இ-பாஸ் முடிவுக்கு வருமா?: 'ஆட்கள், சரக்கு போக்குவரத்துக்கு கட்டுப்பாடு இல்லை'

ஒரே மாநிலத்துக்கு உள்ளேயும் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையிலும் தனிநபர்கள் அல்லது சரக்கு போக்குவரத்துக்கு எந்தவிதமான முன் அனுமதி அல்லது இ-பர்மிட் தேவையில்லை என்று இந்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.

இதே வழிமுறை அண்டை நாடுகளுடனான எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக இந்திய அரசு அமலாக்கிய நான்கு கட்ட ஊரடங்குகள், படிப்படியாக தளர்த்தப்பட்டு, அதன் மூன்றாவது கட்டத் தளர்வுகளான அன்லாக்-3 நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலில் இருக்கிறது.

இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் மற்றும் மாவட்ட அளவிலான நடமாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு மற்றும் சேவைகளின் போக்குவரத்தில் பிரச்சனை ஏற்படுவதாகவும் அவர் இன்று அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனைகள் சரக்குகளின் விநியோகம் மீது தாக்கம் செலுத்துவதாகவும், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பிலும் சிக்கல்களை உண்டாக்குவதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகங்கள் அல்லது மாநில அரசுகளால் அவ்வாறு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் இந்திய உள்துறை அமைச்சகம் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் கீழ் வெளியிட்ட விதிமுறைகளை மீறுவதாகும் என்றும் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.

இதன்படி பார்த்தால் தமிழக அரசு அமலாக்கிவரும் இ-பாஸ் நடைமுறையும் ஒரு விதிமீறல் ஆகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: