கொரோனா இரண்டாம் அலை: கிராமப்புறங்களில் வேகமாக பரவி வருகிறது – விளக்கும் தரவுகள்

கொரோனா பரிசோதனை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விஜ்தான் முகமத் கவூசா
    • பதவி, தரவுகள் ஆய்வு செய்தியாளர்

கொரோனா தொற்று தற்போது இந்தியாவின் கிராமப்புறங்களில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பெரு நகரங்களை காட்டிலும் சுகாதார வசதிகள் குறைவாக இருக்கக்கூடிய கிராமப் பகுதிகளில் சமீப நாட்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் இரண்டாம் அலை பரவ தொடங்குவதற்கு முன் பிப்ரவரி முதல் வாரங்களில் புதியதாக வெறும் 10 ஆயிரம் பேர்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் சூழலில் இந்தியத் தலைநகரம் டெல்லி உட்பட பல நகரங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பல மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. ஆக்சிஜன் இல்லை. சில இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் அதிகரிக்கும் தொற்று

700க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஏற்படும் புதிய தொற்று குறித்து தரவுகளை திரட்டி வரும் `அவ் இந்தியா லிவ்ஸ்` என்ற அமைப்பின் தகவலை கொண்டு பிபிசி மானிடரிங் குழு செய்த ஆய்வுபடி, கிராமப் பகுதிகளில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவது தெரிகிறது.

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புபடி, இந்த மாவட்டங்களின் கிராமப்புற மக்கள் தொகை விகிதத்தின் அடிப்படையில் மாவட்டங்கள் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

கிராமப்புறத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கையை கொண்டு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன

தரவு

கணக்கெடுப்புக்கு பிறகு பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் எந்த மாவட்டங்களிலிருந்து பிரிக்கப்பட்டதோ அந்த மாநிலத்தின் கிராமப்புற மக்கள் தொகையின் எண்ணிக்கைய கொண்டுள்ளதாக கருதப்பட்டது. தலைநகர் டெல்லி சிங்கிள் யூனிட்டாக இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் ஒன்பதாவது வாரத்தில் அதாவது இரண்டாம் அலை பரவத் தொடங்கிய சமயத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக கிராமப்புறங்களில் மக்கள் வாழும் மாவட்டங்களில் 38 சதவீத அளவில் புதிய தொற்றுகள் ஏற்பட்டன. அது 17ஆவது வாரத்தில் 48 சதவீதமாக அதிகரித்தது. இதே காலகட்டத்தில் குறிப்பாக 80 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வாழும் நிலை கொண்ட மாவட்டத்தில் 9.5 சதவீத்திலிருந்து 21 சதவீதமாக அதிகரித்தது.

மறுபுறம் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களில் வாழும் சூழல் கொண்ட மாவட்டங்களில் 13ஆவது வாரத்தில் 49 சதவீதமாக இருந்த தொற்று பாதிப்பு 17ஆவது வாரத்தில் 38 சதவீதமாக குறைந்தது.

தரவு

இந்த வருடத்தின் 8-14ஆவது வாரத்தில் மொத்தமாக கிராமப் பகுதிகளாக இருக்கும் மாவட்டங்களில் குறைந்த அளவிலான தொற்று எண்ணிக்கையே பதிவானது. ஆனால் தற்போது 60-80 சதவீதம் கிராமப் பகுதிகளை கொண்ட மாவட்டங்களில் அதிகபடியான தொற்றும், முழுவதுமான கிராமப் பகுதிகளை கொண்ட மாவட்டங்களில் 80 சதவீத தொற்றும் ஏற்பட்டுள்ளன.

இந்த வருடத்தின் 7 மற்றும் 14 வாரத்தின் இடைப்பட்ட காலத்தில் 60-80 சதவீதம் நகரப்புறங்களை கொண்ட மாவட்டங்களில் அதிகப்படியான தொற்று எண்ணிக்கை பதிவானது. ஆனால் 17 ஆவது வாரம் இந்த மாவட்டங்கள் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டன.

தரவு

முதல் அலையுடனான ஒற்றுமை

முதல் அலை உச்சத்திற்கு வரும்போதும் கிராமப் புறங்களில் புதியதாக தொற்று ஏற்படும் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.

தொற்று உச்சத்திற்கு வரும் ஒரு மாதத்திற்கு முன்பு அதாவது ஆகஸ்டு மாதத்தில் கிராமப் புறங்களில் 55சதவீத அளவிற்கு புதிய தொற்றுக்கள் பதிவாகின. இந்த வருடம் ஏப்ரல் மாதம் 45சதவீத அளவில் இது அதிகரித்துள்ளது. இது மே மாதத்தின் முதல் மூன்று நாட்களில் 48 சதவீதமாக அதிகரித்தது.

முதல் அலையின்போது கொரோனா தொற்றை தடுக்க தேசிய அளவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதிக அளவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல நேர்ந்தது அதில் தடுப்பு நடவடிக்கைகள் மீறப்பட்டன.

இந்த முறை தேசிய அளவில் பொதுமுடக்கம் இல்லை. மாநிலங்களுக்கு இடையே பயணிப்பதற்கும் தடையில்லை எனவே மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.

சரியான மருத்துவ வசதிகள் இல்லாத கிராமப் புறங்கள்

2019ஆம் ஆண்டு அரசால் வெளியிடப்பட்ட நேஷனல் ஹெல்த் ஃப்ரோவைல் அறிக்கைபடி, கிராமப்புறங்களில் 10 லட்சம் பேருக்கு 318 அரசு மருத்துவமனை படுக்கைகள் உள்ளன. அதுவே நகர்ப்புறங்களில் 10 லட்சம் பேருக்கு 1,190 மருத்துவமனை படுக்கைகள் உள்ளன.

டெல்லியில் தற்போது மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அந்நகரை பொறுத்தவரை பத்து லட்சம் பேருக்கு 1,452 மருத்துவமனை படுக்கைகள் உள்ளன.

எனவே கொரோனா அலை கிராமப் புறங்களில் மேலும் சிரமத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் சில கிராமங்களில் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் உயிரிழந்தனர் என ஸ்க்ரால் செய்தி வலைதளத்தில் செய்தி வெளியாகியிருந்தது. "பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை என்றாலும், உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் மாநில எல்லையில் இருக்கும் பலியா என்ற அந்த கிராமத்தில் கோவிட் 19 பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது," என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டது.

இந்திய மாநிலங்களின் கிராமப் புறப் பகுதிகளிலிருந்து தொற்றுகள் தற்போது பதிவாகின்றன என இந்தியா டுடேவில் செய்தி வெளியாகியுள்ளது.

"விழிப்புணர்வு இல்லாத காரணமும், பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு வர தயங்குவதும் கிராமப் புறங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகவுள்ளது. மருத்துவ வசதிகள் நகர்ப்புறங்களில் அதிகமாக இருக்க கிராமப் புறங்களில் உள்ள மக்கள் சிகிச்சை பெறும் நம்பிக்கையில் நகர்ப்புறங்களை தேடி வருகின்றனர்" என அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் கிராமப் புறங்களில் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற இந்தியா டுடேயின் செய்தியில் "ஆக்சிஜன் பற்றாக்குறை, ஐசியுவை தவிர மருத்துவ பணியாளர்களுக்கும், உயிர்காக்கும் கருவிகளுக்கும் தீவிர பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :