You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரூபா முட்கில் தீபாவளி குறித்து என்ன பேசினார்: ஐபிஎஸ் அதிகாரி இந்து மதத்தை தூற்றியதாக இணையத் தாக்குதல்
தீபாவளி பண்டிகை அன்று பட்டாசுகள் வெடிப்பதற்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி ரூபா எழுதிய ஒரு ஃபேஸ்புக் பதிவு சர்ச்சையாகி உள்ளது.
இந்து மத பாரம்பரியத்தை புண்படுத்துவதாக ரூபாவை பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக வலதுசாரி ஆதரவாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
"பட்டாசுகள் வெடிப்பது இந்து பாரம்பரியம் கிடையாது. உடனே இந்து மதத்தை தாக்கிப் பேசுவதாக கூறுபவர்கள், நம் புராணங்களிலும் வேதங்களிலும் பட்டாசுகள் குறித்து எந்த குறிப்பும் இல்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். நம் நாட்டிற்குள் ஐரோப்பியர்கள் வந்தபோதுதான் பட்டாசுகள் அறிமுகமாகியது" என்று எழுதியிருந்தார்.
"தீபாவளி பட்டாசுக்கும் இந்து மத பாரம்பரியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை"
கொரோனா மற்றும் காற்று மாசு காரணமாக டெல்லி, பெங்களூரூ உள்ளிட்ட பல நகரங்கள் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்துள்ளன.
இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா முட்கில், தடையை மீறி பொறுப்பற்ற விதத்தில் பலரும் பட்டாசுகளை வெடிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்து மதப் பாதுகாவலர்களாக தங்களை நினைத்துக் கொள்ளும் சிலர், மற்ற இந்துக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்றும் தீபாவளிக்கும் பட்டாசுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்து பண்டிகை என்றால் மட்டும் அதனை தடுக்க பலரும் வரிந்து கொண்டு வருவதாக தீவர வலதுசாரி நபர்கள் இதற்கு எதிர்வினையாற்றி இருக்கிறார்கள்.
இந்துகளுக்கு அறிவுரை கூறுவதை ரூபா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சிலர் இட்டுள்ள பதிவுகள்:
இந்நிலையில், ரூபாவின் ஃபேஸ்புக் பதிவு தொடர்பாக எதிர்வினையாற்றி உள்ள பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத், ரூபா போன்றவர்கள் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
தன் மீதான விமர்சனங்களுக்கு ட்விட்டரிலேயே பதிலளித்துள்ள ரூபா, தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பது என்பதை உணர்வுப்பூர்வமாக அல்லாமல், பகுத்தறிவுடன் அணுக வேண்டும் என்றும் அரசு அதிகாரியாக தான் உத்தரவுகளை பின்பற்றவே சொல்வேன் என்றும் கூறியுள்ளார்.
ட்விட்டரில் தன்னை தாக்கிப் பேசினாலும், விமர்சித்தாலும் அல்லது குற்றம்சாட்டினாலும் தன் கடமையில் இருந்து தவறப்போவதில்லை என அவர் பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: