You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீட் தேர்வை ரத்து செய்ய சட்டத்தின் வாயிலாக நியாயம் கிடைக்கவில்லை - முதல்வர் பழனிசாமி
"நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு கடுமையான முயற்சி மேற்கொண்டும், அது தொடர்பாக அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. இதற்காக நீதிமன்றம் வரை சென்றும், நல்ல தீர்ப்பு கிடைக்கவில்ல" என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், "தமிழக அரசைப் பொறுத்தவரை நீட்தேர்வு இருக்கக்கூடாது என்றுதான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தற்போது நமக்கு வேறு வழி இல்லை. இதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று இருக்கின்றோம். ஆனால் சட்டத்தின் வாயிலாக நியாயமான தீர்ப்பு கிடைக்கவில்லை," எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா நோய்த்தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து கொண்டு வருவதாக கூறிய முதல்வர் பழனிசாமி, இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு பெற்றோரின் மனநிலையை அறிந்தே பள்ளிகள் திறக்கப்படும் என்றார்.
குழந்தைகளின் நலன் பெற்றோருக்கு முக்கியம் என்பதால் அதனைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும். ஆகவே இவை அனைத்தையும் ஆராய்ந்த பின்னரே பள்ளிகள் திறக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்
"அரியர் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறாது"
அரியர் மாணவர்கள் தேர்ச்சி தொடர்பாக உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கிறார் என குறிப்பிட்ட முதல்வர் பழனிசாமி, "யுஜிசி விதிமுறைகளுக்கு உட்பட்ட இவை பின்பற்றப்படுகிறது என்று முன்பே அறிவித்திருக்கிறோம். தமிழக அரசு அரியர் மாணவர்களுக்கு ஏற்கனவே தேர்வு இல்லை என்று அறிவித்து இருக்கிறோம். ஆகவே, மீண்டும் தேர்வு நடைபெறாது" எனத் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- டெல்லியில் மீண்டும் பாலியல் வல்லுறவு சம்பவம்: 86 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை
- 'கொரோனா தொற்றை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்'
- "அந்த டெக்னிக் மிஸ் ஆனதால் 40 வயசுல கர்ப்பம் ஆயிட்டேன், என் கணவர் கடும் கோபத்தில் இருக்கிறார்"
- ரஃபால் போர் விமானங்கள்: இந்திய விமானப்படை சேவையில் நாளை அர்ப்பணிக்கப்படும் 5 விமானங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: