You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பட்ஜெட் 2022: ஒரு பட்ஜெட்டை புரிந்து கொள்ள உதவும் 5 வார்த்தைகள்
- எழுதியவர், மேதாவி அரோரா
- பதவி, பிபிசி நியூஸ்
2022-23 நிதியாண்டுக்கான இந்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022,பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார். இதில், கடந்த நிதியாண்டின் வரவு செலவுக் கணக்கு மற்றும் எதிர்வரும் நிதியாண்டுக்கான நிதிப்பங்கீட்டு விவரங்கள் ஆகியவை இடம்பெறும்.
ஆனால், பட்ஜெட் தாக்கலுக்கு முன், அது தொடர்பான சில சொல்லாடல்களைப் புரிந்துகொள்வது அவசியம். இது பட்ஜெட்டைப் புரிந்து கொள்வதற்கு கூடுதலாக உதவும்.
1. நிதிப் பற்றாக்குறை
குறிப்பிட்ட நிதியாண்டில், அரசின் மொத்த ஆண்டு வருமானத்தை விட, செலவு அதிகமாக இருந்தால், அப்படியான நிலைக்கு நிதிப் பற்றாக்குறை என்று பெயர்.
அதே சமயம், நாட்டின் கடன் தொகை இந்தக் கணக்கீட்டில் சேர்க்கப்படுவதில்லை.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களைக் கவரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதிலும் குறிப்பாகத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களைக் கவர, கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கும் என்றும் என்றும் வருமான வரி வரம்பும் மாற்றியமைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2. தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பு
ஒரு குறிப்பிட்ட தொகை வரைக்குமான ஊதியம் பெறும் தனி நபர்களுக்கு, வரி செலுத்த தேவையில்லை என்று ஒரு சலுகை அளிக்கப்படும். தற்கு தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு என்று பெயர்.
மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வகையில் தனிநபர் வருமான வரி வரம்பை அதிகரிக்க அரசு திட்டதிட்டமிட்டால், பட்ஜெட் தாக்கலின்போது அதனை அறிவிப்பர்.
3. நேரடி மற்றும் மறைமுக வரிகள்
நாட்டின் வருமானத்துக்கான முதன்மையான வழி வரிகள் தான். இது நேரடி வரி மற்றும் மறைமுக வரி என்று இருவகைப்படும்.
நேரடி வரிகள் என்பது நாட்டின் குடிமக்கள் நேரடியாக அரசாங்கத்திற்குச் செலுத்தும் வரிகள். இதில், தனி நபரின் வருமானத்துக்கு விதிக்கப்படும் வரியை வேறு யாருக்கும் மாற்ற முடியாது. நேரடி வரிகளில் வருமான வரி, சொத்து வரி மற்றும் கார்ப்பரேட் வரி ஆகியவை அடங்கும்.
மறைமுக வரிகள் என்பது ஒரு சேவை வழங்குநர் மற்றும் உற்பத்தியாளர் போன்ற மற்றொரு நபருக்கு வரிச் சுமையை மாற்றலாம், சேவை அல்லது உற்பத்திக்கு வரி விதிக்கலாம்.
மதிப்பு கூட்டப்பட்ட வரி, விற்பனை வரி, சேவை வரி, சொகுசு வரி போன்ற பல்வேறு வரிகளுக்குப் பதிலாக சரக்கு மற்றும் சேவை வரியான GST என்ற ஒரே வரி மறைமுக வரியின் உதாரணம்.
4. நிதியாண்டு
இந்தியாவில் நிதியாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதி ஆண்டுக்கானதாக இருக்கும், இது ஏப்ரல் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 வரை இருக்கும். பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, செலவினங்கள், வரவு, உள்ளிட்ட எல்லாமும் இந்தக் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு உட்பட்டவைதான்.
5. குறுகிய கால மற்றும் நீண்ட கால ஆதாயங்கள்
இது பங்குச்சந்தை தொடர்புடையது. தற்போது, ஒருவர் பங்குச்சந்தையில் ஓராண்டுக்கும் குறைவாக முதலீடு செய்து லாபம் ஈட்டினால், அது குறுகிய கால மூலதன ஆதாயம் எனப்படும். இதற்கு 15 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கும் மேலாகப் பங்குகளில் வைத்திருக்கும் பணம் நீண்ட கால மூலதன ஆதாயம் என்று அழைக்கப்படுகிறது.
ஈக்விட்டி பங்குகள் மற்றும் ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகளின் யூனிட்களின் விற்பனையின் மூலம் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான நீண்ட கால மூலதன ஆதாயங்கள் ஏப்ரல் 1, 2018 அன்று அல்லது அதற்குப் பிறகு செய்யப்படும் பரிமாற்றங்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும். இதற்கு முன்பு இந்த வரி விதிக்கப்படவில்லை.
நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கான காலக்கெடுவை அரசாங்கம் மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம், பங்குகளை நீண்ட காலம் வைத்திருக்க வேண்டியிருக்கும், இதனால் அவற்றின் மூலதன ஆதாயங்களுக்கு வரி விலக்கு கிடைக்கும்.
பிற செய்திகள்:
- கோவை சூயஸ் திட்டம்: தேர்தல் நேரத்தில் சூடுபிடிக்கும் எதிர்ப்புப் போராட்டம்; திமுக நிலை என்ன?
- இந்திய பட்ஜெட் -2022 தேர்தல் பட்ஜெட்டாக இருக்குமா? யாருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?
- இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.3.4 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய மக்கள்: 81 சதவீதம் அதிகரிப்பு
- யேமன் உள்நாட்டுப் போர்: பல நூறு குழந்தை போராளிகள் மரணம்
- நரேந்திர மோதிக்கு தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தால் இலங்கையில் அரசியல் சர்ச்சை
- ஆஸ்திரேலிய ஓபன்: ரஃபேல் நடால் 21 கிராண்ட்ஸ்லாம் வென்று உலக சாதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: