கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுகிறதா? உண்மை என்ன?

corona virus

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கீர்த்தி துபே
    • பதவி, பிபிசி

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இந்த வைரஸ் பரவல் எவ்வாறு வலுப்பெற்றது, இதற்கான சிகிச்சை என்ன என்பது பற்றி எதுவும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த வைரஸ் தொடர்பான அதிகபட்ச அளவிலான தகவல்களை சேகரிக்க பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் குறித்து மக்கள் மத்தியில் பல தகவல்கள் பரவி வருகின்றன. இவற்றில் சில போலியானவை அல்லது உறுதிப்படுத்தப்படாதவை.

சமூக ஊடகங்கள் மற்றும் செயலிகளின் வாயிலாக கொரோனா குறித்த தகவல்கள் வேகமாக வெளியாகின்றன. இதில் ஒரு செய்தி மிகவும் பரவலாகப் பகிரப்படுகிறது.

"கொரோனா வைரஸ் காற்றில் பரவும் வைரஸ். இது எட்டு மணி நேரம் காற்றில் உயிருடன் இருக்கக்கூடியது. எல்லோரும் எல்லா இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். இது எஃகு மீது 2 மணிநேரமும், காகிதம் மற்றும் பிளாஸ்டிக்கில் 3-4 மணிநேரமும், காற்றில் 8 மணி நேரமும் உயிர்வாழ முடியும்," என்ற செய்தியே அது.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

'காற்றுவழிப் பரவல்'

இந்த செய்தி வாட்ஸ்அப் மூலம் பிபிசிக்கு கிடைத்தது, இது பல குழுக்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த செய்தியுடன் சி.என்.பி.சி செய்திக்கான இணைப்பும் பகிரப்பட்டுள்ளது.

காற்று வழியாகப் பரவும் வைரஸ் கொரோனா என அறிவிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய முயற்சித்தோம்.

முதலாவதாக, சி.என்.பி.சி யின் அந்தக் கட்டுரையைப் படித்தோம். அதில் கோவிட் -19 ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

மார்ச் 16 அன்று வெளியிடப்பட்ட இந்த கட்டுரையில், "கொரோனா வைரஸ் மருத்துவப் பணியாளர்களுக்கு 'காற்று வழியாக பரவுமா' என்பதை உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆராய்ந்து வருகிறது. "

"ஒரு குறிப்பிட்ட பரப்பு அதற்கு ஏற்றாற்போல் இருந்தால், கொரோனா வைரஸ் காற்றில் உயிர்வாழ முடியும் என்று ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டிருப்பதை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், மார்ச் 17ஆம் தேதியன்று, அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.எச்) ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், கொரோனா வைரஸ் மூன்று முதல் நான்கு மணி நேரம் காற்றில் உயிருடன் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

சுகாதார வசதிகள்

இந்த கூற்றை நாங்கள் மேலும் ஆராய்ந்தபோது, பிப்ரவரி 11 அன்று நடந்த உலக சுகாதார நிறுவனத்தின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான விஷயங்கள் கிடைத்தன.

டெட்ரோஸ் அதானோம் கிப்ரியேசோஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெட்ரோஸ் அதானோம் கிப்ரியேசோஸ்

அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதன் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கிப்ரியேசோஸ், "கொரோனாவும் இபோலாவும் ஒரே மாதிரியானவை அல்ல, கொரோனா என்பது காற்றின் மூலமாக பரவும் ஒரு வைரஸ். எனவே இது அதிகம் ஆபத்தானது, மிகக்குறுகிய காலத்திலேயே 24 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதை நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். "

மார்ச் 16ஆம் தேதியன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் வளர்ந்து வரும் நோய்கள் துறையின் தலைவர் டாக்டர் மரியா கெர்கோவ், "கொரோனா வைரஸ் சிறிது நேரம் காற்றில் உயிருடன் இருக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது" என்று கூறினார். அதாவது இந்த வைரஸ்கள் இயல்பைவிட அதிக நேரம் காற்றில் உயிருடன் இருக்க முடியும்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

"மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சுகாதார வசதிகள் அதிக ஆபத்தில் உள்ளன. எனவே, அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும், காற்று மூலம் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளை கவனமாக எடுக்க வேண்டும். ஆனால் சாதாரண மக்களுக்கு தொற்று இல்லை என்றால் மருத்துவ முகக்கவசங்களை எப்போதும் அணிய வேண்டியதில்லை. அதேபோல் பாதிக்கப்பட்ட நபருடன் வாழ்கிறீர்கள் என்றால் முகக்கவசத்தை பயன்படுத்தலாம்," என்றார் அவர்.

மார்ச் 23 அன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங், "இதுவரை காற்று மூலம் பரவியதால் கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. கோவிட் -19 காற்றில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சீன அதிகாரிகளிடமிருந்து தகவல்கள் வந்துள்ளன. அதிலும் குறிப்பாக மருத்துவமனைகளின் ஐ.சி.யு மற்றும் சி.சி.யுக்களில், இந்த ஆபத்து அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதைப் புரிந்து கொள்ள, கூடுதல் தரவுகள் தேவை," என்று தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

"பாதிக்கப்பட்ட நபரின் இருமல், தும்மலின்போது வெளியே வரும் நீர்த்துளிகளே, அத்துடன் தொடர்பு கொண்டவர்களுக்கு பரவக் காரணமாக இருந்தன. எனவே மற்றவர்களிடம் இருந்து சற்று தூரமாக இருப்பதை உறுதி செய்யவேண்டும். அதோடு, கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்."

உண்மையில், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை ஊழியர்கள், இதுபோன்ற தூசுப்படலம் (Aersol) தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.

தூசுப்படலத்தில் உள்ள நீர் துகள்கள் நீர்த்துளிகளைவிட லேசானவை. மேலும் அவை காற்றில் நீடித்து இருக்கக்கூடியவை.

இத்தகைய சூழ்நிலையில், கொரோனா வைரஸ், காற்று மூலம் நோயை தொற்றச் செய்யும் ஆபத்தான நீர் துகள்களை உருவாக்கும் என்பதும், இது சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கருதப்படுகிறது.

இதுவரை எதுவும் பதிவாகவில்லை

கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுவதற்கான வாய்ப்பை உலக சுகாதார நிறுவனம் நிராகரிக்கவில்லை என்று பிபிசி தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.

கொரோனா வைரஸ்

ஆனால் இந்த ஆபத்து பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கு மட்டுமே என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

இந்த வைரஸ் எவ்வளவு காலம் காற்றில் இருக்க முடியும் என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் எந்த தகவலையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில், காற்றில் எட்டு மணி நேரம் கொரொனா வைரஸ் வாழும் என்ற கூற்று முற்றிலும் தவறானது.

காற்றில் கொரோனா நோய்த்தொற்று பரவியதால் கோவிட்-19 நோய்க்கு ஒருவர் ஆளானதாக இதுவரை எதுவும் பதிவாகவில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: