You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பாதீர்: பிரதமர் நரேந்திர மோதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் என பிரதமர் மோதிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருவதால், ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பவேண்டாம் என முதல்வர் பழனிசாமி பிரதமர் மோதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், ''தற்போது உள்ள சூழலை பார்க்கையில், தினமும் 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்திற்கு தேவைப்படுகிறது. ஆனால் 400 மெட்ரிக் டன்தான் தமிழகத்தில் உற்பத்தி ஆகிறது. இந்நிலையில், ஆக்சிஜனை தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கொண்டு சென்றால் இங்கு பற்றாக்குறை ஏற்படும். ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 80 மெட்ரிக் டன் பிற மாநிலங்களுக்கு கொண்டுசெல்வதை உடனே ரத்து செய்யவேண்டும்,''என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மாநில அரசிடம் கலந்தாலோசிக்காமல் வேறு மாநிலங்களுக்கு அனுப்பக்கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தனர்.
மாநிலம் முழுவதும் ஆக்சிஜன் தேவை அதிகரித்திருக்கும் நிலையில், அதைக் கொண்டு செல்வதற்கு வசதியாக கிரீன் காரிடார் என்ற தடையில்லா பெட்டகப் போக்குவரத்துக்கு மாநில அரசு ஏற்கெனவே ஏற்பாடு செய்திருக்கிறது. மருத்துவமனைகளில் எங்கேனும் ஆக்சிஜன் தேவை ஏற்பட்டால் 104 என்ற எண்ணில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளவும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
பிற செய்திகள்:
- தமிழகத்தில் முழு முடக்கத்தால் குறைந்த வாகன போக்குவரத்து, கடலூரில் வீதியில் நடந்த திருமணம்
- நரேந்திர மோதி உருக்கம்: "கொரோனா வதந்திகளை தவிருங்கள்"
- என்.வி.ரமணா இந்தியத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பு - யார் இவர்?
- ஆக்சிஜன் போதாமல் 26 நோயாளிகள் பலி: டெல்லி, பஞ்சாப் மருத்துவமனைகளில் அவலம்
- கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் வெளிப்பட்டது ராஜேந்திர சோழன் அரண்மனையா?
- கொரோனா தடுப்பூசி: இரண்டாம் டோஸ் போடவில்லை என்றால் என்னவாகும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: