You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா அலை: டெல்லியில் வார இறுதி முடக்கம், மால்கள் இயங்காது, ஓட்டல்களில் சாப்பிட முடியாது
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வார இறுதி நாள்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதன்படி வாரத்தின் சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் பெரிய அரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவை இயங்காது. திரையரங்குகள் 30% பார்வையாளர்களுடன் செயல்படலாம்.உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி கிடையாது. பார்சல்களுக்கும், வீடுகளுக்கு உணவுகளை விநியோகிக்கவும் மட்டுமே அனுமதி. வார இறுதி நாள்களில் செயல்படும் சந்தைகள் கட்டுப்பாடுகளுடன் செயல்பட வேண்டும்."கட்டுப்பாடுகள் மக்களுக்கு சிரமமாகவே இருக்கும். எனினும் கொரோனா பரவலைத் தடுப்பதற்கு இவை தேவைப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால். முழுமுடக்க அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்னதாக துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலை கெஜ்ரிவால் சந்தித்துப்பேசினார்.டெல்லியில் புதன்கிழமை மட்டும் 17,282 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பாதிப்பு விகிதம் 16 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. மொத்தம் 5,736 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவலை கெஜ்ரிவால் மறுத்தார். சமீபத்திய விவரங்களின்படி சுமார் 5 ஆயிரம் படுக்கைகள் காலியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமுடக்கம் சரியான வழிஇல்லை, மருத்துவக் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்தால் மட்டுமே அது தேவைப்படும் என முன்பொருமுறை கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
பிற செய்திகள்:
- கொடியங்குளம் சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன?
- சம்ஸ்கிருதத்தை இந்தியாவின் அலுவல் மொழியாக்க திட்டம் தயாரித்தார் அம்பேத்கர்: தலைமை நீதிபதி பாப்டே
- 9 தீர்ப்பாயங்களுக்கு இந்திய அரசு மூடுவிழா: நீதி கிடைப்பது கடினமாகிறதா?
- உடற்பயிற்சி செய்யாமல் எடைக் குறைப்பு சாத்தியமா? - ஊட்டச்சத்து நிபுணர் பதில்
- கர்ணன் திரைப்படத்தில் திருப்தியளிக்காத திருத்தம்: உதயநிதி என்ன சொன்னார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: