விவசாயிகள் போராட்டம்: "அதானி - அம்பானி ஆதரவு சட்டங்கள் வேண்டாம்"

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள "அதானி - அம்பானி சார்பு சட்டங்களை" (மூன்று வேளாண் சட்டங்கள்) திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு தமது முழு ஆதரவு உண்டு என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை "பாரத் பந்த்" என்ற பெயரில் முழு கடையடைப்புக்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள 48 அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில், "அதானி, அம்பானி சார்பு விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். அதற்கு குறைவான எந்தவொரு விஷயத்தையும் ஏற்க முடியாது" என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
நாட்டுக்கே படியளக்கும் விவசாயிகளுக்கு கொடுமைகளையும் அநீதியையும் இழைப்பதை அனுமதிக்க முடியாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் பாரத் பந்த் அழைப்பைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய உள்துறைச் செயலாளர் திங்கட்கிழமை மாலையில் ஆலோசனை நடத்தினார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுவது தொடர்பாக அப்போது அதிகாரிகளுக்கு மத்திய உள்துறைச் செயலாளர் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Samajwadi party twitter
12ஆவது நாளாக தொடரும் போராட்டம்
நாடு முழுவதும் இந்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தலைநகர் டெல்லி, ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து 12ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் கனோஜ் மாவட்டத்தில் விவசாயிகள் பேரணி திங்கட்கிழமை நடைபெற உத்தேசிக்கப்பட்டதால், அதில் பங்கேற்க அம்மாநில முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாத்வ் திட்டமிட்டார்.
இதையொட்டி லக்னெளவில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட அவரை அருகே உள்ள சந்திப்பிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். அவருடன் நூற்றுக்கணக்கான சமாஜ்வாதி கட்சியினரும் இருந்தனர். காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து அங்குள்ள விக்ரமாதித்யா மார்க் பகுதியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பட மூலாதாரம், Samajwadi Party twitter
அகிலேஷ் யாதவை தடுத்து வைத்த காவல்துறை
விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு எதிராகவும் சமாஜ்வாதி கட்சியினர் கோஷமிட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அகிலேஷ் யாதவ் உள்பட அனைவரையும் காவல்துறை பேருந்தில் ஏற்றி வேறு இடத்துக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
முன்னதாக, விக்ரமாதித்யா மார்க் பகுதியில் அகிலேஷ் யாதவ் குழுவினரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், கட்சியினர் உத்தேசித்துள்ள பேரணியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இந்த தகவலை உறுதிப்படுத்திய கனெஜ் மாவட்ட ஆட்சியர் ராகேஷ் மிஸ்ரா, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மதித்து போராட்டங்களை கைவிடுமாறு முன்னாள் முதல்வர் உள்ளிட்ட சமாஜ்வாதி கட்சியினரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
உத்தர பிரதேசத்தில் தாத்தியா என்ற இடத்தில் இருந்து திர்வா பகுதி வரையிலான 13 கி.மீ தூரம் கொண்ட பேரணிக்கு சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், தங்களுடைய ஜனநாயக உரிமைகளை மறுக்கும் வகையில் காவல்துறையை பயன்படுத்தி உத்தர பிரதேசத்தில் ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை ஜனநாயகமற்றது என்று சமாஜ்வாதி கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராஜேந்திர செளத்ரி தெரிவித்தார்.
இந்த நிலையில், நாடு முழுவதும் நாளை செவ்வாய்க்கிழமை விவசாயிகள் சங்கத்தினர் "பார்த் பந்த்" போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக பாஜக நேரடி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது.
பதக்கங்களை திருப்பி தரும் வீரர்கள்
இந்த நிலையில், மல்யுத்த வீரர் கர்தார் சிங் தலைமையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 30 வீரர்கள், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தங்களுக்கு அரசு வழங்கிய பதக்கங்களை திருப்பித் தருவதாகக் கூறி ராஷ்டிரபதி பவன் நோக்கி புறப்பட முற்பட்டனர்.
அவர்களை புறப்படும் இடத்திலேயே டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அந்த முயற்சியை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
இதேவேளை, டெல்லி எல்லையில் போராட்டத்தில் பங்கெடுத்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி என்ற சீக்கியர் அமைப்பு தெரிவித்துள்ளது.
சீக்கியர் சமுதாயத்தினரின் உயரிய அமைப்பாகவும் அதிக சீக்கியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பாகவும் இந்த கமிட்டி கருதப்படுகிறது.
மத்திய அரசு கருத்து
இந்த நிலையில், விவசாயிகள் போராட்டங்களை பயன்படுத்தி மக்கள் மத்தியில் இழந்து வரும் தங்களின் செல்வாக்கை நிலைநாட்ட எதிர்கட்சிகள் முயற்சி செய்வதாக இந்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
வேளாண் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை செய்ய மோதி அரசு அரிதான முயற்சி எடுத்தது. இந்த நிலையில், அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வியைத் தழுவி வரும் எதிர்கட்சிகள், எந்த வகையிலாவது மக்களின் செல்வாக்கை இழக்காமல் இருக்க இந்த போராட்டங்களை பயன்படுத்தி வருகின்றன என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
அய்யாக்கண்ணு சங்கத்தினர் மீது நடவடிக்கை
விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவாக விவசாயிகள் சங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் டெல்லிக்கு புறப்பட கடந்த வாரம் முற்பட்டபோது அவர்களை திருச்சியில் காவல்துறையினர் தடுத்து வைத்தனர்.
இதன் பிறகு அவரது நடமாட்டங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டபோதும், அவர் தனியாக எங்கும் செல்ல தடையில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், தமிழத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர், டெல்லியில் உள்ள தங்களின் கிளை நிர்வாகிகள் மூலமாக டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு தங்களுடைய ஆதரவை நேரில் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வரிசையில், திமுக, நாம் தமிழர் இயக்கம், மக்கள் நீதி மய்யம், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் டெல்லி புராரியில் போராடி வரும் விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அய்யாக்கண்ணு சங்கங்களைச் சேர்ந்தவர்களில் ஒரு சிலர் தனித்தனியாக பிரிந்து டெல்லிக்கு ரயில் மூலம் புறப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
- இந்தியாவின் புதிய நாடாளுமன்றம்: கட்டுமானத்தை தொடங்க உச்ச நீதிமன்றம் தடை
- கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் அவசர அனுமதி கோரி விண்ணப்பம்
- தலித் பெண் சடலத்தை பொது வழியில் கொண்டுசெல்வதை தடுத்த சாதி இந்துக்கள்
- கமலா ஹாரிஸ் இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாரா?
- சோசலிசம் குறித்து அம்பேத்கரின் கருத்து என்ன? - வெளிச்சத்துக்கு வராத பக்கங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












