You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிராம நிர்வாக அலுவலரின் தன்னார்வ சேவை: கட்டணமில்லா ஆம்புலன்ஸ் இயக்குகிறார்
- எழுதியவர், மனோ
- பதவி, பிபிசி தமிழுக்காக
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்ச நாயக்கன்பட்டியில் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வருபவர் துரை.பிரிதிவிராஜ். தனது சொந்த செலவில் இரண்டு ஆம்புலன்ஸ் வாங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டணமில்லாமல் ஆம்புலன்சை இயக்கி வருகிறார்.
மதுரை நரிக்குடி பகுதியை சேர்ந்த இவரது தனது தம்பி ராஜேஸ் என்பவர் 2011 ஆம் ஆண்டு சாலை விபத்தில் இழந்து விட்டார், பல இடங்களில் தேடியும் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை எனவும், அப்போது தனக்கு இந்த யோசனை வந்ததாக கூறுகிறார்,
7 ஆண்டு அரசு வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து வைத்து உதவும் கரங்கள் அறக்கட்டளை மூலமாக என் வாழ்க்கையில் முதன் முதலில் வாங்கிய ஆம்னி ஆம்புலன்சை 2018ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததாகவும், இதனை கட்டணமில்லா சேவையாக, எளிய மக்கள் பயன்படும் விதமாக இயக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே போல் இந்த ஆண்டு கொரானா வைரஸ் ஊரடங்கு காலத்தில் துன்பப்படும் மக்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொடையாளர்கள் ஆதரவினால் வழங்கி வந்தது ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் செய்தியானது.
இதைப் பார்த்து ஆப்பிரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் 4 படுக்கை வசதி கொண்ட பெரிய ரக ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி தமது அறக்கட்டளைக்கு அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது அந்த ஆம்புலன்ஸ் இந்த பெருந்தொற்றுக் காலத்தில் அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறது
கட்டணமில்லா ஆம்புலன்ஸ் சேவை, இரத்ததான சேவை, புற்று நோய் மற்றும் எச்.ஐ.வி. பாதித்த நபர்களுக்கு மருத்துவ உதவி, ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்வது, வறுமையில் வாடும் மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி கட்டணம் செலுத்துதல் போன்ற பணிகளை செய்து வருகிறார்.
இது குறித்துப் பேசிய துரை.பிரதீப்ராஜ்,
"வருவாய்துறையில் கடந்த 9 வருடங்களாக கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறேன். சாலை விபத்தில் எனது தம்பியை இழந்தேன். அந்த விபத்து நடந்தபோது ஆம்புலன்ஸ் கிடைக்க பெரும்பாடுபட்டேன், அரசு ஊழியருக்கே இந்த நிலைமை என்றால் பொதுமக்கள் நிலையை எண்ணிப் பார்த்தேன் அப்போதுதான் கட்டணமில்லாத ஆம்புலன்ஸ் தொடங்கும் எண்ணம் தோன்றியது.
கல்வி கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகளைக் கண்டறிந்து அவர்கள் இடைநிற்பதைத் தடுத்து படிக்க வைத்தோம். முதலில் 2 குழந்தைகளைப் படிக்க வைத்தோம். தற்போது வரை 69 குழந்தைகளைப் படிக்க வைத்துள்ளோம்" என்று தெரிவித்தார் அவர்.
பிற செய்திகள்:
- ஜோர்ஜாவையும் கைப்பற்றினார் பைடன்: இதனால் என்ன ஆகும்?
- விவாகரத்து, மது அருந்துதல்: கடுமையான இஸ்லாமிய சட்டங்களை தளர்த்திய ஐக்கிய அரபு அமீரக அரசு
- இந்தியா - பாகிஸ்தான் எல்லை மோதல்: படையினர், பொதுமக்கள் உள்பட இரு தரப்பிலும் 14 பேர் பலி
- மௌனம் கலைத்து பைடனுக்கு வாழ்த்து சொல்லிய சீனா
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: