You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் சிகிச்சை: டிரம்ப் பயன்படுத்தும் தடுத்து நிறுத்திய உலக சுகாதார நிறுவனம் மற்றும் பிற செய்திகள்
மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதை மருத்துவ பரிசோதனை பாதுகாப்பு அச்சம் கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல நாடுகளில் நடைபெற்று வந்த சோதனை பாதுகாப்பு கருதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹைட்ராக்சி குளோரோகுயின் கோவிட் 19ஆல் உயிரிழக்கும் ஆபத்தை அதிகரிக்கும் என மருத்துவ சோதனை ஒன்றில் தெரியவந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனாவிலிருந்து தன்னை காத்துக் கொள்ள இந்த மருந்தை உட்கொள்வதாக கூறியிருந்தார்.
மேலும் பல மருத்துவ ஆலோசனைகளுக்கு பிறகும் தொடர்ந்து மலேரியா சிகிச்சையில் வழங்கப்படும் இந்த மருந்துக்கு ஆதரவாக மீண்டும் மீண்டும் பேசி வந்தார்.
இந்த மருந்தால் இதயத்திற்கு பிரச்சனைகள் வரலாம் என பொது சுகாதார அதிகாரிகளும் டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்திய - மலேசிய உறவு திடீரென மேம்பட்டது எப்படி?
இந்தியாவுடன் தனது ராஜீய மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து மலேசியா பேசியுள்ளது.
இந்தியா - மலேசியா இடையில் அண்மையில் ஏற்பட்ட சமையல் எண்ணெய் ஒப்பந்தத்தை அடுத்து, தனது சமையல் எண்ணெயை அதிகம் வாங்கும் இந்தியா தொடர்பான இந்த அறிக்கையை மலேசியா வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க:இந்திய - மலேசிய உறவு திடீரென மேம்பட்டது எப்படி?
செளதி உளவுத் துறையின் முன்னாள் சூத்திரதாரி குடும்பத்துக்கு என்ன ஆனது?
பிரிட்டன் உளவு பிரிவு மற்றும் மற்ற ஐரோப்பிய உளவு அமைப்புகளுடன் பல ஆண்டுகளாகத் தொடர்பிலிருந்த ஒரு மூத்த செளதி பாதுகாப்பு அதிகாரியின் குடும்பத்தினர் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ளதாக ஓர் ஐரோப்பிய உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான அல் கொய்தாவின் வெடிகுண்டு திட்டத்தை முறியடிக்க உதவிய சாட் அல் ஜப்ரி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆதரவாளர்கள் குறிவைப்பதற்கு முன்னர் நாட்டை விட்டு தப்பித்துச் சென்றார்.
சிங்கம்பட்டி ஜமீன்தார் மறைவு: யார் இந்த டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி?
சிங்கம்பட்டி ஜமீனின் 31-வது வது பட்டம், கடைசி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வயது முதிர்வு காரணமாக காலமானர். அவருக்கு வயது 89.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் உள்ளது சிங்கம்பட்டி ஜமீன். தமிழ்நாட்டில் இருந்த 72 பாளையங்களில் சிங்கம்பட்டியும் ஒன்று.
சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்படாதா? #BBCRealityCheck
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஐந்து மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையிலும், அது ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தல் சிறிதும் குறைந்தபாடில்லை. குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவலுக்கு ஈடாக அதுகுறித்த போலிச் செய்திகளும் அதிவேகமாக பரவி வருகின்றன.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான சில போலிச் செய்திகள் குறித்த பின்னணியை பார்ப்போம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: