கொரோனா இரண்டாம் அலை: தந்தையின் உயிர் காக்க போராடிய ஒரு குடும்பத்தின் உருக்கமான கதை

அனூப் சக்சேனா
    • எழுதியவர், விகாஸ் பாண்டே
    • பதவி, பிபிசி

ஏப்ரல் மாத இறுதியில் கோவிட் தொற்றுக்கு ஆளான பலரில் இந்தியாவை சேர்ந்த 59 வயதான அனூப் சக்சேனாவும் ஒருவர்.

நகரில் பலரைப் போலவே, வட இந்தியாவில் காசியாபாத் நகரத்தைச் சேர்ந்த இந்தத் தந்தை தீவிரத் தொற்றால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால் இந்தியாவின் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து, படுக்கைகளுக்கும் ஆக்சிஜனுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது மே மாத தொடக்கத்தில்தான். ஆனாலும் இந்நகர் அமைந்திருக்கும் உத்தர பிரதேச மாநில நிர்வாக அதிகாரிகள், இந்தப் பற்றாக்குறையைத் தொடர்ந்து மறுத்து வந்துள்ளனர்.

அடுத்த சில நாட்களில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் உதவி கேட்டு இந்தியா முழுவதும் தவித்தன.

இங்கே, சக்சேனா குடும்பத்தின் போராட்டத்தை நாங்கள் உங்கள் முன் வைக்கிறோம்.

தந்தைக்கு கொரோனா: உயிர் காக்க போராடிய குடும்பத்தின் உருக்கமான கதை
தந்தைக்கு கொரோனா: உயிர் காக்க போராடிய குடும்பத்தின் உருக்கமான கதை

பட மூலாதாரம், Getty Images

பரிசோதனைக்கு வசதியில்லை

ஏப்ரல் 29 ஆம் தேதி அனூப்பிற்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டு அதனால் மருத்துவர் அவரை கோவிட் -19 பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்துகிறார். வீட்டில் வந்து மாதிரி சேகரிக்க முன்பதிவு செய்கின்றனர் குடும்பத்தினர். ஆனால் ஆய்வகங்கள் போதுமான ஆட்கள் இல்லாததால் சேவையை மறுக்கின்றன.

குடும்பத்தினர் அவரை ஒரு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். மிக நீண்ட வரிசை இருக்கிறது. எப்படியாவது முன்னுக்குச் செல்லலாம் என்று அனூப்பின் மகன் துஷார் விரும்புகிறார். ஆனால் அவர்களுக்கு முன்னால் உள்ள அனைவரும் மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள்.

தந்தைக்கு கொரோனா: உயிர் காக்க போராடிய குடும்பத்தின் உருக்கமான கதை

காலை 10 மணி: மூச்சுவிடுவதில் சிரமம்

தந்தைக்கு கொரோனா: உயிர் காக்க போராடிய குடும்பத்தின் உருக்கமான கதை

இரண்டு மணி நேரம் கழித்து, வரிசையிலேயே அனூப் மயக்கம் அடைந்ததும், அவரை வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்கிறார்கள்.

அனூப் சனிக்கிழமை காலை எழுந்து தனது குடும்பத்தினரிடம் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகக் கூறுகிறார். நோயாளிகளுக்கு மருந்தை எளிதாகச் செலுத்தி சுவாசப்பாதையைச் சீராக்க உதவும் சாதனமான நெபுலைசரைப் பயன்படுத்தினர் குடும்பத்தினர்.

Banner image reading 'more about coronavirus'
Banner

இது தற்காலிக நிவாரணம் தருகிறது. ஆனால் இவருடைய ஆக்சிஜன் அளவுகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. காலை 10 மணிக்கு, அனூப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்துகிறார். குடும்பத்தினர், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் கிடைக்கவில்லை, அவர்களிடம் கார் இல்லை. அண்டை மாவட்டமான ஹாப்பூரில் வசிக்கும் ஒரு உறவினரிடம், அவரது காரை காசியாபாத்துக்கு கொண்டு வரும்படி கேட்கிறார்கள் - இது 27 கி.மீ (17 மைல்) பயணம்.

அந்த உறவினர் மதியம் 2 மணிக்கு ஆகாஷ் நகரில் உள்ள அனூப்பின் வீட்டிற்கு வருகிறார், ஆனால் மருத்துவமனையில் படுக்கை கிடைப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. மாலை 4 மணி ஆகிறது. அவரை குருத்வாரா (சீக்கிய கோயில்) ஸ்ரீ குரு சிங் சபாவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார்கள், அங்கு அவருக்கு ஒரு சிலிண்டரில் இருந்து ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. தவிக்கும் குடும்பங்களுக்கு இலவச சேவையை நடத்திய கோவிலுக்குக் குடும்பம் நன்றி தெரிவிக்கிறது.

தந்தைக்கு கொரோனா: உயிர் காக்க போராடிய குடும்பத்தின் உருக்கமான கதை

மாலை 7:30 மணி: மருத்துவமனை படுகைக்கான தேடல் துவக்கம்

தந்தைக்கு கொரோனா: உயிர் காக்க போராடிய குடும்பத்தின் உருக்கமான கதை

குருத்வாராவில் அவரது ஆக்ஸிஜன் அளவு சீரானது. ஆனால் அங்குள்ளவர்கள், அவரை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள், ஏனெனில் அவரை காலவரையின்றி அங்கே வைத்திருக்க முடியாது. துஷார் தனது தந்தையை கோவிலிலேயே வைத்திருக்குமாறு அவர்களிடம் கெஞ்சுகிறார், ஆனால் அவர் மனதளவில் மருத்துவமனை சிகிச்சை தேவை என்பதை உணர்கிறார்.

குடும்பத்தினர் அவரை அரசு நடத்தும் எம்.எம்.ஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். ஒரு மணிநேரம் கழிந்த பிறகு, படுக்கை கிடைப்பது எளிதானதன்று என்பதைப் புரிந்து கொள்கிறார்கள்.

8:00 மணி: ஆக்சிஜனுக்கான தேடல்

தந்தைக்கு கொரோனா: உயிர் காக்க போராடிய குடும்பத்தின் உருக்கமான கதை

இரவு 8 மணி ஆகிறது, குடும்பத்தினர் இன்னும் மருத்துவமனையில் தான் இருக்கிறார்கள். துஷார் வீட்டில் இருக்கும் தனது சகோதரரை அழைத்து, ஒரு சிலிண்டருக்காக லால் குவான் பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் ஆலைக்குச் செல்லச் சொல்கிறார்.

அவரது சகோதரர் ஆலையின் வாசலில் ஒரு நீண்ட வரிசையில் நிற்கிறார். அவரது முறைக்கு காத்திருக்க முடிவு செய்கிறார். துஷார் ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் ஒரு முறை தனது சகோதரரை அழைக்கிறார். ஆக்ஸிஜன் சிலிண்டரோ மருத்துவமனைப் படுக்கையோ கிடைக்காவிட்டால், இரவு உயிர் பிழைப்பது கடினம் என்று உணர்கிறார்.

இரவு 8:30 மணி: மருத்துவமனை தேடும் முயற்சியை கைவிடல்

தந்தைக்கு கொரோனா: உயிர் காக்க போராடிய குடும்பத்தின் உருக்கமான கதை

துஷார் தனது தந்தையை வீட்டிற்கு அழைத்து வருகிறார். அனூப் சுவாசிக்க உதவக் கூடிய 25 சிறிய ஆக்ஸிஜன் கேன்களை வாங்க அவர் வெளியே செல்கிறார். இந்த கேன்கள் அவருக்கு சிறிய அளவிலான ஆக்ஸிஜனை சீரான இடைவெளியில் தருகின்றன, ஆனால் தொடர்ச்சியான விநியோகத்தை வழங்க முடியாது. ஒவ்வொரு கேனும் 2,500 ரூபாய் [அதாவது 34 டாலர்கள் அல்லது 24 பவுண்டுகள்]. வழக்கமாக இவற்றின் விலை 1,000 ரூபாய்க்கும் குறைவானது. சாக்சேனா குடும்பம் போன்ற நடுத்தரக் குடும்பத்திற்கு இது ஒரு பெரிய தொகை, ஆனால் அவர்களுக்கு வேறு வழியில்லை.

துஷார் தனது தந்தையை இந்தக் கேன்களின் உதவியுடன் சிறிது நேரம் சுவாசிக்க வைக்க முயற்சிக்கிறார், அதே நேரத்தில் தனது சகோதரர் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் திரும்புவார் என்று காத்திருக்கிறார்.

அதிகாலை 1 மணியளவில், அவரது சகோதரர் சிலிண்டர் இல்லாமல் திரும்பி வருகிறார், ஏனெனில் அவரது முறை வருவதற்கு முன்பே ஆலை மூடப்பட்டது. அவர்கள் தொடர்ந்து கேன்களைப் பயன்படுத்துகிறார்கள். அனூப் மெதுவாக சீரான நிலைக்கு வருகிறார்.

தந்தைக்கு கொரோனா: உயிர் காக்க போராடிய குடும்பத்தின் உருக்கமான கதை

காலை 10 மணி: படுகைக்கான தேடல் துவக்கம்

தந்தைக்கு கொரோனா: உயிர் காக்க போராடிய குடும்பத்தின் உருக்கமான கதை

அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று மருத்துவர் மீண்டும் அறிவுறுத்துகிறார். குடும்பத்தினர் அவரை கார்கி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள், இது அவர்களின் வீட்டிலிருந்து மிக அருகில் உள்ளது.

தந்தைக்கு கொரோனா: உயிர் காக்க போராடிய குடும்பத்தின் உருக்கமான கதை

அங்கு படுக்கைகள் இல்லாததால் வேறொரு மருத்துவமனைக்குச் செல்லுமாறு ஒரு ஊழியர் கூறுகிறார்.

குடும்பத்தினர் அவரை சர்வோத்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள், ஆனால் அங்கும் படுக்கைகள் இல்லை. இதற்கிடையில், அனூப் சுவாசிக்க சிரமப்பட்டு வீட்டிற்குச் செல்ல விரும்புகிறார். ஆனால் குடும்பத்தினர் முயற்சியைக் கைவிடவில்லை.

தந்தைக்கு கொரோனா: உயிர் காக்க போராடிய குடும்பத்தின் உருக்கமான கதை

12:05 மணிக்கு அவர்கள் சந்தோஷ் மருத்துவமனையில் உள்ளனர். காலையிலிருந்து அவர்கள் சென்ற மூன்றாவது மருத்துவமனை இது. அவர்கள் மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்குமாறு கூறப்படுகிறார்கள். மருத்துவமனை வாயில்கள் பாதுகாப்புக் காவலர்களால் சூழப்பட்டுள்ளன. அவர்களுக்குச் சிறைக்கு வெளியே இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது.

அவர்கள் 10 நிமிடங்கள் காத்திருந்து மற்றொரு மருத்துவமனைக்குச் செல்ல முடிவு செய்கிறார்கள்.

தனது தந்தை எந்த மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை விடப்போகிறார் என்று துஷார் சிந்திக்கத் தொடங்கி விட்டார். ஆனால் அவரது தாயார் அழைத்த போது, படுக்கை கிடைத்து விட்டதாகவும் விரைவில் எல்லாம் சரியாகிவிடும் என்றும் உறுதியளிக்கிறார்.

தந்தைக்கு கொரோனா: உயிர் காக்க போராடிய குடும்பத்தின் உருக்கமான கதை

அவர்கள் மதியம் 12:30 மணிக்கு நான்காவது மருத்துவமனைக்கு வருகிறார்கள். யாராவது குணமாகி வீடு திரும்பினாலோ அல்லது யாராவது உயிரிழந்தாலோ தான் படுக்கை கிடைக்கும் என்று காவலாளி கூறுகிறார். தனது தந்தைக்குப் படுக்கை கிடைப்பது வேறொருவரின் மரணத்தை நம்பியிருப்பதை துஷாரால் தாங்க முடியவில்லை.

இதற்கிடையில், சிறிய ஆக்ஸிஜன் கேன்கள் இனி உதவாது போக, அனூப் மீண்டும் சுவாசிக்கச் சிரமப்படுகிறார்.

மதியம் 2 மணி: நிவாரணம் தந்த குருத்வாரா

தந்தைக்கு கொரோனா: உயிர் காக்க போராடிய குடும்பத்தின் உருக்கமான கதை

அனூப்பின் நிலை மேலும் மோசமடைந்து வருகிறது. இனியும் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று முடிவு செய்து அவரை மீண்டும் குருத்வாராவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்கின்றனர் குடும்பத்தினர். இதுவரை உதவி வழங்கிய ஒரே இடம் அது தான். அங்கு ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் இணைக்கப்பட்ட பிறகு அவரது ஆக்ஸிஜன் அளவு மேம்படத் தொடங்குகிறது.

மதியம் 3 மணி: ஆக்சிஜனுக்கான தேடல் தொடர்கிறது

தந்தைக்கு கொரோனா: உயிர் காக்க போராடிய குடும்பத்தின் உருக்கமான கதை

துஷார் தனது தந்தையை ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, உள்ளூரில் ஒரு சிலிண்டர் வாங்கச் செல்லுமாறு தனது சகோதரரிடம் கேட்டார், ஆனால் அங்கும் வரிசைகள் மிக நீளமாக உள்ளன.

அருகிலுள்ள மாவட்டமான புலந்த்ஷாரில் உள்ள ஒரு ஆலை ஆக்ஸிஜன் சிலிண்டரை விற்பனை செய்து கொண்டிருந்தது என்று ஒருவர் கூறுகிறார். அது ஒரு மணி நேரப் பயணம். ஆனால் துஷரின் சகோதரர் அங்கு செல்வதற்குள் அதுவும் மூடப்பட்டது.

துஷரின் சகோதரர் மீண்டும் காஜியாபாத்துக்கு வந்து ஒரு சிறிய ஐந்து லிட்டர் சிலிண்டரை கறுப்புச் சந்தையில் வாங்குகிறார்.

மாலை 5:30 மணி: கடைசி ஓட்டம்

தந்தைக்கு கொரோனா: உயிர் காக்க போராடிய குடும்பத்தின் உருக்கமான கதை

தேடல் தொடங்கிய எட்டு மணி நேரமாக, அனூப் இன்னும் குருத்வாராவில் தான் இருக்கிறார். இதற்கிடையில், 120 கிலோமீட்டர் (75 மைல்) தொலைவில் உள்ள அலிகார் நகரில் வசிக்கும் அவரது மகள், ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு படுக்கையைக் கண்டுபிடித்து, அவரை அங்கு அழைத்து வரும்படி குடும்பத்தினரிடம் கூறுகிறார்.

மாலை 6 மணியளவில் சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டருடன் அனூப் இணைக்கப்பட்டு, இரவு 8:30 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து, அவர் உடனடியாக தீவிர சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்படுகிறார். அங்குள்ள மருத்துவர் அனூப் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் கூறுகிறார்.

தந்தைக்கு கொரோனா: உயிர் காக்க போராடிய குடும்பத்தின் உருக்கமான கதை

காலை 4:00 மணி: தோல்வியடைகிறது முயற்சி

ஒரு எட்டு மணிநேரக் காத்திருப்புக்குப் பிறகு, ஒரு அதிசயத்திற்காகக் காத்திருக்கும் சமயத்தில், மருத்துவர் அனூப்பின் நிலை மோசமடைந்து வருவதாகக் கூறுகிறார். தான் இன்னும் தீவிரமாக முயன்றிருக்க வேண்டுமோ என்று துஷார் தவிக்கிறார்.

ஆறு மணி நேரம் கழித்து, காலை 10 மணிக்கு, மருத்துவர் குடும்பத்தினரிடம் இறுதி விடைபெறத் தயாராகும் படி சொல்கிறார். ஒரு மணி நேரம் கழித்து, காலை 11 மணிக்கு அனூப் இறந்து விடுகிறார்.

தண்ணீருக்கு வெளியே விடப்பட்ட ஒரு மீனைப் போல மூச்சுத் திணறும் பெற்றோர் போராட்டத்தைப் பார்க்கும் நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது என்று துஷார் நினைக்கிறார். தன் தந்தையின் உயிரைப்பலி வாங்கியது கோவிட் அல்ல, இந்த அமைப்பு முறை தான் என்று உணர்கிறார்.

ஆனால் அனூப்பின் மனைவியின் நிலை மோசமடையத் தொடங்கியதால் குடும்பத்தினருக்குத் துக்கம் அனுசரிக்கக் கூட நேரம் கிடைக்கவில்லை. அவர்கள் காசியாபாத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு விரைகிறார்கள்.

வரைபடங்கள்: பால் சார்ஜென்ட், லில்லி ஹுய்ன், ஜெர்ரி பிளெட்சர் மற்றும் ஜாய் ரோக்சாஸ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :