கோவிட் 19: சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது - அண்மைய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் புதிதாக 765 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் எட்டு நபர்கள் இறந்துள்ளனர் என்பதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று இறந்தவர்களில் ஐந்து நபர்கள் சென்னையில் சிகிச்சை எடுத்துவந்தவர்கள், மற்ற இரண்டு நபர்களும் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள். இவர்கள் அனைவருக்கும் நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்தஅழுத்தம், உடல்பருமன், மூச்சு திணறல் மற்றும் சர்க்கரை நோய் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களை விட ஆண்களே அதிகம் இறப்புகளுக்கு ஆளாகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. இன்று இறந்த எட்டு நபர்களில் ஒருவர் மட்டுமே பெண் மற்ற ஏழு நபர்களும் ஆண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இவர்கள் அனைவரும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

இன்று பாதிப்புக்கு உள்ளான 765 நபர்களில் 47 நபர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள், துபாய், பிலிப்பைன்ஸ், பிரிட்டன், மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து வந்தவர்கள்.

பட மூலாதாரம், Getty Images
அதிக பாதிப்புகளை கொண்டுள்ள சென்னை நகரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்படும் 68 கொரோனா சோதனை மையங்களில், இதுவரை 4,09,615 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று ஒரே நாளில் 12,275 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 833 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,324ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதால், தமிழகத்தில் 5,643 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் நாளை (மே 25) முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க உள்ளது. இந்த நிலையில், நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கான வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
- விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகள் தங்கள் விவரங்களை TNePass தளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் .
- கொரோனா அறிகுறி இல்லாதவர்களும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
- பயணிகள் விமான நிலையம் வருவதற்கு பயன்படுத்தும் வாகனத்தையும் TNePass தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
- சென்னை வரும் பயணிகள், TNePass மையத்தில் தங்களது முன்பதிவை காட்ட வேண்டும். இல்லை என்றால் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: தமிழகத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 14,753ஆக உயர்வு - இன்றைய நிலவரம்
- வடமாநில தொழிலாளர்கள்; வங்கதேச ரயில்கள் மற்றும் சில போலிச் செய்திகள்
- கொரோனா தொற்று உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் தொற்று இல்லாத குழந்தைகள்
- அரசுச் செலவினங்களைக் கடுமையாகக் குறைக்க தமிழக அரசு உத்தரவு - முக்கிய அறிவிப்புகள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












