கும் அதிகமான பருமனான குழந்தைகளைக் கொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உடல் பருமனை எதிர்கொள்வதற்கான தயார்நிலையின் அடிப்படையில் 183 நாடுகளின் பட்டியலில் 99 வது இடத்தில் உள்ளது. அதிக எடை மற்றும் உடல் பருமனால் ஏற்படும் பொருளாதார தாக்கம் 2019ல் 23 பில்லியன் டாலரிலிருந்து 2060ல் 479 பில்லியன் டாலராக ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவர்களின் எச்சரிக்கை

"இந்தியாவில் குழந்தை பருவத்தில் ஏற்படும் உடல் பருமன் ஒரு பெரிய பிரச்னையாக நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்," என்கிறார் டாக்டர் டி வாக்ட். "பொதுவாக, உடல் பருமனைத் தொடங்கும் விதத்தில், குழந்தை பருவத்தில் தொடங்குவதால், பருமனான குழந்தைகள் பருமனான பெரியவர்களாக வளர்கிறார்கள்."

உடல் பருமன்

இது சுகாதார நிபுணர்களுக்கு பெரும் கவலையாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, அதிகப்படியான உடல் கொழுப்பு தொற்று அல்லாத நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதில் 13 வகையான புற்றுநோய்கள், வகை -2 நீரிழிவு நோய், இதய பிரச்னைகள் மற்றும் நுரையீரல் நிலைகள் ஆகியவை அடங்கும். இது குறைந்த வயதில் மரணம் ஏற்படுத்த வழிவகுக்கும்.கடந்த ஆண்டு, உலகளவில் 2.8 மில்லியன் இறப்புகளுக்கு உடல் பருமன் காரணமாக இருந்தது.

கடந்த சில ஆண்டுகளில் பெரியவர்களின் உடல் பருமன் அடிப்படையில் இந்தியா ஏற்கனவே முதல் ஐந்து நாடுகளில் இடம் பிடித்துள்ளது. 2016இல் ஒரு மதிப்பீட்டின்படி 135 மில்லியன் இந்தியர்கள் அதிக எடை அல்லது பருமனாக உள்ளனர் மற்றும் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 36% குழந்தைகள் இன்னும் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளனர். ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதில் நாம் அடைந்து வரும் வெற்றிகள், அதிகப்படியான ஊட்டச்சத்தால் ஈடுசெய்யப்படுகின்றன என்று டாக்டர் டி வாக்ட் கூறுகிறார்.

"மக்கள் ஒரே நேரத்தில் ஊட்டச்சத்து குறைவாக கொண்டவர்களுமாக, அதிக ஊட்டச்சத்து கொண்டவர்களுமாக உள்ளனர். அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகியவை அதிக ஊட்டச்சத்தின் விளைவாகும். ஆனால் அது அவர்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கிடைக்க செய்கிறது என்று அர்த்தமல்ல.

இங்குள்ள மிகப்பெரிய பிரச்னை "ஊட்டச்சத்து கல்வியறிவின்மைதான்" என்கிறார்.

பணக்கார குடும்பங்களில் வளரும் குழந்தைகள்

"குழந்தைகளுக்கு கார்போஹைட்ரேட், புரதங்கள், வைட்டமின்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய சரிவிகித உணவைக் கொடுத்தால், அது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதீத ஊட்டச்சத்து இரண்டையும் தடுக்கும். ஆனால் மக்களுக்கு எது நல்ல உணவு என்று தெரியாது, அவர்கள் வயிற்றை நிரப்ப சாப்பிடுகிறார்கள். அவர்கள் சாப்பிடுகிறார்கள். அதிக கார்ப்ஸ், அதிக வசதியான உணவைச் சாப்பிடுகிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.

குழந்தை பருவ உடல் பருமன் அனைத்து சமூக வகுப்பினரிடையேயும் ஒரு பிரச்னையாக இருந்தாலும், நகர்ப்புறத்தில் உள்ள பொருளாதார ரீதியில் வசதியான குடும்பங்களில் இது மிகவும் பொதுவானது. அங்கு குழந்தைகளுக்கு கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகிவற்றில் அதிக உணவு மற்றும் பானங்கள் கொடுக்கப்படுகின்றன என்று டாக்டர் டி வாக்ட் கூறுகிறார்.

தில்லி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மேக்ஸ் ஹெல்த்கேர் நடத்திய 2019 கணக்கெடுப்பில், குறைந்தது 40% குழந்தைகள் (5-9 வயது), பதின்வயதினர் (10-14 வயதுடையவர்கள்) மற்றும் இளம்பருவத்தினர் (15-17 வயதுடையவர்கள்) அதிக எடை அல்லது பருமனாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

உடல் பருமன்

"இளைஞர்கள் தாமதமாக தூங்குகிறார்கள், பெரும்பாலும் நள்ளிரவில் பிங்கிங் - வாட்ச் செய்கிறார்கள். அப்போது ஆரோக்கியமற்ற திண்பண்டங்கள் சாப்பிடுகிறார்கள்" என்கிறார் டாக்டர் சௌபே.

"அவர்கள் இரவில் தாமதமாக சாப்பிட்ட பிறகு கலோரிகளை எரிக்க மாட்டார்கள். அதற்குப் பிறகு அவர்கள் தூங்குகிறார்கள். பகலில், அவர்கள் சோம்பலாக இருக்கிறார்கள். அதாவது அவர்கள் கலோரிகளை எரிப்பது மிகவும் குறைவானவை. மேலும், குழந்தைகள் ஓடுவதற்குப் பதிலாக கணினிகள் மற்றும் தொலைபேசிகளில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். விளையாடுகிறது."

" இது உடல் பருமன்," மேலும் அவர் எச்சரிக்கிறார். "மருத்துவம் மட்டுமல்ல, உளவியல் மற்றும் சமூகம் உட்பட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கிறது. பருமனான குழந்தைகள் பெரும்பாலும் முன்கூடியே முடிவுகள் மற்றும் சமூக தனிமைப்படுத்தலை எதிர்கொள்கின்றனர்."

சென்னையின் அறுவை சிகிச்சை நிபுணரும், ஒபிசிட்டி ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் நிறுவனருமான டாக்டர் ரவீந்திரன் குமரன் , இப்போது குழுந்தைகளுடன் இந்த பிரச்னையைத் தீர்க்காவிட்டால், நாட்டில் உடல் பருமன் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என்று கூறுகிறார்.

"இப்போது அரை மணி நேரம் டிவி பார்த்தால், ஜங்க் ஃபுட் மற்றும் குளிர்பானங்களைப் பற்றிப் பல விளம்பரங்களைப் பார்ப்பீர்கள். ஆரோக்கியமற்ற ஜங்க் ஃபுட்களின் நன்மைகள் குறித்த தவறான செய்திகள் நிறுத்தப்பட வேண்டும், அதை அரசு மட்டுமே செய்ய முடியும்." என்கிறார்.

மேலும், குழந்தைகளை அதிகமாக வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

விளையாட்டில் கவனம் செலுத்த அறிவுரை

"நாங்கள் உடல் தகுதிக்காக முதலீடு செய்வதில்லை. எங்கள் நகரங்களில் நடைபாதைகள் இல்லை, பாதுகாப்பான சைக்கிள் பாதைகள் இல்லை, குழந்தைகள் விளையாடக்கூடிய சில விளையாட்டு மைதானங்கள் உள்ளன."

அதைத்தான் 'ஸ்போர்ஸ் வில்லேஜ்' (Sportz Village) என்ற இளைஞர் விளையாட்டு அமைப்பானது மாற்ற முயற்சிக்கிறது என்று அதன் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான செளமில் மஜும்தார் தெரிவிக்கிறார்.

நம் நாட்டில், பள்ளிகள் மட்டுமே குழந்தைகள் விளையாடுவதற்கு பாதுகாப்பான இடங்களை வழங்குகின்றன. ஆகவே, உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதில் பள்ளிகள் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

உடல் பருமன்

பட மூலாதாரம், Getty Images

254,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் அவர்களின் கணக்கெடுப்பு இரண்டு குழந்தைகளில் ஒருவருக்கு ஆரோக்கியமான பிஎம்ஐ இல்லை என்பதைக் காட்டுகிறது. அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு உடல் தளர்வு தன்மை இல்லை, வயிறு அல்லது மைய வலிமை குறைவாக இருந்தது மற்றும் மேல் மற்றும் கீழ் உடல் வலிமையில் மோசமாக இருந்தது.

இது கொள்கை பிரச்னை அல்ல. எல்லா பள்ளிகளிலும் உடற்கல்வி வகுப்புகள் உள்ளன, ஆனால் பொதுவாக நல்ல குழந்தைகள் மட்டுமே கவனத்தை ஈர்க்கிறார்கள். எனவே விளையாடுவதை ரசிக்காத குழந்தைகளுக்கு இது வேடிக்கையாக இருக்காது," என்று மஜும்தார் கூறுகிறார்.

"பள்ளிகளில் குழந்தைகள் எந்தப் பாடத்தின் அடிப்படை அளவைக் கற்க வேண்டும், அதே முறையில் அவர்களுக்கு உடற்தகுதியின் அடிப்படை நிலைகளையும் கற்பிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்."

பல ஆண்டுகளாக, அவர்கள் பணிபுரிந்த பள்ளிகள் முன்னேற்றங்களைக் காட்டியுள்ளன என்று அவர் கூறுகிறார்.

"சில சந்தர்ப்பங்களில் சில அளவுருக்களில் உடற்பயிற்சி நிலைகள் 5% முதல் 17% வரை மேம்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டோம், மேலும் அதிகமான பெண்களை விளையாடச் செய்துள்ளோம். உலகின் அனைத்து பிரச்சனைகளையும் விளையாட்டால் தீர்க்க முடியும் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

வரைபடங்கள் பிபிசியின் தசீன் பதான்

காணொளிக் குறிப்பு, உணவைக் குறைத்தாலும் உடல் எடை குறையாதது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: