You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பால்கர் சாதுக்கள் கொலை: ‘அடி, ஷோயிப் அடி’ - வைரலான வீடியோவின் உண்மைத்தன்மை என்ன?
- எழுதியவர், கீர்த்தி துபே
- பதவி, பிபிசி செய்தியாளர்
மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் நகர் அருகேயுள்ள கிட்சிஞ்சலே கிராமத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதியன்று துறவிகள் அடித்துக் கொல்லப்பட்ட காணொளி வைரலானது. அதே நேரத்தில், இந்த சம்பவத்திற்கு அரசியல் வண்ணத்தை பூசும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வியாழக்கிழமையன்று இரவு, மூன்று பேரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. கொல்லப்பட்டவர்கள் 70 வயதான மகாராஜ் கல்பவ்ரிக்ஷ்கிரி, 35 வயதான சுஷில் கிரி மகாராஜ் என்ற இரண்டு சாதுக்கள் மற்றும் அவர்களது வாகன ஓட்டுநரான நீலேஷ் தெல்கானே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக 110 பேரை பால்கர் போலீசார் கைது செய்துள்ளனர், அவர்களில் 9 பேர் சிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக இரண்டு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளியின் பல சிறிய பகுதிகள் வைரலாகிவிட்டன. இதில் சாதுக்கள் கூட்டத்தின் முன் கைக்கூப்பி இறைஞ்சி அழுகிறார்கள், ஆனால் கைகளில் தடிகளை ஏந்திய கும்பல் அவர்களைத் தாக்குகிறது. இந்த வீடியோக்களில் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போலீசார் திணறுவதையும் காணமுடிகிறது.
இந்த சம்பவத்தின் 45 விநாடி வீடியோ பகிரப்பட்டு வைரலாகிறது. "மார் ஷோயிப் மார்" என்று கத்திக் கொண்டு வெறித்தனமான கூட்டம் கொலைவெறி தாக்குதல் நடத்துவதாக ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் பகிரப்படும் இந்த வீடியோவுடன் எழுதப்பட்டுள்ளது.
வீடியோவில் 'ஷோயிப்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக சுதர்சன் நியூஸ் எடிட்டரும் திரைப்பட தயாரிப்பாளருமான அசோக் பண்டிட் போன்ற பலர் கூறுகின்றனர்.
ஒரு பயனர் எழுதுகிறார் - "கண்கள் பனிக்கின்றன, இதயம் கனக்கிறது. மற்றவரின் உயிரைப் பறித்து வாழ்வதும் ஒரு வாழ்வா? இந்த வீடியோவின் 42வது விநாடியில் பேசுவதை கேட்கும்போது உங்களுக்கே புரிந்துவிடும். "மார் ஷோயிப் மார்" #palgharlynching
இது உண்மையா என்பதை தெரிந்துக் கொள்வதற்காக, இந்த வீடியோவை நாங்கள் கவனமாக ஆராய்ந்தோம். இந்த வீடியோவின் 43 வது வினாடியில், சாதுக்களைக் கொன்ற கூட்டத்தினரிடம் "ஓ போதும், போதும்" என்று ஒருவர் கூச்சலிடுவதை கேட்க முடிகிறது. ஆனால், சமூக ஊடகங்களில் சிலர் இந்த சம்பவத்திற்கு ’அடி, ஷோயிப் அடி” என்று கூறி பிரிவினை ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கிடிஞ்சலே கிராமத்தில் 248 குடும்பங்கள் வசித்து வருகின்றன, மொத்த மக்கள் தொகை 1208. மும்பையின் தேர்தல் கணக்கெடுப்பின் அமைப்பு ‘போல் டயரி’, கிடிஞ்சலே கிராமத்தின் மக்கள் தொகை மற்றும் சமூக அம்சங்களை ஆய்வு செய்துள்ளது. அதன்படி இந்த கிராமத்தில் 1,198 குடும்பங்கள் பழங்குடியினர், ஒரு குடும்பம் மட்டுமே பின்தங்கிய சாதியைச் சேர்ந்தவர்கள்.
56 சதவிகித மக்கள் கோக்னா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 34 சதவிகிதத்தினர் வோர்லி சமூகம், 6 சதவிகிதத்தினர் கத்காரி சமூகம் மற்றும் 4 சதவிகிதத்தினர் மல்ஹார் எனப்படும் மலை சாதியினர்.
தரவுகளின்படி, இந்த கிராமத்தில் சிறுபான்மை மக்கள் இல்லை என்பது தரவுகளிலிருந்து தெளிவாகிறது.
இந்நிலையில், பால்கர் சம்பவம் தொடர்பாக இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அதில் ஒருவர் கூட முஸ்லீம் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டும் விதமாக கைது செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலையும் அம்மாநில உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அன்று இரவு உண்மையில்என்ன நடந்தது?
திங்களன்று, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்த முழு விஷயத்தையும் குறித்த தனது அறிக்கையை வீடியோ மூலம் வெளியிட்டார், இது இனவாத வன்முறை வழக்கு அல்ல என்று தெளிவாகக் கூறினார். கிராமத்தில், சிலர் குழந்தைகளைத் கடத்தி சிறுநீரகங்களை திருடிச் செல்கிறார்கள் என்று ஒரு வதந்தி பரவியது.
’சூரத்தில் ஒரு இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இரண்டு துறவிகள் காரில் சென்றார்கள், நாட்டில் முடக்கநிலை அறிவிக்கப்ப்ட்டிருந்ததால், அவர்கள் குஜராத்-மகாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ள தாத்ராநகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் உள்ள சில்வாஸாவின் வழியாகச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், அவர்கள் அங்கு தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டார்கள். அவர்கள் திரும்பி வரும்போது, குழந்தை திருடர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கிடிச்சிஞ்சலே கிராம மக்கள் காரை நிறுத்தினார்கள்’ என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
இதற்குப் பிறகு, அந்த கும்பல் நடத்திய கொடூர தாக்குதலின் வீடியோக்கள் நாட்டில் தற்போது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த வன்முறையில் மூன்று பேரும் இறந்துள்ளனர். ஆனால், அந்த கொடூரமான கொலைக்கு பல்வேறு வண்ணங்களை பூசும் வேலை இப்போது நடைபெறுகிறது. வகுப்புவாத சம்பவமாக மாற்றும் முயற்சிகளும் மும்முரமாகிவிட்டன.
வீடியோவில் "மார் ஷோயிப் மார்" என்று கூறப்படுவதாக சொல்வது தவறானது . தற்போது பால்கர் வழக்கின் விசாரணையை மகாராஷ்டிரா அரசு, மாநில சிஐடியிடம் ஒப்படைத்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: