மே தினம்: இந்தியாவில் பெண்கள் வேலைக்கு செல்வது குறைந்து வருவது ஏன்?

வேலைக்குச் செல்லும் பெண்கள் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருவது ஏன்?
    • எழுதியவர், ஷதாப் நஸ்மி
    • பதவி, பிபிசி காட்சி ஊடகவியல் குழு

முந்தைய ஆண்டுகளைப் போல் இல்லாமல், வேலை தேடும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் வெகுவாகக் குறைந்துள்ளது. இதுவொரு கவலையளிக்கக்கூடிய விஷயம்.

பணிச்சூழலில் இருந்து எத்தனை பெண்கள் வெளியேறியுள்ளனர்?

2017 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கு இடையில், சுமார் 2.1 கோடி பெண்கள் நிரந்தரமாக தங்கள் வேலையை விட்டுள்ளார்கள். அதாவது, அவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் அல்லது வேலை தேடாமலே இருக்கிறார்கள்.

மேலும், நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பில் பெரும் வீழ்ச்சி ஏற்படுவதில் இதன் பங்கும் உள்ளது. சி.எம்.ஐ.இ (CMIE) அறிக்கையின்படி, 2017-ஆம் ஆண்டில் 46% ஆக இருந்த விகிதம், 2022-ஆம் ஆண்டில் 40% ஆகக் குறைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் 6% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதைக் குறிக்கிறது.

இருப்பினும் இந்த புள்ளி விவரங்கள் ஒரு பெரிய ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. தரவுகள் குறிப்பிடுவதைப் போல், தொழிலாளர்களில் பெண்களின் பங்கு பல ஆண்டுகளாகவே குறைந்து வருகிறது. 2004-05 ஆம் ஆண்டில், இளம் (15 வயது முதல் 29 வயது வரை) கிராமப்புற பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) 42.8% ஆக இருந்தது. அதன்பிறகு, சரிவைச் சந்திக்கத் தொடங்கியதில், 2018-19 நிலவரப்படி, 15.8% ஆகக் குறைந்துள்ளது.

ஊதியம் பெறாதவர்கள் மற்றும் வேலை ல்லாதவர்கள்

இந்தியாவில் சம்பளமே இல்லாமல் பெண்கள் எத்தனை மணிநேரம் வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள் தெரியுமா?

இந்தியாவிலுள்ள பெண்கள் ஒவ்வோர் நாளும் சுமார் 4 மணிநேரம் குடும்ப உறுப்பினர்களுக்காக ஊதியமில்லாத சேவைகளைச் செய்கிறார்கள். குழந்தைகள், முதியோர்களைக் கவனித்துக் கொள்வது, சமைப்பது மற்றும் சுத்தம் செய்வது ஆகியவை இதில் அடங்கும். மேலும், அந்த வேலைகளின்போது அதிகபட்ச நேரம், குழந்தைகளைக் கவனிப்பதற்குச் செல்கிறது.

ஒப்பிடுகையில், புள்ளியியல் அமைச்சகத்தின் 2019-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, ஆண்கள் வெறும் 25 நிமிடங்களே ஊதியம் செலுத்தப்படாத வேலைகளைச் செய்கிறார்கள். ஆண்கள் தங்கள் நாளின் பெரும்பகுதியை வேலை மற்றும் அது தொடர்புடைய நடவடிக்கைகளிலேயே செலவிடுகிறார்கள்.

பெண்கள் வேலைக்குச் செல்லாமல் இருப்பதற்கான முக்கியக் காரணங்களில், குடும்பங்களுக்குள் கடுமையான ஈடுபாடு கொண்டிருப்பதும் ஒன்று. அதோடு, இந்த பெருந்தொற்றுப் பேரிடர், பெண்கள் பணிச்சூழலுக்குள், தொழிலாளர் தொகுப்பில் இணைவதற்கான வாய்ப்பை முற்றிலும் நிறுத்தியிருக்கலாம்.

காலமுறை தொழிலாலர் படை கணக்கெடுப்பின்படி (PLFS), 2018-19ஆம் ஆண்டில், இளம் நகர்ப்புற பெண்களிடையே வேலையின்மை விகிதம் 25.7% ஆக இருந்தது. இதே வயதுடைய ஆண்களுக்கு, வேலையின்மை விகிதம் 18.7% ஆக இருந்தது

சி.எம்.ஐ.இ-ன் சமீபத்திய புள்ளிவிவரங்கள் இன்னும் ஆபத்தான எச்சரிக்கையை வழங்குகின்றன. ஜனவரி-ஏப்ரல் 2016-இல் சுமார் 2.8 கோடி பெண்கள் வேலையின்றி, ஆனால் வேலை செய்யத் தயாராக இருந்தனர். டிசம்பர் 2021-இல் இந்த எண்ணிக்கை 80 லட்சமாகக் குறைந்தது.

கிராமப்புறங்களில், ஆண்களுடன் ஒப்பிடும்போது குறைவான பெண்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஆனால், இதை மட்டுமே நம்பிக்கையளிக்கும் விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது.

கிராமப்புறங்களில் ஆண்கள், பெண்கள் என இரு தரப்புக்குமே வேலையின்மை விகிதம் அதிகரித்து வருகிறது. நகர்ப்புறங்களில், வேலையின்மை விகிதம் பெண் தொழிலாளர்களிடையே மிகவும் சீராக உயர்ந்து வருகிறது.

பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் குறைந்து வருகிறது
படக்குறிப்பு, பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் குறைந்து வருகிறது

பணியிடத்திற்குச் செல்வது மற்றும் திரும்புவதிலுள்ள சிக்கல்

"என்னை அழைத்துச் செல்லவும் வீட்டிற்கு அழைத்து வரவும் கணவரோ தந்தையோ இல்லை. வாகனமோ பேருந்தோ இருக்கையில் அதில் செல்வோம். அது இல்லாதபோது, எப்ப்படிப் பயணிப்பது?" தெலங்கானாவைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் பாலம்மா கூறுகிறார். கோவிட்-19 தொற்றுப் பேரிடரின் போது முன்களப் பணியாளராக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

பீகார் மற்றும் தெலங்கானாவை மையமாகக் கொண்ட, அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தினுடைய ஓர் ஆய்வறிக்கையின்படி, பெரும்பாலான திருமணமான அங்கன்வாடி மற்றும் ஆஷா தொழிலாளர்கள் தங்கள் கணவர் அல்லது மாமனாரையே நம்பியிருந்தனர்.

நகர்ப்புற பெண்களில் பாதி பேர் ஊதியம் பெறும் தொழிலாளர்களாக உள்ளனர். ஆனால், அவர்களுக்கு இருக்கும் பல தடைகளில் முக்கியமான ஒன்றாக பணியிடத்திற்குச் செல்வது மற்றும் அங்கிருந்து திரும்புவது இருக்கிறது. சமூக பாதுகாப்பு பலன்கள் மற்றும் ஊதியத்திலுள்ள இடைவெளி ஆகியவை வெளியே சென்று பணியாற்றுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.

Instagram பதிவை கடந்து செல்ல
Instagram பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

Instagram பதிவின் முடிவு

குற்றங்களும் பெண்களும்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்களை வீட்டை விட்டு வெளியேறி வேலைக்குச் செல்வதைத் தடுக்கிறதா?

பெண்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றும் முயற்சிகளில் எது வேலை செய்கிறது (What Works to Advance Women and Girls in the Economy) என்ற முன்ன்னெடுப்பில் நடத்திய ஆய்வு, தொழிலாளர் படையில் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ள மாநிலங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமிருப்பதாக வாதிடுகிறது.

இந்திய ஆண்களும் பெண்களும் ஒரு நாளில் தங்கள் நேரத்தை எப்படி செலவழிக்கிறார்கள்?
படக்குறிப்பு, இந்திய ஆண்களும் பெண்களும் ஒரு நாளில் தங்கள் நேரத்தை எப்படி செலவழிக்கிறார்கள்?

2011 மற்றும் 2017ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட மாநிலங்கள் அளவிலான குற்றத் தரவுகளில் செய்த பகுப்பாய்வு, பீகார், டெல்லி போன்ற பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதையும் அதேநேரத்தில் அதன் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு குறைந்துள்ளதையும் காட்டியது.

உறுதியான சான்றுகள் இல்லையென்றாலும், இந்த ஆராய்ச்சி குற்றத்திற்கும் தொழிலாளர் படைக்கும் இடையே எதிர்மறையான தொடர்பை மட்டுமே வழங்குகிறது என்றாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அவர்கள் வேலைக்குச் செல்வதற்கு இருக்கும் பல்வேறு தடைகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. இது பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து வேலைக்குச் செல்வதற்கு தடையாக இருக்கக்கூடும்.

கிராமப்புறம்-நகர்ப்புறம் என்ற பாகுபாடு

2021ஆம் ஆண்டில் நகர்ப்புற இந்தியாவில் பெண்களின் சராசரி வேலைவாய்ப்பு 2020ஆம் ஆண்டில் இருந்ததை விட 6.9% குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. தொற்றுநோய் பேரிடருக்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது மோசமானது. 2021-ஆம் ஆண்டைவிட 2019-ஆம் ஆண்டில் 22.1% அதிகமான பெண்கள் பணியமர்த்தப்பட்டார்கள். இந்தப் போக்கு கிராமப்புற பெண்களுடன் ஒத்துப் போவதாகத் தெரியவில்லை. உண்மையில், 2021ஆம் ஆண்டில் கிராமப்புற பெண்களின் வேலைவாய்ப்பு 2019ஆம் ஆண்டில் இருந்ததை விட 0.1% குறைவாகவே இருந்தது.

இந்த புள்ளிவிவரங்கள் தொற்றுநோய் பேரிடருக்குப் பிறகு பணியிடத்தில் மீண்டும் சேர்வதில் நகர்ப்புற பெண்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கிறது.

2019ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் 95.2 லட்சம் பெண்கள் தீவிரமாக வேலை தேடினார்கள். இந்த எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டில் 83.2 லட்சமாகவும் 2021ஆம் ஆண்டில் 65.2 லட்சமாகவும் குறைந்துள்ளது. ஆண்களிடையே இது வேறுபடுகிறது. தீவிரமாக வேலை தேடும் ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது.

பெருந்தொற்றுப் பேரிடருக்குப் பிறகு, குறைவான பெண்களே வேலைக்குச் செல்வது மட்டுமின்றி அதைவிடக் குறைவான பெண்களே வேலை தேடுகிறார்கள்.

காணொளிக் குறிப்பு, மகளிர் தின பரிசு: ஒருநாள் காவல் நிலைய அதிகாரியான கல்லூரி மாணவி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: