காஷ்மீரில் பூத்துக் குலுங்கும் டூலிப் மலர்கள் - புகைப்பட தொகுப்பு

காஷ்மீரில், டூலிப் மலர்கள் தோட்டங்களில் பூத்துள்ளன. இந்தத் தோட்டம் கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் மிகப்பெரிய பரப்பளவில் அமைக்கபட்டுள்ள இந்த டூலிப் மலர்கள் தோட்டத்தை பார்வையிட பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

சுமார் 15 லட்சம் டூலிப் மலர்களை கொண்டுள்ள இந்த தோட்டம், ஆசிய கண்டத்திலேயே மிக பெரிய டூலிப் மலர்கள் தோட்டம் ஆகும்.

இந்தியாவிற்கு இந்த டூலிப் மலர்கள் வான் போக்குவரத்து மூலம் நெதர்லாந்து நாட்டில் இருந்து வரவழைக்கப்படுகின்றன.

இந்த தோட்டம் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியின் கரையின் அருகே அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜபர்வான் மலைகளின் அடிவாரத்தில் இந்த தோட்டம் 30 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இந்த டூலிப் மலர்கள் தோட்டம் மலர் வளர்ப்பு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக கடந்த 2007 இல் தொடங்கப்பட்டது

டூலிப் பூக்களைப் பார்க்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் காஷ்மீருக்கு வருகிறார்கள். மேலும், இந்த அழகான டூலிப் பூக்களை பார்த்துக்கொண்டே நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்டு மகிழலாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றால் காஷ்மீரில் உள்ள சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் பிரதான வருமானமாக சுற்றுலாத்துறை உள்ளது.

தற்போது கொரோனா நோய் பரவல் குறைந்ததை அடுத்து காஷ்மீரில் சுற்றுலாத்துறை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மேலும் டூலிப் பூக்கள் பூத்துக் குலுங்கும் சூழலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு சுற்றுலாத்துறை மீதான காஷ்மீர் மக்களின் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :