ஹெச்.ராஜா நாராயணசாமிக்கு பதிலடி - 'காங்கிரஸ்காரர்கள் இத்தாலி பெண்ணின் அடிமை'

ஹெச்.ராஜா

பட மூலாதாரம், Hraja / facebook

தமிழக அரசை நரேந்திர மோதியின் அடிமை ஆட்சி என்று விமர்சித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை இத்தாலிப் பெண்ணின் அடிமை என்று கடுமையாக பதில் விமர்சனம் செய்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா.

News image

நீட் தேர்விற்கு எதிராக திராவிடர் கழகம் நேற்று நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, "மத்திய அரசை எதிர்த்து தமிழகத்தில் இருந்து எதற்கும் குரல் கொடுத்ததில்லை, இதன் மூலம் தமிழகத்தில் நரேந்திர மோதி அரசின் அடிமையாட்சி நடப்பது தெரிகிறது," என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடலூர் பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில் விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றமபலத்தில் உள்ள பாஜக நிர்வாகிகளை சந்திப்பதற்காக சென்றிருந்தார்.

பாஜக நிர்வாகிகளை சந்தித்த பின்னர், பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஹெச்.ராஜா.

புதுவை முதல்வர் நாராயணசாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதுவை முதல்வர் நாராயணசாமி

தமிழகத்தில் மோதி அரசின் அடிமையாட்சி நடக்கிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியது குறித்து அப்போது கருத்து கூறுகையில், "நாராயணசாமி இத்தாலி பெண்மணியின் அடிமை, இத்தாலி சோனியாவின் அடிமை இதைப்பற்றியெல்லாம் பேசலாமா," என்று கேள்வி எழுப்பினார்.

"முதலில் காங்கிரஸ்காரர்கள் நாங்கள் அந்நியர்களின் கைக்கூலியாக இருக்க மாட்டோம், அந்நியப் பெண்மணியின் அடிமையாக இருக்க மாட்டோம் என்று முதலில் முடிவு செய்யட்டும். அதன் பிறகு, இதைப்பற்றி அவர் பேசட்டும். மரியாதை இல்லாத அரசியல் நடத்துவது என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக ஆகிய கட்சிகள் முடிவு செய்துள்ளனர். எனவே, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது," என தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: