கல்யாண் சிங் உடல் மீது போர்த்திய தேசிய கொடிக்கு மேல் பாஜக கொடி - புதிய சர்ச்சை

பட மூலாதாரம், @myogiadityanath
மறைந்த உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த இந்திய தேசிய கொடி மீது பாரதிய ஜனதா கட்சியின் காவி நிறக் கொடி வைக்கப்பட்ட நிகழ்வால் பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அதுவும் பாஜகவின் காவி நிற கொடி போர்த்தப்பட்டபோது கல்யாண் சிங் உடலுக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மரியாதை செலுத்திய படங்கள் இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளன.
லக்னெள மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை கல்யாண் சிங் காலமானார். அவருக்கு வயது 89. இதையடுத்து லக்னெளவில் உள்ள அவரது இல்லத்தில் உடல் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் கல்யாண் சிங் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் மற்றும் மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில் கல்யாண் சிங்கின் இறுதி நிகழ்சவை உடல் முழு அரசு மரியாதையுடன் நடத்த உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இந்த நிலையில், அவரது உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய மூவர்ண கொடிக்கு மேல் பாரதிய ஜனதா கட்சியின் கொடி வைக்கப்பட்டிருந்தது. அது தேசிய கொடியில் இடம்பெற்ற சக்கரத்தின் பாதி பகுதிவரை மறைத்திருந்தது.
இந்திய தேசிய கொடி மரியாதை தொடர்புடைய தேசிய கெளரவத்துக்கு இழிவு ஏற்படுவதை தடுக்கும் சட்டத்தின் 3.16 பிரிவின்படி நாட்டின் தேசிய கொடிக்கு மேல் எந்தவொரு பொருளோ சின்னமோ இடம்பெற்றிருக்கக் கூடாது. கொடி மீது மலர்களோ பூங்கொத்தோ கூட வைக்கப்படக்கூடாது. அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்க விடப்படும்போது அதன் மேல் எந்த கொடியும் பறக்க விடப்படக் கூடாது.
இந்த சட்டப்பிரிவு அடங்கிய மத்திய உள்துறை அமைச்சக இணையதள பக்கத்தின் விவரங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த சில நெட்டிசன்கள், அதனுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் கல்யாண் சிங்குக்கு அஞ்சலி செலுத்தபோது தேசிய கொடி மீது போர்த்தப்பட்ட பாஜக கொடி இடம்பெற்ற படங்களையும் பகிர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இந்த செயல்பாடு தேசிய கொடிக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு என்று தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
தேசிய கீதம் பாடப்பட்டபோது எனது கையை இதயத்தில் வைத்துக் கொண்டு நின்ற குற்றச்சாட்டுக்காக நான்கு ஆண்டுகளாக நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்கியவன் நான். தேசிய கொடி பற்றி இங்கு ஆளும் கட்சி எப்படி நினைக்கிறது என்பது பற்றி இந்த நாட்டுக்கு சொல்ல வேண்டும் என நான் நினைக்கிறேன் என்று சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
உத்தர பிரதேசத்தின் முக்கிய எதிர் கட்சியான சமாஜ்வாதி கட்சியின் செய்தித்தொடர்பாளர் கன்ஷியாம் திவாரி, "தேசத்துக்கு மேல் உள்ள கட்சி இது. தேசிய கொடிக்கு மேலே கட்சிக் கொடி. பாஜக எப்போதும் போலவே இருக்கிறது. செய்த செயலுக்கு வருத்தமோ கவலையோ படாத கட்சி அது," என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
இந்திய அரசின் முன்னாள் செயலாளர் மற்றும் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சமூக விவகாரங்களில் வெளிப்படையாக குரல் கொடுத்து வருபவருமாக அறியப்படும் அனில் ஸ்வரூப், "கல்யாண் சிங்கை பற்றி நான் அறிந்த வரையில், அவர் இந்த செயலை ஏற்றிருக்க மாட்டார். யாரோ இங்கு தவறு செய்து விட்டனர். மற்றவர்கள் அது தொடர அனுமதித்துள்ளனர்," என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
அரசியல் செயல்பாட்டாளரான ஹன்ஸ்ராஜ் மீனா, "தேசிய கொடியை அவமதிக்கும் வகையிலான இந்த செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதற்காக பாரதிய ஜனதா கட்சியியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பை இந்திய மக்கள் கோர வேண்டும். இந்த விவகாரத்தை பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்," என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
மற்றொரு சமூக செயல்பாட்டாளரான சராயு பானி, தேசத்தை விட கட்சியே பெரிது என்றும் தேச நல்லிணக்கத்தை விட கட்சி சித்தாந்தமே பெரியது என கருதியவரும் பாபர் மசூதி இடிப்பை கண்காணித்தவருமான கல்யாண் சிங்குக்கு அவரது சிந்தனைப்படியே கட்சிக் கொடியை எல்லாவற்றுக்கும் மேலாக போர்த்தியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
1992ஆம் ஆண்டு, உத்தர பிரதேச மாநிலத்தில் கல்யாண் சிங் முதல்வராக இருந்த காலகட்டத்தில்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, கல்யாண் சிங், உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி, வினய் கட்டியார், சாக்ஷி மகாராஜ் உள்பட 32 பேர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லக்னெள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். அந்த வழக்கில் சாட்சியம் அளித்த 351 பேரும் முரண்பட்ட வாக்குமூலம் அளித்ததாகவும், குற்றவியல் நடைமுறை சட்ட விதிகளை சரியாக இந்திய புலனாய்வுத்துறை பின்பற்றவில்லை என்றும் கூறி சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது.
பிற செய்திகள்:
- ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி தப்புவதற்கு அமீரகத்தை தேர்வு செய்தது ஏன்? தாலிபன்கள் விட்டுவிடுவார்களா?
- பாஜகவின் 'அருந்ததியர்' அரசியல்: கொங்கு மண்டல கணக்கால் திமுக, அதிமுக அதிர்ச்சியா?
- மனம் பதற்றமாகி இதயத்துடிப்பு அதிகரிக்கும்போது என்ன செய்ய வேண்டும்? - நிபுணரின் விளக்கம்
- சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சிறுவனுக்கு மாரடைப்பு: ரூ.1.25 கோடி நிதியுதவி
- தடுப்பூசி போட்டுக் கொள்வதைவிட கொரோனா வருவதே நல்லதா? முக்கிய கேள்விகள், ஆழமான பதில்கள்
- உங்கள் பணத்தை எந்தெந்த வழிகளில் சேமிக்கலாம் - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் ஆலோசனை
- அலைபேசி ஆபத்து: சமூக ஊடகங்களுக்கு அடிமை ஆனவர்கள் மீள்வது எப்படி?
- இன்கா நாகரிகம்: ஆன்மிகம், ஆவியுலகம், நம்பிக்கை துரோகத்தை அனுபவித்த வரலாறு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்