“இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயல்வதா?” – இந்தி குறித்த அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்வினை

ஹிந்தி குறித்த அமித் ஷாவின் கருத்துக்கான எதிர்வினை

பட மூலாதாரம், Getty Images

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்திற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்துப் பேசும்போது, "உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்," என வெளியிட்ட கருத்து சர்ச்சையாகியிருக்கிறது.

மேலும், "பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வாக மாற்றாத வரையில், அது பரப்பப்படாது. மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது.

வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

அமித் ஷா இந்தி மொழி குறித்து தெரிவித்த இந்தக் கருத்துக்கு தமிழ்நாட்டில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ட்விட்டரில் அரசியல் தலைவர்களும் பொது மக்களும் தங்கள் விமர்சனங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் இதுகுறித்து தங்கள் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ள கருத்துகளை இங்குப் பார்ப்போம்.

இந்நிலையில், நேற்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தனது விமர்சனங்களைத் தெரிவித்திருந்தார்.

அதில், "ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுவது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு வேட்டு வைக்கும் செயல். இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது.

இந்து மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித் ஷா நினைகிறாரா?

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது. ஒற்றைத் தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது.

ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால், அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்," என்று கூறியுள்ளார்.

மு.க. ஸ்டாலினின் இந்த கருத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட வரிகள் இடம்பெற்ற படத்தை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதன் ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

"இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது"

தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தனது ட்விட்டர் பக்கத்தில், "இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது. அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்த ட்விட்டர் பதிவில், "இந்தி மொழி தேவை என்கிறபட்சத்தில், அதைத் தாங்களாகவே மனமுவந்து கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் தாராளமாகக் கற்றுக் கொள்ளலாம் என்றும் அதேநேரத்தில் இந்தி திணிப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பேரறிஞர் அண்ணா கூறியுள்ளார்கள்.

நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று வரை இந்தியாவில் ஆங்கில மொழி இருக்கிறது என்றால் அதற்கு மூல காரணம் அண்ணா தான்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே அதிமுகவின் நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டு விட்டது," என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயல்வதா?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், "ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமித் ஷா கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

பலதரப்பட்ட மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாக விளங்கும் இந்தியா ஒன்றியத்தில், அம்மொழிகளுக்குரிய முக்கியத்துவத்தை சரிவிகிதத்தில் தராது, இந்தி என்னும் ஒற்றை மொழி ஆதிக்கத்திற்கு வழிவகுத்து, இந்தியாவின் தேசிய மொழியாக இந்தி என்னும் ஆரிய மொழியை நிறுவ முயலும் பாஜக அரசின் எதேச்சதிகாரச் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்கு உரியது.

ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தது முதல், பல்வேறு வடிவங்களில் மெல்ல மெல்ல இந்தியை திணித்திட முயல்வதும் இறந்த சமஸ்கிருத மொழிக்கு உயிரூட்ட வேலை செய்வதுமான பாஜக அரசின் போக்குகள், மண்ணின் மக்களுக்கு எதிரான ஆரிய முகத்தையே அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது," எனத் தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 5

பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தி மொழி பேச வேண்டும் என்ற அமித் ஷாவின் கருத்துக்கு தனது விமர்சனங்களைத் தெரிவித்த கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவின் ட்வீட்டுக்கு பதிலளிக்கையில், "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்பு கொள்ளும்போது, வேறு மொழியில் அல்லாமல் இந்திய மொழியில் தொடர்புகொள்ள வேண்டும்.

இந்தி நமது இந்திய மொழி என்பதால் தான் அவர் அதைக் குறிப்பிட்டுள்ளார்," என்று தெரிவித்துள்ளார்.

காணொளிக் குறிப்பு, ஒரு கிராம் மண்ணில் என்னென்ன இருக்கும்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: