பாஜகவில் உறுப்பினராக இருந்தாரா லஷ்கர் தீவிரவாதி?: காங்கிரஸின் குற்றச்சாட்டும் பாஜகவின் பதிலும்

பட மூலாதாரம், J&K Police
- எழுதியவர், மஜித் ஜஹாங்கீர்
- பதவி, பிபிசி ஹிந்திக்காக, ஸ்ரீநகரில் இருந்து
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி தாலிப் ஹுசைன் ஷா, பாஜகவின் தீவிர தொண்டராக இருந்தவர் என்ற கூற்று சமூக ஊடகங்களில் அதிகளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தாலிப்பை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். காவல்துறையின் கூற்றுப்படி, ஜம்முவின் ரியாசி பகுதியில் சாதாரண மக்களால் தாலிப் ஹுசைன் பிடிக்கப்பட்டார். பின்னர் அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் ஜம்மு காஷ்மீர் கிளை செய்தித் தொடர்பாளர் அல்தாப் தாக்கூர், பாஜகவுடன் தாலிப் இணைந்திருப்பதை மறுத்துள்ளார், ஆனால் அவர் கட்சியின் ஆன்லைன் உறுப்பினர் என்பதை ஒப்புக்கொள்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவின் ஜம்மு காஷ்மீர் சிறுபான்மை அணி தலைவர் ஷேக் பஷீர் பிபிசியிடம் பேசும்போது, "இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜம்மு பிராந்தியத்திற்கான தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக ஊடகங்களின் பொறுப்பாளராக தாலிப் ஆக்கப்பட்டார். ஆனால் சில நாட்களிலேயே அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்" என்று கூறினார்.
தாலிப் ஹுசைனுடன், காஷ்மீர் பள்ளத்தாக்கின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஃபாசில் தார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஃபாசில் தாரும் தீவிரவாதிதான் என்று போலீசார் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், ANI
போலீஸின் கூற்று என்ன?
கைது செய்யப்பட்டுள்ள இருவரிடம் இருந்தும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். தாலிப் ஹுசைன் அளித்த தகவலின்பேரில் மேலும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.
இதுவரை ஆறு குண்டுகள், மூன்று தோட்டா நிரப்பிகள், இரண்டு கைத்துப்பாக்கிகள், ஒரு .30 கைத்துப்பாக்கி, ஒரு அண்டர் பேரல் லாஞ்சர், மூன்று கையெறி குண்டுகள், 75 ரவுண்டுகள் தோட்டாக்களுடன் கூடிய AK-47 மற்றும் ஒரு ஐஇடி ரிமோட் ஆன்டெனா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தாலிப் மற்றும் ஃபாசிலை போலீஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்களுக்கு ரூ.2 லட்சம் பரிசும் தரப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைமை இயக்குநர் தில்பாக் சிங் அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தமது ட்விட்டர் பதிவில், "இரண்டு பயங்கரவாதிகளைப் பிடித்து போலீசில் ஒப்படைத்த ரியாசி கிராம மக்களின் துணிச்சலுக்கு எனது வணக்கம். சாமானியரின் துணிச்சலால் இவர்களின் தீவிரவாதம் முடிவுக்கு வந்துள்ளது. யூனியன் பிரதேச அரசு கிராம மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இதற்கிடையே, ரஜெளரியில் நடந்த மூன்று குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக தாலிப்பை போலீசார் ஏற்கெனவே தேடி வந்ததாக ரஜெளரி காவல் கண்காணிப்பாளர் அஸ்லம் செளத்ரி பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
ஆறு நாட்களுக்கு முன்பே, ஜம்மு மற்றும் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநரின் ட்விட்டர் பக்கத்தில், தாலிப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு வெகுமதியும் அறிவிக்கப்பட்டது.

பட மூலாதாரம், ANI
யார் இந்த தாலிப்?
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் பாஜக சிறுபான்மை அணியால் ஜம்மு பிராந்தியத்திற்கான ஐடி மற்றும் சமூக ஊடகப் பிரிவின் பொறுப்பாளராக தாலிப் ஹுசைன் நியமிக்கப்பட்டார்.
தாலிப் ஹுசைன் ரஜெளரி மாவட்டத்தின் புத்தல் பகுதியில் வசிப்பவர். பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஊடகங்களில் சேருவதற்கு முன்பு, தாலிப் தச்சு வேலை செய்து வந்தார். அவருக்கு மேலும் மூன்று சகோதரர்கள் இருப்பதாகவும், வீட்டில் தாலிப்தான் மூத்தவர் என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
தாலிப் 2008இல் திருமணம் செய்து கொண்டார், அவர் கைது செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்புதான் அவரது மனைவி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார்.
2017ஆம் ஆண்டு பாஜகவில் தாலிப் இணைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த கட்சியில் சில பதவிகளை அவர் வகித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், J&K Police
பரஸ்பரம் குற்றம்சாட்டும் கட்சிகள்
ஜம்மு காஷ்மீரில் தாலிப் கைது விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
பாஜகவில் லஷ்கர் தீவிரவாதிகள் இருப்பதாக கூறப்படுவது குறித்து ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி பாஜகவிடம் பதில் கேட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவீந்திர சர்மா, கைது செய்யப்பட்ட லஷ்கர் கமாண்டர், பாஜக அலுவலகத்தின் மூத்த நிர்வாகி என்றும், அவரிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
தற்போது தாலிப் பிடிபட்டுள்ள நிலையில், அவர் கட்சியின் நிரந்தர உறுப்பினரே இல்லை என்று பாஜக வெட்கமின்றி கூறுகிறது என்றும் ரவீந்திர சர்மா சாடினார்.
பாஜகவின் சிறுபான்மை தகவல் தொழில்நுட்ப அணிக்கு தாலிப் உசேனை பொறுப்பாளர் ஆக்கியது யார் என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ரவீந்திர சர்மா வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், ANI
மேலும், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தாலிப் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தாலிப் ஹுசைன் பாஜகவில் இல்லை என்றால், அவரால் அமித்ஷாவின் கூட்டத்தில் எப்படி நுழைய முடிந்தது என்றும் ரவீந்தர் சர்மா கேள்வி எழுப்பினார்.
தாலிபுடன் தொடர்புடைய அனைத்து நபர்களையும் விசாரிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு கவலை அளிக்கும் விஷயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANI
பாஜகவின் பதில்
பாஜக செய்தித் தொடர்பாளர் அல்தாப் தாக்கூர் பிபிசியிடம் கூறுகையில், தாலிப் போன்றவர்கள், கட்சியின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையைப் பயன்படுத்திக் கொண்டு, கட்சியில் சேர்ந்து, 'கட்சி' என்ற போர்வையில் தீவிரவாதிகளாகச் செயல்படுகிறார்கள்.
"ஆன்லைன் உறுப்பினர் சேர்ப்பின்போது, அந்த நபரின் பின்னணியை சரிபார்க்க முடியவில்லை. பயங்கரவாதிகள் பாஜக தலைவர்களை குறிவைக்க எங்களுடைய ஆன்லைன் வழி உறுப்பினர் சேர்க்கை முறையை பயன்படுத்துகிறார்கள். இந்த நோக்கத்தில்தான் தாலிபும் வந்திருக்கிறார். தாலிப் பாஜக உறுப்பினராக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. இந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்து, ஆன்லைனில் உறுப்பினராக சேரும் நபர்களின் பின்புலத்தை இனி கட்சி சரிபார்க்கும்," என்று அல்தாப் தாக்கூர் தெரிவித்தார்.
தாலிப் பாஜகவில் சேருவதற்கு முன்பு ரஜெளரியில் உள்ள உள்ளூர் செய்தி இணையதளத்துக்காக பணிபுரிந்தார் என்றும் அல்தாப் தாக்கூர் கூறினார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












