You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காந்தி : ஏலம் விடப்படவுள்ள மகாத்மாவின் மூக்குக் கண்ணாடி: மதிப்பு எவ்வளவு தெரியுமா?
கிழக்கு பிரிஸ்டோலில் வரலாற்று சிறப்பு மிக்க பொருட்களை ஏலத்திற்கு விற்பனை செய்யும் இடத்தில் காந்தி பயன்படுத்திய கண்ணாடி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
ஓர் காகித உறையில் காந்தியின் மூக்குக் கண்ணாடி பாதுகாக்கப்பட்டுள்ளது.
1920ம் ஆண்டு காந்தி தென் ஆப்ரிக்காவில் வசித்தபோது அவரை சந்தித்த நபர் ஒருவருக்கு இந்த மூக்குக் கண்ணாடி கிடைத்ததாகவும், அவர்கள் தலைமுறைகளாக அதை பாதுகாத்து வந்ததாகக் கண்ணாடியை ஏலம் விட முயற்சிக்கும் அதன் உரிமையாளர் கூறுகிறார்.
மேலும் காந்தி தென் ஆப்ரிக்காவில் வசித்தபோதுதான் முதன் முறையாக மூக்கு கண்ணாடிகளைப் பயன்படுத்தத் தொடங்கினார் என்றும், காந்தியின் கண்ணாடிகளை தங்களிடம் ஒப்படைத்த உரிமையாளர் அளிக்கும் தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளன என்றும் கிழக்கு பிரிஸ்டோலில் ஏலம் விடும் தொழில் மேற்கொள்ளும் ஆண்ட்ரூ ஸ்டோவ் கூறுகிறார்.
காந்தியின் மூக்கு கண்ணாடியின் மதிப்பு 15,000 டாலர்களுக்கு விற்பனையாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த தங்க நிற முலாம் பூசிய ஃபிரேம்களை கொண்ட மூக்கு கண்ணாடிகளைத்தான் காந்தி முதன்முதலில் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது என்றும் ஆண்ட்ரூ ஸ்டோவ் கூறுகிறார். ''தனது உடைமைகளைப் பிறருக்கு அளிக்கும் பழக்கம் கொண்டவர் காந்தி'' என்றும் ஆண்ட்ரூ ஸ்டோவ் குறிப்பிடுகிறார்.
குறிப்பாக இந்த கண்ணாடியை ஏலத்தில் வாங்குவதற்கு இந்தியாவில் பலர் விரும்புவார்கள், ஆனால் அதிர்ஷ்டவசமாகக் காந்தியின் மூக்குக் கண்ணாடி தங்களை வந்து சேர்ந்துள்ளது என்றும் ஆண்ட்ரூ கூறுகிறார். வெறும் காகிதத்தில் பாதுகாக்கப்பட்டாலும் தங்கள் நிறுவனத்திலிருந்து ஏலத்திற்கு விற்பனையாகும் பொருட்களில் காந்தியின் மூக்குக் கண்ணாடி மிகவும் முக்கியமானது என ஆண்ட்ரூ ஸ்டோவ் கூறுகிறார்.
வரும் ஆகஸ்ட் 21ம் தேதி கிழக்கு பிரிஸ்டோலில் இருந்து காந்தியின் மூக்குக் கண்ணாடி இணையம் மூலம் விற்பனைக்கு வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :