You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அயோத்தி ராமர் கோயிலுக்கு ஆகஸ்டு 5இல் பூமி பூஜை - புதிய மசூதி எங்கு, எப்போது?
- எழுதியவர், சமீராத்மஜ் மிஸ்ரா,
- பதவி, பிபிசி இந்திக்காக
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5ஆம் தேதிநடக்க உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
கொரோனா வைரஸ் பரவும் நிலையையும் மீறி நடக்க உள்ள இந்த நிகழ்வில்இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகிஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ரௌனாகி காவல் நிலையஎல்லையில் அமைந்துள்ளது தன்னிப்பூர் கிராமம்.
இங்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிற கிராமங்களைப் போலவேகொரோனா வைரஸ் பாதிப்பு நிலவி வருகிறது. சிலருக்கு கோவிட்-19 தொற்றுஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த கிராமத்தின் சில பகுதிகளில்போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.
ஆனால் பிற பகுதிகளில் போதிய அளவு தடுப்பு நடவடிக்கைகள் இல்லை.சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி நிலம் இந்து தரப்புக்குரியது என்று, சென்றஆண்டு நவம்பர் மாதம் இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மசூதிகட்டுவதற்காக இஸ்லாமிய தரப்புக்கு வேறு ஒரு இடத்தில் நிலம் வழங்கப்படவேண்டும் என்றும் தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தன்னிப்பூர் கிராமத்தில்தான், மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை சுன்னி வக்ஃப் வாரியத்துக்கு ஒதுக்கியுள்ளது உத்தரப்பிரதேச அரசு.
உத்தரப் பிரதேச வேளாண் துறைக்குச் சொந்தமான 25 ஏக்கர் விளைநிலத்தில் ஒருபகுதியாக இருந்த இந்த நிலத்தை மசூதிக்கு என்று அரசு ஒதுக்கி உள்ளது.
'இஸ்லாமிய மக்களுக்கு உற்சாகம் இல்லை '
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை ஒட்டி அங்கு ஏற்பட்டுள்ளஉற்சாகத்தைப் போல இந்த கிராமத்தில் மசூதி வருவதை யாரும் அவ்வளவுஉற்சாகத்துடன் அணுகவில்லை.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்து ஆறு மாத காலத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில்உள்ளூர் வருவாய் அலுவலர்கள் உடன் சுன்னி வக்ஃப் வாரிய உறுப்பினர்கள்சிலர்தான் அந்த இடத்துக்கு இதுவரை வருகை தந்துள்ளனர்.
"அந்த இடத்துக்கு நாங்கள் செல்வதற்கு முன்னரே ஊரடங்குஅமல்படுத்தப்பட்டது. இதன்காரணமாக எங்களால் அந்த நிலத்தை சரியாகஅளவிட முடியவில்லை. பக்ரித்தும் வந்துவிட்டது. ஐந்தாம் தேதி பூமி பூஜைநடத்தப்பட உள்ளது. இந்த இடத்திலும் அதன் பின்னரே மசூதி குறித்த வேலைகள்நடக்கும் என்று," கூறினார் சுன்னி வக்ஃப் வாரிய தலைவர் ஜூஃபர் அகமதுஃபரூக்கி.
இந்த கிராமத்தில் மசூதி கட்டுவதற்காக நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்துஇஸ்லாமிய தரப்பினரிடையே பெரிய உற்சாகம் எதுவும் இல்லை என்பதையும்ஒப்புக் கொள்கிறார் ஜூஃபர் அகமது ஃபரூக்கி.
அயோத்தி நகரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தகிராமத்தில் மசூதி கட்டுவதற்காக நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளதால் என்ன பயன்என்று அயோத்தியில் உள்ள இஸ்லாமியர்களிடையே ஏற்கனவே அதிருப்திஉள்ளது.
இந்த இடத்தில் மசூதி கட்டுவதற்கு பதிலாக பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, நூலகம் போன்ற மக்களுக்கு பயனுள்ள எதையாவது கட்ட வேண்டும் என்றுஇஸ்லாமிய தரப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
தன்னிப்பூர் கிராம மக்கள்
"எங்கள் கிராமம் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமமாகஇருந்தாலும் இங்கு மசூதி கட்டுவதற்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து இங்குஉள்ளவர்கள் இடையே பெரிய உற்சாகம் எதுவும் இல்லை," என்கிறார் தன்னிப்பூர்கிராமத்தின் தலைவர் ராகேஷ் குமார் யாதவ்.
எனினும் இதன் காரணமாக தங்களது கிராமத்துக்கு சர்வதேச அளவில் பெயர்கிடைக்கும் என்பதால் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம் என்கிறார் அவர்.
"அறிவிப்பு வெளியான சமயத்தில் பலரும் இந்த நிலத்தை வந்து பார்த்து விட்டுசென்றார்கள். ஆனால் இப்பொழுது யாரும் வரவில்லை. இப்பொழுது இந்தநிலத்தில் நெல் விவசாயம் நடந்து வருகிறது. மசூதி கட்டுவதற்கு இந்த நிலத்தைப்பிரித்து 5 ஏக்கர் தனியாக ஒதுக்கப்பட்ட பின்பு அது வக்ஃப் வாரியத்திடம்ஒப்படைக்கப்படும். இங்கு மசூதி எப்போது கட்டப்படும் எவ்வாறு கட்டப்படும்என்றெல்லாம் யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை," என்கிறார் ராகேஷ்குமார் யாதவ்.
இஸ்லாமிய தரப்பு என்ன சொல்கிறது?
அயோத்தி நில வழக்கில் பங்கெடுத்த முக்கியமானவர் இஸ்லாமிய தரப்புஒன்றின் தலைவரான ஹாஜி மஹபூப், "இவ்வளவு தூரத்தில் நிலம்ஒதுக்கப்பட்டுள்ளதால் எந்தப் பயனும் இல்லை. அயோத்தியில் இருக்கும்இஸ்லாமியர்கள் இங்கு வந்து தொழுகை நடத்த முடியாது. எங்களுக்கு நிலம்வேண்டாம் என்று ஏற்கனவே நாங்கள் தெரிவித்து விட்டோம். ஒருவேளை நிலம்ஒதுக்கப்படுவதாக இருந்தால் அது அயோத்தி நகர உள்ளேயே ஒதுக்கப்படவேண்டும்," என்கிறார்.
வழக்கில் பங்கெடுத்த இஸ்லாமிய தரப்பைச் சேர்ந்தவர் இக்பால் அன்சாரி. "பாபர் மசூதியை அயோத்தியில்தான் இருந்தது. அதற்கு பதிலாக வழங்கப்படும்.இடமும் அயோத்தியில்தான் இருக்க வேண்டும். 25-30 கிலோமீட்டர்
தொலைவில்ஒதுக்கப்படுவது எதற்காக? தன்னிப்பூர் வரை வந்து தொழுகை நடத்த யார்விரும்புவார்கள்? வரும் வழியிலேயே நிறைய மசூதிகள் இருக்கின்றன," என்கிறார் இக்பால் அன்சாரி.
தற்போது நிலம் ஒதுக்கப்பட்டு உள்ள பகுதிக்கு அருகிலேயே ஒரு தர்கா உள்ளது. அங்கு ஆண்டுதோறும் விழா ஒன்று நடைபெறுகிறது. வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு இந்த பகுதியில் புதிதாக மசூதி ஒன்றுகட்டப்பட உள்ளதால் அந்த மசூதிக்கு என்று தனியாக ஒரு சிறப்பு இருக்கப்போகிறது.
ஆனால் ஏற்கனவே இங்கு வேறு பல மசூதிகள் இருக்கும் நிலையில் உள்ளூர்மக்களிடையே இந்த மசூதி தனியான ஒரு முக்கியத்துவத்தை பெறப்போவதில்லை.
மாநில அரசு தன்னிப்பூர் கிராமத்தில் மசூதி கட்டுவதற்காக நிலம் ஒதுக்கப்படும், என்று அறிவித்த பின்பு இதை பெற்றுக் கொள்ள வேண்டாம் என அகில இந்தியமுஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சுன்னி வக்ஃப் வாரியத்தை கேட்டுக்கொண்டது. ஆனால் அதையும் மீறி சுன்னி வக்ஃப் வாரியம் இந்த நிலத்தைஏற்றுக்கொண்டது.
"சுன்னி வக்ஃப் வாரியம் என்பது இஸ்லாமியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு கிடையாது. இது அரசின் ஓர் அமைப்புதான். இதை இஸ்லாமியர்களின் முடிவாக கருதக் கூடாது. இது சுன்னி வக்ஃப் வாரியத்தின் முடிவாக மட்டுமேகருதவேண்டும்,@ என்கிறார் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின்மூத்த உறுப்பினரான மவுலானா யாசின் உஸ்மானி.
அயோத்தி நிலத் தகராறு என்பது என்ன?
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தில், அயோத்தி நகரில் குறிப்பிட்ட ஒரு பகுதி நிலத்தை மையமாகக் கொண்டது அயோத்தி நிலத் தகராறு வழக்கு.
விஷ்ணுவின் அவதாரமான ராமர் பிறந்த இடம் என்று இந்துக்களால் கருதப்படும் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது பிரதான சர்ச்சையாக உள்ளது. அது பாபர் மசூதி இருந்த இடம் என்றும். அங்கு ஏற்கெனவே இருந்த இந்துக் கோவிலை இடித்துவிட்டோ அல்லது மாற்றி அமைத்தோ மசூதி உருவாக்கப்பட்டது என்று சில இந்து அமைப்புகள் தரப்பில் கூறப்படுகிறது.
பாபர் மசூதி 1992 டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டது. அதன்பிறகு நிலத்துக்கு உரிமை கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் 2010 செப்டம்பர் 30ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பின்படி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மூன்றில் ஒரு பகுதி ராம் லல்லாவுக்கும் (குழந்தை வடிவில் ராமர் கடவுள்), இன்னொரு மூன்றில் ஒரு பகுதி நிலம் சன்னி வக்ஃபு வாரியத்துக்கும், மீதி மூன்றில் ஒரு பகுதி நிலம் நிர்மோஹி அகாரா எனும் துறவிகள் குழுவின் அமைப்புக்கும் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு
இதன் மேல் முறையீட்டை மசூதியின் மையக் குவிமாடத்தின் கீழ் இருந்த இடம் இந்துக்களுக்குத் தரப்படவேண்டும். முஸ்லிம்களுக்கு மாற்று இடம் தரப்படவேண்டும். சர்ச்சைக்குரிய புனிதத் தலம் இந்துக்கள் கோயில் கட்டுவதற்காகத் தரப்படவேண்டும் என 2019 நவம்பர் 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது.
மசூதியின் உள் முற்றத்தில்தான் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்பி வந்துள்ளனர். ஆனால், உள் முற்றத்தில் முஸ்லிம்கள் தொழுமையை நிறுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியது.
சுன்னி வஃக்பு வாரியத்துக்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு அல்லது மாநில அரசு அளிக்க வேண்டும். 1528 -1856 இடையேயான காலக்கட்டத்தில் இஸ்லாமியர்கள் அங்கு தொழுகை நடத்தியதற்காக எந்த ஆவணத்தையும் சுன்னி வக்ஃப் வாரியம் அளிக்கவில்லை.
1992ஆம் ஆண்டு பாபர் மசுதி இடிக்கப்பட்டது சட்டத்துக்கு புறம்பானது. தொழுகை நிறுத்தப்பட்டதால் மட்டும் மசூதி கைவிடப்பட்டதாகவோ அல்லது அவர்கள் பாத்தியதை இழந்ததாகவோ கருத முடியாது என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது."அயோத்தி தீர்ப்பு கலக்கம் தருகிறது" முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கங்குலி
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :