ஓ. பன்னீர்செல்வம் - தமிழக துணை முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

ஓ. பன்னீர்செல்வம்

பட மூலாதாரம், Getty Images

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை (மே 24) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வந்தார். அவருக்கு சில பரிசோதனைகளைச் செய்ய வேண்டுமெனக் கூறியதால் அந்த மருத்துவமனையிலேயே சேர்க்கப்பட்டார்.

இன்று காலையில் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், அவருடைய உடல்நலம் சீரான நிலையில் இருப்பதாக எம்.ஜி.எம். மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இன்று பகலில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி துணை முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். துணை முதல்வர் இன்று மாலை வீடு திரும்புவார் என எம்.ஜி.எம். மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: