ரிலையன்ஸ் ஜியோவில் பங்குகளை வாங்கிய ஃபேஸ்புக் - யாருக்கு என்ன லாபம்?

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5700 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான, 9.9 % பங்குகளை வாங்கியுள்ளது சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக்.

இதன்மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சிறுபான்மை பங்குதாரர்களிலேயே அதிக அளவிலான பங்குகளைக் கொண்டுள்ள பங்குதாரர் ஆகியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

இசை, நேரலை ஒளிபரப்பு, ஆன்லைன் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் இயங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் பங்குதாரர் ஆகியுள்ளதன் மூலம் இந்திய வர்த்தகச் சந்தைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது ஃபேஸ்புக்.

இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ஏற்கனவே உள்ள தொழில் ஆதாயங்களை விரிவுபடுத்த இந்த பங்கு வாங்கல் உதவும்.

ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்துக்கு உலகிலேயே அதிக பயனாளர்கள் உள்ள நாடாக இந்தியா உள்ளது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான உடனடி செய்திப் பரிமாற்றச் செயலியான வாட்சப்புக்கு இந்தியாவில் சுமார் 30 கோடி பயனாளர்கள் உள்ளனர்.

"இந்தியா மீதான எங்களுக்குள்ள உறுதிபாட்டை இந்த முதலீடு காட்டுகிறது மேலும் நாட்டில் ஜியோ ஏற்படுத்தியுள்ள மிகப்பெரிய மாற்றம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

இது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எப்படி உதவும்?

சமீப ஆண்டுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு கடன்சுமை அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில், இந்தப் பங்கு விற்பனை மூலம் கிடைத்துள்ள பணம் பேருதவியாக இருக்கும்.

2021 மார்ச் மாதத்துக்குள், அதாவது நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், கடன் ஏதும் இல்லாத நிறுவனமாக மாற வேண்டும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இலக்கு வைத்துள்ளது.

2016ஆம் ஆண்டு ஜியோ தொடங்கப்பட்ட சமயத்திலிருந்து தற்போது வரை 370 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது அந்நிறுவனம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: