அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், பி.வி.சிந்து, கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் உள்ளிட்ட 141 பேருக்கு பத்ம விருது

பட மூலாதாரம், Getty Images
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷண் விருதும், அமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த வேணு ஸ்ரீநிவாசன், மனோகர் தேவதாஸ், பிரதீப் மற்றும் ஷாபி மஹபூப், ஷேக் மஹபூப் உள்ளிட்டோரும் பத்ம ஸ்ரீ விருதுகள் பெறுகின்றனர்.

பட மூலாதாரம், Pool/getty Images
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜேட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 16 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படுகிறது.
தெலங்கானாவை சேர்ந்த பி.வி.சிந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகர் முகமது ஷெரீஃப் என்பவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் உறவினர்கள் அல்லாத 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஜகதீஷ் லால் அவுஜாவுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஜாவத் அஹமத் டாக் (46) என்பவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













