மும்பை தாராவி கொரோனா வைரஸ்: தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியின் நிலை என்ன?

கொரோனா வைரஸால் இந்தியாவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நகரமாக மும்பை இருக்கிறது. அங்கு இதுவரை 35,000க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மும்பையில் கொரோனா வைரஸ் பரவலின் மையமாக விளங்க கூடிய பகுதிகளில் ஒன்றான தாராவியில் மட்டும் இதுவரை 1,500க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றான தாராவியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் நீண்டகாலமாக வசித்து வருகின்றனர்.

தாராவியில் குடியிருப்புகள் மட்டுமின்றி சிறிய மற்றும் பெரியளவிலான தொழிற்சாலைகளும் இருக்கின்றன. மிகவும் குறுகலான தெருக்களில் பெரும்பாலும் எவ்வித இடைவெளியும் இன்றி கட்டப்பட்டுள்ள வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

வீடுகளுக்கிடையேயான இடைவெளி சாத்தியமில்லாத நிலையில், ஒரேயொரு அறை கொண்ட வீடுகளில் பலர் குடும்பத்துடன் வசிக்கும் சூழ்நிலை நிலவுகிறது.

குறுகலான தெருக்கள், இடைவெளி இல்லாத வீடுகள், சுகாதாரத்துக்கு சவால் விடும் சுற்றுப்புறம், மக்கள் தொகை உள்ளிட்டவற்றால் இங்கு கொரோனா வைரஸின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், தாராவியின் தற்போதைய நிலையை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது இந்த புகைப்படத் தொகுப்பு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: