இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் அறிவிப்பு - சரிவும் சவால்களும்

பட மூலாதாரம், Getty Images
நடப்பு 2019-2020ஆம் நிதியாண்டுக்கான மூன்றாவது காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 4.7% வளர்ச்சி கண்டுள்ளது என இந்திய அரசு அறிவித்துள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டின் வளர்ச்சி விகிதமான 4.7 சதவிகிதம், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டின் வளர்ச்சி விகிதம் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட 4.5 சதவிகிதத்தை விடவும் அதிகம்.
எனினும் இரண்டாவது காலாண்டின் வளர்ச்சி விகிதம் 5.1% என்று திருத்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசின் புள்ளிவிவரங்களின்படி இரண்டாவது காலாண்டைவிட மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் சரிவையே சந்தித்துள்ளது.
அரசின் செலவீனங்கள் அதிகமாக இருந்ததால் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி, இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 4.5 % முதல் 5 % வரை இருக்கும் என்று வல்லுநர்கள் கணித்திருந்தனர்.
வேளாண்மை, கட்டுமானம், உற்பத்தி ஆகிய துறைகளில் எந்த குறிப்பிட்ட முன்னேற்றமும் மூன்றாவது காலாண்டில் உண்டாகவில்லை.
கொரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகளில் உண்டாகியுள்ள பொருளாதார சரிவுகள் ஏற்படுத்திய தாக்கங்கள் நடப்பு காலண்டான நான்காவது மற்றும் கடைசி காலாண்டில் எதிரொலிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுவதால், இந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் மேற்கொண்டு முன்னேற்றம் காண்பது சவாலானதாகும்.
இதன் காரணமாக, இந்திய அரசு விரும்புவது போல 2019-2020ஆம் நிதியாண்டில் 5% பொருளாதார வளர்ச்சி உண்டாகுமா என்பது கேள்விக்குறியே.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













