You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி லஞ்சம் கொடுத்த பணத்தில் வாங்கிய 3 கிலோ வெள்ளி' - மும்பை காவல்துறை
இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்
அர்னாப் கோஸ்வாமி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு
இந்தியத் தொலைக்காட்சிகளின் டிஆர்பி புள்ளிகளை கணக்கிடும் 'பார்க்' அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பர்த்தோ தாஸ்குப்தா, ரிபப்ளிக் தொலைக்காட்சியின் உரிமையாளரும் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி தனக்கு பல லட்சம் ரூபாயும், மதிப்புமிக்க கைக்கடிகாரம் ஒன்றையும் லஞ்சமாகக் கொடுத்ததாக மும்பை போலீசிடம் தெரிவித்துள்ளார் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது .
2013 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே 'பார்க்' (BARC) அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் இவர்.
பர்த்தோ தாஸ்குப்தாவின் வீட்டில் மூன்று கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டதாகவும், அது அர்னாப் கோஸ்வாமி தனது ஆங்கில செய்தித் தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவி மற்றும் இந்தி செய்தி தொலைக்காட்சியான ரிபப்ளிக் பாரத் ஆகியவற்றை பிரபலப்படுத்த தாஸ்குப்தாவுக்கு லஞ்சமாக வழங்கிய பணத்தில் வாங்கப்பட்டது என்றும் மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
தொலைக்காட்சிகளின் டிஆர்பி முறைகேடு வழக்கில் இதுவரை தாஸ்குப்தா உள்பட 15 பேரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது .
'விவசாயிகளுக்காக போராட்டம்' - அன்னா ஹசாரே
விவசாயிகளின் கோரிக்கைகளும், கவலைகளும் மத்திய அரசால் தீர்க்கப்படாவிட்டால், என்னுடைய கடைசிப் போராட்டத்தை விவசாயிகளுக்காக நடத்துவேன் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
மகாராஷ்டிர சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான ஹரிபாபு பாக்டே அன்னா ஹசாரேவைக் கடந்த வாரம் நேரில் சந்தித்து, வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
கடந்த 8-ஆம் தேதி விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தின்போதும், அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார்.
100-வது விவசாயிகள் ரயில்
மகாராஷ்டிராவில் உள்ள சங்கோலாவில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஷாலிமார் வரை செல்லும், 100-வது விவசாயிகள் ரயிலை டெல்லியில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார் என நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோதி, நாட்டின் கோடி கணக்கான விவசாயிகளுக்கு எனது வாழ்த்துகள். கொரோனா சவால் இருந்தபோதிலும், 'கிசான் ரெயில் நெட்வொர்க்' கடந்த நான்கு மாதங்களில் விரிவடைந்து இப்போது அதன் 100-வது ரெயிலைப் பெற்றுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்