தன்பாலின உறவு: பொய்யாகப் பழகி பணம் பிடுங்கும் கும்பல் பிடிபட்டது எப்படி?

தன்பாலின உறவு: பொய்யாகப் பழகி பணம் பிடுங்கும் கும்பல் பிடிபட்டது எப்படி?

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN

"எனக்கு பத்து வயதாக இருந்தபோது, என் ஆசிரியர் என்னிடம் பாலியல் ரீதியாக நடந்துகொண்டார். பின்னர் நான் கல்லூரியில் படிக்கும்போது, என்னுடைய சீனியர்கள் என்னை விடுதியில் பாலியல் துஷ்பிரயோக செய்தார்கள். அந்த அனுபவங்களை என்னால் மறக்க முடியவில்லை."

"கஷ்டபட்டு படித்து பேராசிரியர் ஆனேன். திருமணமாகி, குழந்தைகளைப் பெற்று, வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், பெண்களை விட ஆண்களிடம் தான் எனக்கு அதிக ஈர்ப்பு ஏற்பட்டது."

"பழகுவதற்காக, நான் இணையத்தில் புதிய நண்பர்களைத் தேட ஆரம்பித்தேன். இரண்டு இளைஞர்களுடன் தொடர்புகொண்டேன். நாங்கள் தன்பாலின உறவில் ஈடுபட்டோம். ஆனால், அவர்கள் என்னை மிரட்டத் தொடங்கினார்கள். என்னிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பிடுங்கினார்கள்."

தன்பாலின உறவுகளைக் கொண்டிருந்த 53 வயதான பேராசிரியர் சுபோத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), சொன்ன வார்த்தைகள் இவை. அவருக்கு வந்த மிரட்டல் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் சுபோத், பிபிசியிடம், "திருமணத்திற்கு முன்பு எனக்கு தன்பாலின உறவுகள் இருந்தன. ஆனால், பெற்றோரின் அழுத்தம் காரணமாக, திருமணம் செய்துகொண்டேன்," என்றார். திருமணத்தில் இருந்து அவருக்கு ஒரு பையன் பிறந்தான். ஆனால், காலப்போக்கில் அவர் தனது மனைவியின் மீதான ஆர்வத்தை இழந்து மீண்டும் தன்பாலினத்தவரைத் தேடத் தொடங்கினார்.

அவர் தனது மூன்று தன்பாலின உறவுகளை தனது கணவரை போலவே கருதினார். அவர்கள் மூவருடனும் உணர்ச்சி பூர்வமான பிணைப்பை உணர்ந்ததாகக் கூறுகிறார். அவர் தனது மனைவியுடன் ஒருபோதும் அனுபவிக்க முடியாத பிணைப்பை அனுபவித்தார்.

சுபோத்தின் கூற்றுப்படி, அவரோடு உறவில் இருந்த மூவருமே அகாதாபாத்திற்கு வெளியே ஒருவர் பின் ஒருவராக மாற்றப்பட்டனர். பிறகு அவர் மிகவும் தனியாக உணர்ந்தார். அவர் புதிதாக வேறொரு நண்பரைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாக, கொரோனா பெருந்தொற்று தொடங்கியது. இதற்கிடையில் அவருடைய பழைய பங்குதாரர் அவரை தன்பாலினத்தவர்களின் வாட்ஸ் அப் குழுவில் சேர்த்தார். இந்த செயலி மூலம் அகமதாபாத்தில் உள்ள மற்ற தன்பாலினத்தவர்களுடன் தொடர்பு கொண்டார்.

"நான் கிரைண்டர் மற்றும் ப்ளாட்டினம் ரோமியோ என்ற செயலியில் சேர்ந்தேன். அங்கு நீங்கள் தன்பாலினத்தவர்களின் படங்களையும் காணொளிகளையும் பார்க்கலாம். அந்தச் செயலியில் அதிகமான இளைஞர்கள் இருந்தனர். அதனால் நான் அவர்களை தொடர்பு கொண்டேன். என் வாழ்வில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப விரும்புவதால், அவர்களுக்கு நான் பண் கொடுத்து, தொடர்பில் இருந்தேன்.

இளைஞர்களுடன் உறவு கொள்வதை நான் ரசித்தேன். ஆனால், அவர்கள் என் பணத்தில் தான் அதிக ஆர்வம் காட்டினார்கள். என் உணர்வுகளைப் பற்றி கவலைப்படவில்லை."

"எங்கள் தன்பாலின உறவை படம் மற்றும் காணொளி எடுத்து என்னை மிரட்டத் தொடங்கினார்கள். இதை என் மனைவிக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வதற்காக, ஐந்து லட்சம் ரூபாயை நான் அவர்களிடம் பறிகொடுத்துள்ளேன். அவர்கள் மேன்மேலும் கேட்டுக்கொண்டேயிருக்க நான் கொடுக்க முடியாத நிலையில் இருந்தேன். அதிக பணம் கேட்டு அவர்கள் என்னை அடித்தார்கள்."

தன்பாலின உறவு: பொய்யாகப் பழகி பணம் பிடுங்கும் கும்பல் பிடிபட்டது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

பிரச்னை காவல்துறைக்குச் சென்றது

கடைசியில் துன்புறுத்தலைத் தடுக்க காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்ததாகவும் சுபோத் கூறுகிறார். இவர்கள் தன்னைப் போன்ற பலரை ப்ளாக்மெயில் செய்திருக்க வேண்டும் என்று சுபோத் நம்புகிறார்.

பிபிசியிடம் பேசிய போபால் காவல் நிலைய ஆய்வாளர் கூறும்போது, "கிரைண்டர் என்ற செயலி மூலம் பேராசிரியருக்கு தீபன் படேல் மற்றும் ஹர்ஷில் படேலுடன் தொடர்பு ஏற்பட்டது. தீபன் படேல் எஸ்.எஸ்.சி வரை மட்டுமே படித்து, தனியார் ஒளிப்படக் கலைஞராக பணிபுரிந்துள்ளார். ஹர்ஷில் படேல், படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார். இருவரும் கிரைண்டர் செயலி மூலம் பலரையும் கவர்ந்து மிரட்டும் ஆறு பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள்.

"பிப்ரவரி 10-ஆம் தேதியன்று, அவர்கள் பேராசிரியரை நிரண்யாநகர் பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்தார்கள். அங்கு ஏற்கெனவே மூவர் இருந்தனர்.

அவர்கள் பேராசிரியரை பணம் கேட்டு அடித்து உதைத்தார்கள். அவரிடமிருந்து கார் சாவி, கைபேசி ஆகியவற்றைப் பிடுங்கிக் கொண்டு 5 லட்சம் ரூபாயை அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துள்ளனர்."

"இதுபோன்ற வழக்குகளில் ப்ளாக்மெயில் செய்தாலும், அவமானம் வந்துவிடுமோ என்ற பயத்தில் யாரும் புகார் கொடுக்க வருவதில்லை. அதனால் தான் பிளாக்மெயில் வழக்குகள் அதிகரித்து வருகின்றன."

இதுகுறித்து நயன் ஷா கூறும்போது, "இரண்டு இளைஞர்கள் என்னிடம் இருந்து பணம், தங்கச் சங்கிலி, மோதிரம், கைபேசியைப் பறிக்க முயன்றனர். ஆனால், என்னைக் கொள்ளையடிப்பது தான் அவர்களுடைய நோக்கம் என்பதை உணர்ந்ததும், அவர்களைக் கல்லால் தாக்கினேன். அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். வாட்ஸ் அப்பில் நிறைய பேர், இதுபோன்ற குழுக்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளனர்.

ஏழைகளும் சுரண்டப்படுகிறார்கள்

கடந்த 32 ஆண்டுகளாக தன்பாலினத்தவர்கள் மற்றும் திருநங்கைகளுக்காக பணியாற்றி வரும் சுன்வால் என்ற அமைப்பின் தலைவர் சந்துபாய் படேல் பிபிசியிடம், "தன்பாலித்தவர்கள் இயல்பாக செயல்பாட்டோடு, செயலற்றவர்களாக என இரண்டு விதமாகவும் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைப் பருவத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள்."

தன்பாலின உறவு: பொய்யாகப் பழகி பணம் பிடுங்கும் கும்பல் பிடிபட்டது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

"நிதிநிலை சரியில்லாத சிலர் இருக்கிறார்கள். அதனால், அவர்கள் பணக்காரர்களின் ஆசைகளை நிறைவேற்றி பணம் சம்பாதிக்கிறார்கள்."

சில ஏழைகளும் இத்தகைய உறவுகளால் சுரண்டப்படுகிறார்கள் என்கிறார்.

சந்து படேலின் கூற்றுப்படி, ஏழைகள் மற்றும் வேலையில்லாதவர்கள் தன்பாலின உறவு சார்ந்த தொழிலில் சேர்ந்து பின்னர் சுரண்டப்படுவதும் நடக்கிறது. அவர்களுக்குப் போதுமான பணம் கொடுக்கப்படுவதில்லை. மாறாக, அவர்கள் தாக்கப்பட்டு, வேலையிலிருந்து நிக்கப்படுகிறார்கள்."

"சமூகத்தில் அவமானப்படுத்தப்பருவார்கள் என்ற அச்சத்தில் பாதிக்கப்படுபவர்கள் புகார் செய்வதில்லை. பொதுவாக தன்பாலினத்தவர்கள் ஒருவரையொருவர் மிரட்ட மாட்டார்கள். ஆனால், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இதுபோன்ற வழக்குகள் அதிகரித்து வருகின்றன.

'செயலிகள் தனியுரிமையை வழங்குகிறது. ஆனால், பிளாக்மெயில் செய்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.'

சுன்வால் அமைப்பில் பணிபுரியும் ராகேஷ் ரத்தோர் பிபிசியிடம், "தன்பாலினத்தவர்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் பிரச்னைகளுடன் எங்கள் நிறுவனத்திற்கு வருகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு பல வழிகளில் உதவுகிறோம். தன்பாலினத்தவர்கள் பாதுகாப்பான உடலுறவு குறித்து வழிகாட்டுகிறோம். மேலும் சமூக மற்றும் உளவியல் பிரச்னைகள் குறித்து அவர்களுக்கு உதவுகிறோம்.

தன்பாலினத்தவர்களுக்கு சுமார் 200 வாட்ஸ் அப் குழுக்கள் உள்ளன. முன்னதாக, இவர்கள் அத்தகைய வாட்ஸ் அப் குழுக்களைப் பயன்படுத்தினர். ஆனால், கொரோனா பெருந்தொற்றின் போது, தன்பாலினத்தவர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள பிளாட்டினம் ரோஇயோ மற்றும் கிரைண்டர் ஆகிய இரண்டு செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்."

இந்தச் செயலிகளில் அனைத்து விதமான மனிதர்களும் இருப்பதாக அவர் கூறுகிறார். செயலிகளின் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு, சந்திப்புகளை ஏற்பாடு செய்துகொள்கிறார்கள்.

தன்பாலின உறவு: பொய்யாகப் பழகி பணம் பிடுங்கும் கும்பல் பிடிபட்டது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

ராகேஷ் ரத்தோரின் கூற்றுப்படி, பயனரின் தனியுரிமையைப் பராமரிக்க செயலியில் ஒரு குறியீட்டு வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. பலர் செயலியை விரும்புகிறார்கள். ஏனெனில் வாட்ஸ்அப்பில் சிக்கிவிடுவோம் என்ற அச்சம் உள்ளது.

ஒரு நபர் செயலியில் நம்பகமானவராகக் கண்டறியப்பட்டு, பிளாக்மெயில் செய்யவில்லை அல்லது கொள்ளையடிக்க முயலவில்லை என்றால், அவர் 'சிஸ்ஸோ' என்று அழைக்கப்படுகிறார். இது, அவர் பாதுகாப்பாக இருப்பதைக் குறிக்கும் குறியீட்டு வார்த்தையாகும்.

ஒரு நபர் பிளாக்மெயில் செய்தால் அல்லது தன்பாலின உறவு வைத்துக்கொண்ட பிறகு பணம் செலுத்தாமல் இருப்பது, சண்டையிடுவது போன்றவற்றைச் செய்தால், அவர் 'கேட்டினோ' என்றழைக்கப்படுகிறார்.

ஒருமுறை ஒருவருடன் தன்பாலின உறவில் ஈடுபட்ட பிறகு, அவர் துன்புறுத்த முயன்றால், 'பிலோதர்' என்று அழைக்கப்படுகிறார். இந்த வார்த்தைகள் வாட்ஸ் அப் குழுக்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டன. எனவே, பிளாக்மெயில் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு."

"ஆனால் கொரோனா காலத்தில் இந்த செயலிகள் பரவலாகிவிட்டன. மேலும் அவருடன் யார் செல்கிறார்கள் என்பதை அறிய வழி இல்லை. எனவே இந்த செயலிகளிடையே ப்ளாக்மெயில் வழக்குகள் அதிகரித்தன.

களங்கத்திற்குப் பயந்து புகாரளிக்க மாட்டார்கள்

தன்பாலின உறவு மூலம் பணம் சம்பாதிக்கும் சில ஏழைகள் சுரண்டப்படுவதும் அதிகரித்துள்ளது. இவர்களுக்குக் குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. அவதூறுக்கு பயந்து காவல்துறையிலும் புகார் அளிப்பதில்லை.

குஜராத் காவல்துறையின் ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆணையர் தீபக் வியாஸ், பிபிசிக்கு அளித்த பேட்டியில், "தன்பாலின உறவுகளின் வணிகம் நீண்டகாலமாக நடந்து வருகிறது.

தன்பாலின உறவு: பொய்யாகப் பழகி பணம் பிடுங்கும் கும்பல் பிடிபட்டது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

"சில ஆண்டுகளுக்கு முன்பு, உச்ச நீதிமன்றம் தன்பாலின உறவுகள் சட்டவிரோத நடவடிக்கை என்பதை நீக்கி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்குப் பிறகு, நகரங்களில் தன்பாலின உறவுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், உயர் பதவியில் இருப்பவர்கள் அல்லது பணக்காரர்களுடன் தன்பாலின உறவில் ஈடுபடுவதன் மூலம் அவர்களை மிரட்டும் வழக்குகள் புதியதல்ல," என்கிறார்.

மேலும், "சமூகத்தின் களங்கத்திற்கு பயந்து, இதுபோன்ற வழக்குகளில் மக்கள் காவல்துறையில் புகார் அளிக்க மாட்டார்கள். இதுபோன்ற வழக்குகள் காவல்துறைக்கு வரும்போது, அவர்களின் அடையாளம் தனிப்பட்டதாக இருப்பதை உறுதிசெய்து, காவல்துறை அவர்களுக்கான ஆலோசனைகளையும் ஏற்பாடு செய்கிறது, ஏனெனில் அத்தகையவர்கள் மிக விரைவாக மனச்சோர்வடைவார்கள். "

"வயதானவர்கள் அதிக செயலற்ற ஓரினச் சேர்க்கையாளர்களாக இருப்பதையும், இளைய பையன்கள் பணத்தைப் பெறுவதற்காக சுறுசுறுப்பான ஓரினச் சேர்க்கையாளர்களாக வேலை செய்வதையும் நான் கவனித்திருக்கிறேன். ஒரு சந்தர்ப்பத்தில், அகமதாபாத்தில் 65 வயதான ஒருவர், 24 வயது இளைஞனை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும்படி பலமுறை கட்டாயப்படுத்தினார். முதியவரின் தொலைபேசி அழைப்பு மற்றும் வங்கிப் பரிவர்த்தனை விவரங்களின் அடிப்படையில் அந்த இளைஞனைக் கைது செய்தோம்.

"முதியவர் உடலுறவு கொள்ள இளைஞருக்கு பணம் கொடுத்து படங்களை எடுத்தார், பின்னர் அந்த முதியவர் அந்தப் படங்களைக் காட்டி மீண்டும் மீண்டும் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தினார்."

"முன்பு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான வாட்ஸ்அப் குரூப்கள் பிரபலமாக இருந்தன. வாட்ஸ்அப் அரட்டையின் அடிப்படையில் ஆட்களை கைது செய்தோம், ஆனால் பலர் புகார் அளிக்காமல் இருக்க விரும்பினர். ஆப்ஸ் மூலம் இப்போது தனிப்பட்ட உரையாடல்கள் எளிதில் கிடைக்காது. முன்பெல்லாம் முன் விரோதம் இருந்தால் வாட்ஸ்அப் குழுவில் உள்ள இரண்டு உறுப்பினர்களுக்கு இடையில், யாராவது தனிப்பட்ட முறையில் புகார் செய்வார்கள் மற்றும் அவர்கள் புகார் செய்யாவிட்டாலும், போலீசார் விஷயத்தை தீர்த்து வைப்பார்கள்.

காணொளிக் குறிப்பு, 'தினமும் 5 முறை செக்ஸ் வைத்துக் கொண்டாலும் போதவில்லை'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: