அமிர்தசரஸ் பொற்கோயிலில் அத்துமீறி நுழைந்த இளைஞர் உயிரிழப்பு - நடந்தது என்ன?

பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயிலில் சீக்கியர்களின் புனித நூல் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குள் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்த முயன்றார்; பின் அவர் கூட்டத்தினரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

சனிக்கிழமையன்று பஞ்சாபில் அமைந்துள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலில் வழிபாட்டை இடையூறு செய்ய இளைஞர் ஒருவர் முயற்சித்தார்.

பின் அங்கு குழுமியிருந்தவர்கள் உடனடியாக அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள், குறிப்பிட்ட அந்த நபர் மற்ற நபர்களுடன் வரிசையில் காத்திருந்ததாகவும், அவரின் முறை வரும்போது, சீக்கியர்கள் புனிதமாக கருதும் நூலுக்கு முன்னர் வைக்கப்பட்டிருந்த தங்க வாளை எடுக்க முயன்றார் என்று தெரிவித்தனர்.

உடனடியாக அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி பொற்கோவிலின் பாதுகாவலர்கள் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு கூட்டத்தினரால் குறிப்பிட்ட நபர் தாக்கப்பட்டார்.

சம்பவ இடத்திலிருந்து வெளிவந்த புகைப்படங்கள் ஒர் இளைஞர் சம்பவ இடத்தில் தரையில் இருப்பதை காண்பித்தன. ஆனால் இதுகுறித்து உறுதி செய்யப்படவில்லை.

அத்துமீறிய இளைஞர் அடித்து கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

அந்த இளைஞரிடம் எந்த அடையாள அட்டையும் கிடைக்கவில்லை.

"இன்று 24 - 25 வயது மதிப்புமிக்க இளைஞர் ஒருவர் சீக்கியர்களின் புனித நூலான குரு கிராந்த் சாஹிப்பை வாளால் சேதப்படுத்த முயன்றார்; அவர் பக்தர்களால் வெளியே கொண்டு செல்லப்பட்டார். பின் கூட்டத்தினரால் தாக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். இளைஞரின் உடல் சிவில் மருத்துமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது." என அமிர்தசரஸ் டிசிபி பர்விந்தர் சிங் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: