விவசாயிகள் பேரணி: டெல்லியில் நடக்கும் போராட்டத்துக்கு முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு

किसान

பட மூலாதாரம், Getty Images

டெல்லியை அடுத்த கிருகிராம் எல்லையில் பல மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்களை டெல்லி புறநகரில் உள்ள புராரி மைதானத்தில் திரண்டு அமைதியாக போராட்டம் நடத்திக் கொள்ள காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

இந்த நிலையில், புராரி மைதானத்தில் புதன்கிழமை பிற்பபகல் முதல் இரவு 9 மணிக்குள்ளாக லட்சக்கணக்கில் விவாசியகள் திரண்டுள்ளனர். அவர்களில் பலரும் பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு டெல்லியில் ஆளும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து, விவசாயிகளின் பேரணி நடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள புராரி மைதானத்தில் ஆம் ஆத்மி கட்சியினரும் டெல்லி மாநகராட்சி அதிகாரிகளும் வந்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், நடமாடும் கழிவறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்து வருகின்றனர்.

குருகிராம் எல்லையில் இருந்து டெல்லிக்குள் விவசாயிகள் பேரணியாகச் சென்று புராரி பகுதியில் கூடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதையடுத்து தங்களுடைய அமைப்பின் உறுப்பினர்கள் புராரி நோக்கிச் சென்றுள்ளதாக ராஜேவால்பிரிவின் பாரதிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இந்த நிலையில், விவசாயிகள் டெல்லிக்குள் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கையை பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், போராடும் தங்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்டும் வகையில் விவசாயிகள் அனுமதிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. ஆனால், இப்போது தேவை உடனடி பேச்சுவார்த்தை. விவசாயிகளின் கவலைகளை கேட்டறிந்து உடனடியாக அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

போராட்டம் நடத்துவதற்காக டெல்லிக்கு வரும் வெளி மாநில விவசாயிகளை ஹரியாணா மக்கள், உணவு, மருத்துவ உதவி, குடிநீர் வழங்கி உதவுமாறு ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கேட்டுக் கொண்டுள்ளார். "நாங்கள் விவசாயிகளுடன் இருக்கிறோம்" என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் மத்திய அரசு ஏற்கெனவே காலம் தாழ்த்தி வருகிறது. இனியும் தாமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, டெல்லி சலோ போராட்டத்துக்காக டெல்லி வர முயலும் விவசாயிகளை முன்னேற விடாமல் நெடுஞ்சாலைகளை காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினார்கள். அதையும் மீறி டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் முயன்றதால் இரு தரப்பிலும் பதற்றமான சூழல் நிலவியது.

ஹரியாணா - டெல்லி எல்லைப் பகுதியைக் கடக்க முயலும் விவசாயிகள் பேரணி மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி தடுக்க முயன்றனர்.

விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லி சலோ போராட்டத்தை அறிவித்துள்ள பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் இரண்டு நாள்களாக போலீசின் தடையை மீறி இந்தியத் தலைநகர் டெல்லி நோக்கிய பேரணியை அவர்கள் முன்னெடுத்தனர்.

ஹரியாணா - டெல்லி எல்லையில் உள்ள சிங்கு பகுதியை விவசாயிகளில் ஒரு தரப்பினர் தாண்டிவிட்டனர் என்று பிபிசி இந்தி சேவையின் செய்தியாளர்கள் தில்நவாஸ் பாஷா, பியுஷ் நாக்பால் ஆகியோர் தெரிவித்தனர்.

விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

விவசாயிகள் எங்கு தடுப்புகளை அகற்ற முடியுமோ அங்கெல்லாம் அதை அகற்றி முன்னேறி வந்தனர். பல இடங்களில் வலுவான தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் விவசாயிகள் அந்த இடங்களில் திரண்டு அரசுக்கு எதிராகவும் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள்.

முதல்வர்கள் என்ன சொல்கிறார்கள்?

மத்திய அரசு உடனடியாக விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளார் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்.

போராட்டத்தால் பயனில்லை. விவசாயிகள் மத்திய அரசோடு பேசவேண்டும் என்று கூறியுள்ளார் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார்,

தடையை மீறி பேரணியாக வரும் விவசாயிகளை கைது செய்து சிறை வைப்பதற்கு டெல்லி யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 9 ஸ்டேடியங்களை தரவேண்டும் என்று போலீஸ் கோரிக்கை வைத்தது. ஆனால், அதற்கு அனுமதி மறுத்த கேஜ்ரிவால் அரசு, விவசாயிகள் கோரிக்கை நியாயமானதுதான். அவர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள். ஸ்டேடியத்தை தர முடியாது என்று தெரிவித்துள்ளது.

போராட்டம் தொடர்புடைய மூன்று மாநில முதல்வர்கள் எடுத்துள்ள மாறுபட்ட நிலைப்பாடுகள் இவை.

போராடும் விவசாயிகள் மீது போலீசார் தண்ணீர் பீச்சியடிப்பதுடன், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசுவதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது. அவர்களுடைய ட்வீட் இதோ:

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

விவசாயிகள் அமைப்புகளான சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு வெள்ளிக்கிழமை மாலைக்குள் டெல்லி எல்லையில் சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் நிற்பார்கள் என்று கூறியுள்ளன.

விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

பேச்சுவார்த்தைக்குத் தயார் - வேளாண் அமைச்சர்

ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "புதிய சட்டம் காலத்தின் தேவை" என்று கூறியுள்ளார். "இந்த சட்டம் விவசாயிகளின் வாழ்க்கையில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வரும். எதற்கும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு உண்டு. அரசாங்கம் பேசத் தயாராக உள்ளது. விவசாயிகளிடம் அவர்களின் போராட்டத்தை ஒத்திவைக்கச் சொல்ல விரும்புகிறேன் '' என்றும் அவர் கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு எதிராக ஹரியாணா அரசு எடுத்த நடவடிக்கைகளை அகாலி தளம் கட்சியும் கண்டித்துள்ளது.

விவசாயிகள் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை நசுக்கப்படுவதாகவும் அது குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லி சலோ விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லி சலோ விவசாயிகள் போராட்டம்

"விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை எந்த அரசியல் கட்சியின் கொடியின் கீழும் ஏற்பாடு செய்ய விரும்பவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அனைத்து விவசாயிகளும் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரானவர்கள் " என்று அந்தக் கட்சியின் நிர்வாகி சுக்பீர்சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் போராட்ட உரிமை நசுக்கப்பட்ட நவம்பர் 26, விவசாயிகளின் மீதான 26/11 தாக்குதல் போன்றது என்றும் வருணித்துள்ளார்.

விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

'விவசாயிகளின் ஜனநாயக உரிமைகளை அவர்களிடமிருந்து மத்திய அரசு பறிக்க முடியாது' என்று அவர் கூறினார்.

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் விவசாயிகள் மீதான ஹரியாணா அரசின் நடவடிக்கையை 'அரச பயங்கரவாதம்' என்று வருணித்துள்ளார்.

"அரசமைப்புச் சட்ட நாளில், அமைதியான போராட்டத்துக்கு அரசமைப்புச் சட்டம் தரும் உரிமை மீது ஒரு தாக்குதல் நடந்துள்ளது." என்றும் அவர் கூறியுள்ளார்.

வியாழக்கிழமை தொடங்கிய போராட்டம்

மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அமைப்புகள் வியாழக்கிழமை 'டெல்லி சாலோ' பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தன.

பஞ்சாபிலிருந்து தொடங்கிய இந்த பேரணி ஹரியாணா மாநில எல்லையில் நிறுத்தப்பட்டது. மேலும் தடுப்புகள் அமைக்க கிரேன்கள் மற்றும் லாரிகள் வழியில் நிறுத்தப்பட்டன. இந்த பேரணி நிறுத்தப்பட்ட பின்னர் அது வன்முறையாக மாறியது.

சிங்கு பார்டர்-சோனிபட் உட்பட பல இடங்களில் விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

விவசாயிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் கன்வீனர் யோகேந்திர யாதவை ஹரியாணாவின் குருகிராமில் போலீசார் கைது செய்தனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :