இஸ்ரோ தலைவர் சிவன் - "இந்தியா ஒருநாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும், ஆனால் தற்போது இல்லை"

"மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக நான்கு விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த மாத இறுதியில் பயிற்சிக்காக ரஷ்யா செல்வார்கள்," என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

மேலும், சந்திரயான் - 3 திட்டம் தொடங்கி, அதன் வேலைகள் வேகமாக நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவனிடம், நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் குறித்து கேட்டதற்கு, "ஒரு நாள் இந்தியா கட்டாயம் நிலவுக்கு மனிதனை அனுப்பும். ஆனால், தற்போதைக்கு இல்லை" என்று குறிப்பிட்டார்.

ககன்யான் குறித்து மேலும் பேசிய அவர், 1984ஆம் ஆண்டு இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா ரஷ்ய விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார். ஆனால், தற்போது இந்திய வீரர்கள் இந்தியாவில் இருந்து இந்திய விண்கலத்தில் செல்ல இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

இந்திய விண்வெளி ஆராச்சி மையம் சந்திரயான்-3 மற்றும் ககன்யான் திட்ட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

சந்திரயான்- 2 நிலவில் தறையிரங்கும் முயற்சி தோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து சந்திரயான்- 3 மூலம் அதனை சாத்தியமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :