குஜராத் ரசாயன தொழிற்சாலையில் பெரும் விபத்து - 5 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம், SAJID PATEL
குஜராத் மாநிலம், பாருச் மாவட்டத்தில் யஷாஸ்வி ரசாயன நிறுவனத்தில் இன்று (ஜூன் 3) பகலில் ஒரு பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக வெளிவந்த காணொளியில் மிகப்பெரிய அளவில் புகை வெளியேறுவதை பார்க்க முடிந்தது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரசாயன ஆலையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தின் தீவிரத்தை, இந்த பகுதியில் இருந்த மற்ற நிறுவனங்களின் உடைந்த ஜன்னல் கண்ணாடிகள் காட்டுவதாக உள்ளது.

பட மூலாதாரம், ANI
சம்பவ இடத்துக்கு 10 முதல் 12 வரையிலான தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து நடந்த இடத்துக்கு அருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்கிறார் பருகி மாவட்ட தொழிற்சாலை பாதுகாப்பு துறை இயக்குநர் வகீலா.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் நச்சுவாயுவால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்ட சூழலில், ரசாயன ஆலையில் ஏற்பட்ட இந்த விபத்து இந்த பகுதியில் வசிக்கும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த தொழிற்சாலையை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் 4800 பேர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட ஆட்சியர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












