பாஸா மீன்: உணவகங்களில் அதிகம் வழங்கப்படும் இதை சாப்பிட்டால் ஆபத்தா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பல்லா சதீஷ்
- பதவி, பிபிசி தெலுங்கு சேவை
இந்தியாவில் பாஸா மீன் (Basa Fish) தற்போது மிகவும் பிரபலமாகிவிட்டது. அது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதில்லை.
நீங்கள் ஒரு உணவகத்தில் எந்த மீனையும் ஆர்டர் செய்யலாம். அதன் தோற்றத்தையும், சுவையையும் பொருட்படுத்தாமல், நீங்கள் உட்கொள்வது பாஸாவாகத்தான் இருக்கும். வீதி ஒரம் உள்ள உணவகங்கள் தொடங்கி நட்சத்திர உணவகங்கள் வரை எந்த உணவகமும் இதற்கு விதிவிலக்கல்ல.
பாஸா மீன் என்றால் என்ன?
உணவகங்களில் மீன்களை சாப்பிடும் பெரும்பாலான இந்தியர்கள், அதன் நிஜ பெயர் அல்லது இனம் என்ன என்பது கூட அறியாமல் சுவைக்கும் ஒரு வகை மீன், பாஸா. இந்த வகை மீன் இந்தியாவுக்கு வந்த 10 ஆண்டுகளிலேயே இந்திய சந்தையை ஆக்கிரமித்து விட்டது. நாடுகளுக்கு இடையே மோதல்களை உருவாக்கியது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோபத்தை தூண்டிய மீனும் இதுவே.

பட மூலாதாரம், Getty Images
பாஸா என்பது ஒரு வகை கெளுத்தி மீன் (cat fish) பங்காசியஸ் போகோர்ட்டி (Pangasius Bocourti) என்பது இதன் அறிவியல் பெயர். இது வியட்நாம், தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் நன்னீரில் பிடிக்கப்பட்ட இந்த மீன், படிப்படியாக ஏற்றுமதிக்காக வளர்க்கப்படும் மீனாக மாறியது.
இது தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பங்காசியஸ் வகையில் பல மீன்கள் உள்ளன. இந்த மீன்கள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் விற்கப்படுகின்றன. ஸ்வாய், போகோர்ட்டி, ரிவர் கோப்லர், பங்காசியஸ், கேட்ஃபிஷ் போன்ற சில பெயர்களில் இந்த மீன்கள் விற்கப்படுகின்றன. இந்த வகையில், பாஸாவே மிகவும் பிரபலம்.
இதற்கு அதிக தசைகள் இருப்பதால், அதிக இறைச்சி இருக்கும். இது வேகமாகவும், மிக பெரியதாகவும் வளரும்.
முன்னணியில் இருக்கும் வியட்நாம்
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மீகாங் மற்றும் சாவ் பிரயா நதிகளில் பாஸா மீனை இயற்கையாக வளர்கின்றனர். இந்த ஆறுகள் பாயும் வியட்நாம், சீனா, கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இந்த மீன் அதிகம் கிடைக்கிறது.
ஆனால், இந்தியாவில் கிடைக்கும் மீன்கள் பிடிக்கப்பட்ட மீன்கள் அல்ல. அவை வளர்க்கப்படும் மீன்கள்.
இந்த மீனின் நன்மைகள் காரணமாக பிடிபட்ட மீன்களால் மட்டுமே அதிகரித்துவரும் ஏற்றுமதி தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால், இந்த மீன் வளர்ப்பு தொடங்கியது.

பட மூலாதாரம், Getty Images
கூண்டு வளர்ப்பு - இது ஆறுகளில் நங்கூரமிடப்பட்ட வலைகளுக்குள் மீன் வளர்ப்பது. இத்தகைய வளர்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது. இந்த மீன்கள் இயற்கையாகவே மிகவும் வேகமாக வளர்வதால், அதுவும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.
இது தற்போது மீகாங் ஆற்றின் டெல்டாவில் பரவலாக வளர்க்கப்படுகிறது. இந்த மீன் உலகம் முழுவதும், ஆண்டு முழுவதும் வளர்க்கப்படுவதால், அதன் மூலம் வருமானம் நன்றாக உள்ளது.
2020-21 ஆம் ஆண்டு முழுவதும் இந்தியா எதை ஏற்றுமதி செய்கிறதோ, வியட்நாமின் ஒரு மாத ஏற்றுமதியில் ஆறில் ஒரு பங்கு. வியட்நாமில் கடந்த 30-40 ஆண்டுகளில் பாஸா மீன்களின் வளர்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.
பெருகிவரும் இந்திய சந்தை
2007-08 ஆம் ஆண்டுகளில், இந்தியாவில் பாஸாவின் நுகர்வு அதிகரித்தது. ஃபோர்ப்ஸ் இதழின் அறிக்கையின்படி, இந்த மீனை இந்தியாவிற்கு முதல்முறையாக இறக்குமதி செய்தவர் யோகேஷ் குரோவர் என்ற வர்த்தகர்.
இந்த மீனின் சமைத்த இறைச்சி சமமாகவும், வெண்மையாகவும் இருக்கும். இந்த மீனுக்கு ஒரு முள் மட்டுமே உள்ளது. பொதுவாக, மீன் சாப்பிட விரும்பாதவர்களுக்கு ஒரு பெரிய பிரச்னையாக இருப்பது அதன் வாசனை. இந்த மீனில் அத்தகைய வாசனை அதிகம் இருக்காது. இரண்டாவது சிக்கல் மீனின் முள். இந்த மீன்னில் இந்த இரண்டு பிரச்னைகளும் இல்லை.
மிகப்பெரிய வணிகம்
இந்த மீனின் தேவைக்கு ஒரு பெரிய வணிகக் கொள்கை இருக்கிறது. "இது மிகவும் மலிவானது. இது வியட்நாமில் அதிகம் கிடைக்கிறது. இந்த மீன் உற்பத்தி லட்சக்கணக்கான டன்களில் உள்ளது. அதனால், அவர்கள் இதை குறைந்த விலையில் ஏற்றுமதி செய்யலாம்.
இது இந்தியாவில் வளர்க்கப்படும் அல்லது பிடிக்கப்படும் மீன்களுக்கு விற்கப்படும் விலையில், பாதியே வியட்நாமில் விற்கப்படுகிறது", என்று பிபிசியிடம் ஹைதராபாத்தில் உணவகம் நடத்தும் ரவி கூறுகிறார்.
உணவகங்கள் இந்த மீனை விரும்புவதற்கு இதுவே காரணம். அதனால், மீன்களுக்கு பெயரிடாமல் ஒரே மீனைப் பல்வேறு பெயர்களில் பரிமாறுகிறார்கள். எந்த சுவையாக இருந்தாலும், அது ஒரே மீன்தான்.
பதப்படுத்தப்பட்ட அல்லது பேக் செய்யப்பட்ட பாஸா மீன் இப்போது ரூ. 250-300 விலையில் கிடைக்கும். இது உணவகங்களுக்கு மேலும் குறைந்த விலையில் கிடைக்கும்.
இந்த மீனின் நன்மை விலையில் மட்டும் அல்ல. இது சமைப்பதற்கு சாதகமானது. "பொதுவாக, ஸ்டார்டர்கள், கிரில்ஸ் மற்றும் சில கறிகளுக்கு நல்ல இறைச்சியுடன் கூடிய மீன்கள் தேவைப்படும். இறைச்சி மற்றும் முள் இல்லாமல் இருந்தால் சமைப்பதற்கும், சாப்பிடுவதற்கும் எளிது. இதுவே பாஸா மீனின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம்." என்று ரிஸ்வான் பிபிசியிடம் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இவர் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள பல்வேறு உணவகங்களில் சமையல் கலைஞராக பணியாற்றியவர்.
பாரம்பரியமாக கிடைக்கும் மீன்கள், அதை கொண்டு சுத்தம் செய்து, செதில்களை அகற்றி, எலும்புகளை அகற்ற வேண்டும். ஆனால், பாஸா மீனை நீங்கள் பேக்கைத் திறந்து, சமையல் பாத்திரத்திற்கு மாற்றினால், உங்கள் சமையல் தயார். ஆனால், பாஸா அப்பல்லோ மீன் மற்றும் உணவகங்களில் மற்ற ஸ்டார்டர்களுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
பாஸா மீன் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?
"இந்தக் கேள்விக்கு யாரிடமும் தெளிவான பதில் இல்லை. கடந்த 15 ஆண்டுகளாக இந்தியர்கள் அதிகமாக உண்ணும் மீன்களின் பட்டியலில் பாஸா உள்ளது. இதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று சில அமைப்புகள் கூறுவதைத் தவிர அதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
பேக் செய்து வைத்த மீன்களை சாப்பிட விரும்பாதவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு பாஸா சாப்பிடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. உண்மையில், இன்றைய காலத்தில், நுகர்வோருக்கு அவர்கள் சாப்பிடுவது மட்டுமே தெரியும். அவர்கள் எந்த மீனை சாப்பிடுகிறார்கள் என்பதைக் கண்டறிவத்தில் அவர்களுக்கு ஆர்வமில்லை. அத்தகைய சூழ்நிலையில், பாஸா மீன் சாப்பிடுவதால் ஆபத்து இல்லை" என்றார் ரவி.
பாஸா சாப்பிடலாமா வேண்டாமா என்பது இணையத்திலும் விவாதப் பொருளாகவும் உள்ளது.
பாஸா இந்திய வகைகளை புறம் தள்ளூகிறது. இந்தியாவில் மட்டும் இல்லாமல், உலகம் முழுவதும் அது பிரபலமாகிவிட்டது.
மிக முக்கியமாக, இது பல நாடுகளில் உள்ள உள்ளூர் வகைகளை விட மலிவான விலையில் கிடைக்கிறது. அவற்றை சேமித்து வைக்கலாம். இதுவே மீன்களின் சந்தையில், பாஸாவை அதிகம் உட்கொள்ளும் மீனாக மாற்றுகிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












