You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகக் கூறி, அந்த தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
"வேறு காரணத்துக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது, அங்கு எனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"கடந்த ஒரு வார காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தமது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று இரவு 10 மணியளவில் வந்த தகவலின்படி, டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ஏற்பட்ட கட்டிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதன் முன்பாகவே அவருக்கு கோவிட்-19 வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று கண்டறியப்பட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது, சுவாசக்கருவிகள் உதவியுடன் பிரணாப் முகர்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
பிற செய்திகள்:
- ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படிக்கும் 4 தமிழக மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
- சாத்தான்குளம் தந்தை மகன் சிறை மரண வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. கொரோனாவுக்கு பலி
- "ஒரு சில நாட்களில் சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் வெளியேற்றப்படும்"
- தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வரும் பொது முடக்க தளர்வுகள் என்னென்ன?
- விண்ணை முட்டும் தங்கம் விலை - என்ன காரணம்? எப்போது விலை குறையும்?
- கொரோனா வைரஸ்: சமூகப் பரவல் பாதிப்பே இல்லாமல் 100 நாட்களை கடந்த நியூசிலாந்து
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: