டெல்லி வன்முறை: ட்வீட் செய்வதை தவிர கேஜ்ரிவாலால் வேறு எதாவது செய்ய முடியுமா?

பட மூலாதாரம், @ARVINDKEJRIWAL
வடகிழக்கு டெல்லியின் நிலைமை ஞாயிற்றுக்கிழமை பின்மாலைப் பொழுதில் பதற்றமடையத் தொடங்கியது. ஜாஃபராபாத் மற்றும் மோஜ்பூரில் நிலைமை பதற்றமானது.
ஒரு காலத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தவரும், தற்போது பாஜகவில் இணைந்திருப்பவருமான கபில் மிஸ்ரா ஞாயிற்றுக்கிழமை மாலையன்று 'காவல்துறையினர் சொல்வதைக் கேட்க வேண்டாம்' என்று உணர்ச்சியை தூண்டிவிடும் கருத்தை வெளியிட்டிருந்தார்.
மாலையில், சி.ஏ.ஏ ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் மோஜ்பூர் பகுதியில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. அதோடு, மத அடிப்படையில் மக்களைத் தடுத்து வன்முறை செய்ததாக செய்திகள் வந்தன.
கேஜ்ரிவாலின் முதல் ட்வீட்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
ஆனால் டெல்லியின் நிலைமை குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் திங்கள்கிழமை பிற்பகல் மூன்றரை மணிக்கு தனது முதல் ட்விட்டர் செய்தியை பதிவிட்டார்.
டெல்லி எரிந்துக் கொண்டிருக்கிறது, பல பகுதிகள் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்தபோது பெரும்பான்மை பலத்துடன் டெல்லியின் முதலமைச்சராக பதவியேற்ற அரவிந்த் கேஜ்ரிவால் ட்வீட் செய்து கொண்டிருந்தார்.
அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்ட தனது முதல் ட்வீட்டில், "டெல்லியின் சில அமைப்புகள் சமாதானத்தை ஏற்படுத்தவிடாமல் பிரச்சனை செய்வதாக கவலைதரும் தகவல்கள் வந்துள்ளன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அமைதியை மீட்டெடுக்கவும் மாநில துணைநிலை ஆளுநரும், உள்துறை அமைச்சருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன்".
இதன் பின்னர், கேஜ்ரிவால் துணைநிலை ஆளுநர் அனில் பைஜலுடன் பேசினார். அமைதியாக இருக்குமாறு கோரிக்கை விடுத்து மற்றுமொரு ட்வீட் செய்தியை வெளியிட்டார்.
"தயவுசெய்து வன்முறையை கைவிடுங்கள். இதன் மூலம் யாரும் பயனடையப் போவதில்லை. அமைதியாக இருப்பது எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும்" என்று கேஜ்ரிவால் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
ஆம் ஆத்மி கட்சியின் பல தலைவர்களும் அமைதியைக் காக்குமாறு ட்விட்டரில் தொடர்ந்து முறையிட்டனர். கேஜ்ரிவால் அவற்றை ரீ-ட்வீட் செய்து கொண்டே இருந்தார்.
கேஜ்ரிவாலின் அறிக்கை
'மூன்று தசாப்தங்களில் டெல்லியில் முதல்முறையாக அச்சத்தை உணர்ந்ததாக' கவலையை வெளிப்படுத்தி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியாவும் ட்வீட் செய்துள்ளார்.
இதன் பிறகு, செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு ட்வீட் செய்த கேஜ்ரிவால் டெல்லியின் நிலைமை குறித்து மீண்டும் கவலை தெரிவித்தார்.
இந்த நேரத்தில், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வன்முறை பரவியதாக செய்திகள் வந்தன.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய கேஜ்ரிவால், டெல்லியின் நிலைமை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். பின்னர் டெல்லி மக்கள் அமைதியை நிலைநாட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
"பிரச்சனைகள் என்னவாக இருந்தாலும், அனைவரும் உட்கார்ந்து பேசி தீர்வை எட்டலாம். வன்முறையினால் எந்த தீர்வும் எட்டப்படாது. அமைதியாக இருக்க வேண்டும் என்பதே எனது மிகவும் தாழ்மையான வேண்டுகோள்" என்று கேஜ்ரிவால் தெரிவித்தார்.
வன்முறையில் கொல்லப்பட்ட மக்களைப் பற்றி குறிப்பிட்ட அவர், "கொல்லப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நம்முடைய சொந்த மக்கள், வன்முறை அதிகரித்தால், இந்த எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்" என்று தனது கவலையை தெரிவித்தார்.

பட மூலாதாரம், EPA
அமித் ஷாவுடன் சந்திப்பு
இதன் பின்னர், டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜலுடன் சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் அரவிந்த் கேஜ்ரிவால்.
சந்திப்புக்குப் பிறகு, டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். உள்துறை அமைச்சரை சந்தித்த பிறகு, கேஜ்ரிவால் கட்சித் தலைவர்களுடன் ராஜ்காட் சென்று டெல்லியின் அமைதிக்காக பிரார்த்தனை செய்தார்.
ஆனால் இது வன்முறையைத் தடுக்கவில்லை அல்லது மக்களுக்கு நிவாரணம் ஏதும் கிடைக்கவில்லை. ஒரு முதலமைச்சராக கேஜ்ரிவால் இன்னும் கொஞ்சம் அதிகமாக செய்திருக்கலாம் என்றே அனைவரும் நம்புகின்றனர்.
"நிலைமை மோசமாகும் இதுபோன்ற இடங்களுக்கு செல்வது டெல்லி முதலமைச்சரின் முதல் பொறுப்பாகும். அவர் செல்வாக்குமிக்க நபர்களின் குழுக்களை உருவாக்கி மக்களைச் சந்தித்து வன்முறையை நிறுத்த வேண்டும்" என்று சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் பிரமோத் ஜோஷி.
"டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவால் மிகவும் செல்வாக்கு மிக்கவர், அவரது அரசின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அவரிடம் இருக்கும் முழு அமைப்பு ஆகியவற்றின் மூலம் மக்களைத் தொடர்பு கொண்டு மக்களுக்கு நிலைமையை விளக்கி, பிரச்சனையை தீர்க்கும் முயற்சிகளை அவர் எடுக்க முடியும்" என்று பிரமோத் ஜோஷி கூறுகிறார்.
"இது சட்டம் ஒழுங்கு தொடர்பான விஷயம் மட்டுமல்ல, மக்களிடையே பதற்றமும், குழப்பமும் உள்ளது. பொதுமக்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் அவற்றை அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், AFP
ஆம் ஆத்மி கட்சியின் தரப்பு
மறுபுறம், ஆம் ஆத்மி கட்சி, தனது எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்கள் தொடர்ந்து களத்திற்குச் சென்று மக்களை சந்தித்து அமைதியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுப்பதாக ஆம் ஆத்மி கட்சி தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் கூறுகிறார்.
தலைநகரின் மோசமான நிலைமைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது நேரடியாக குற்றம் சாட்டும் சஞ்சய் சிங், "நிலைமை மோசமடைந்து கொண்டிருந்தபோது, உள்துறை அமைச்சர் ராணுவத்தை அழைத்திருக்க வேண்டும், ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்க வேண்டும். இந்த முயற்சிகள் சரியான நேரத்தில் செய்யப்படவில்லை என்பதால் தான் நிலைமை மோசமடைந்தது" என்று கூறுகிறார்.
"வன்முறையை பரப்புபவர்களுக்கு யார் பாதுகாப்பு கொடுக்கிறார்கள், அவர்கள் ஏன் தடுக்கப்படவில்லை என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. அமித் ஷா நாட்டின் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து, டெல்லியின் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது."

பட மூலாதாரம், Getty Images
டெல்லியின் சட்டம் ஒழுங்கு மற்றும் டெல்லி காவல்துறையின் கட்டுப்பாடு ஆகியவற்றின் பொறுப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கையில் உள்ளது. டெல்லியில் சட்டம் ஒழுங்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், கேஜ்ரிவால் உள்துறை அமைச்சகத்தின் மீது கேள்வி எழுப்புகிறார், டெல்லி காவல்துறையை டெல்லி அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகிறார்.
ஆனால் இப்படிச் சொல்லிவிட்டு, அவர் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியுமா? என்ற கேள்விக்கு, பிரமோத் ஜோஷி பதிலளிக்கிறார். "டெல்லி அரசின் கீழ் காவல்துறை வரவில்லை, இது போன்ற பல விஷயங்கள் டெல்லி அரசாங்கத்திற்கு சாத்தியமில்லை. ஆனால் கேஜ்ரிவாலிடம், மாநில நிர்வாகமும், கட்சித் தொண்டர்களும் இருக்கின்றனர். மக்களிடம் செல்வாக்கு அதிகமுள்ள கேஜ்ரிவால் ட்வீட் செய்வதைத் தவிர, ஒரு முதலமைச்சராக இன்னும் அதிகம் செய்ய முடியும். "
"கேஜ்ரிவால் மக்களின் மத்தியில் செல்ல வேண்டும். அவர் நேரடியாக களத்திற்குச் செல்ல வேண்டிய சந்தர்ப்பங்களும் உள்ளது. நீங்கள் மக்களிடையே செல்ல வேண்டும். நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்த வேண்டும். இரவு பகலாக பணியாற்றி மக்களுக்கு புரிய வைக்கும் பெரும்பணி அவருக்கு இருக்கிறது" என்று பிரமோத் ஜோஷி கூறுகிறார்.
"காவல்துறையினர் என்ற சக்தி தங்களிடம் இல்லை என்பதை ஒரு சாக்குப்போக்காக சொல்லாமல், இதையும் கடந்துச் செல்ல வேண்டும். அவர் ஒரு முதலமைச்சராக செய்ய வேண்டிய அனைத்தையும் சரியாக செய்யவில்லை."

பட மூலாதாரம், EPA
மறுபுறம் இந்தக் குற்றச்சாட்டுக்களைப் பற்றி சஞ்சய் சிங் என்ன கூறுகிறார் தெரியுமா? "எங்கள் எம்.எல்.ஏக்கள் இரவில் துணைநிலை ஆளுநரின் வீட்டிற்கு சென்றார்கள். ஆனால் அவர்களை துணைநிலை ஆளுநர் சந்திக்கவில்லை. எங்கள் பிரதிநிதிகள் போலீஸ் கமிஷனரை சென்று சந்தித்தனர். அரவிந்த் கேஜ்ரிவால் அனைத்து கட்சித் தலைவர்களையும் மக்களைத் தொடர்பு கொள்ளச் சொன்னார். அமைதிப் பேரணியில் கலந்துக் கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார்."
"டெல்லியை அமைதிப்படுத்துவதற்காக நாங்கள் எல்லாவற்றையும் செய்துள்ளோம். போலீஸ் படை இல்லாத ஒரு முதலமைச்சர் தன்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்துள்ளார்" என்று சஞ்சய் சிங் சொன்னார்.
ஆம் ஆத்மி கட்சி இந்த மாதம் தான் டெல்லியில் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. "டெல்லியில் கலவரத்தை செய்வதற்காக ஒரு பெரிய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த குழப்பமான நிலைமைகளுக்கு மத்திய அரசே பொறுப்பு. டெல்லி அமைதியாக இருப்பதை அமித் ஷா விரும்பவில்லை."
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நேரத்தில், அரவிந்த் கேஜ்ரிவாலும் அவரது கட்சியும் இந்த ஆர்ப்பாட்டங்களிலிருந்து விலகி நிற்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
"சி.ஏ.ஏவுக்கு எதிரான இயக்கம் நடந்து கொண்டிருப்பதால், ஆம் ஆத்மி கட்சியும், கேஜ்ரிவாலும் இந்த பகுதிகளில் முன்பே தொடர்பை வைத்திருக்க வேண்டும். சில அரசியல் காரணங்களுக்காக, இந்த பகுதிகளிலிருந்து சற்று விலகியிருப்பது நல்லது என்று அவர் நினைத்திருக்கலாம்" என்கிறார் பிரமோத் ஜோஷி.
அதே நேரத்தில், பல பத்திரிகையாளர்களும் அரவிந்த் கெஜ்ரிவாலின் பங்கு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். "ஏதாவது சொல்லுங்கள், கேஜ்ரிவால் ஜி, நீங்கள் டெல்லி முதல்வர். இப்படி இருப்பது புத்திசாலித்தனம் அல்ல, கோழைத்தனம். துன்பப்படுபவர்களுக்கு ஆதரவளிக்கவும்" என்று பத்திரிகையாளர் சுவாதி சதுர்வேதி ட்வீட் செய்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
ட்வீட் செய்வதை விட வேலை செய்யுங்கள் என்று கெஜ்ரிவாலுக்கு அறிவுறுத்துகிறார் நடிகை ஸ்வரா பாஸ்கர். இந்த ட்வீட்டிற்குப் பிறகு, கேஜ்ரிவாலுக்கு ட்விட்டரில் ஸ்வாரா பாஸ்கரைப் பின்தொடர்ந்தார்.

பட மூலாதாரம், EPA
தலைநகர் டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வன்முறை தொடர்கிறது. வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. மத இடங்கள் அனைத்தும் குறிவைக்கப்பட்டன. இருபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதும், நூற்றியைம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













