You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிஏஏவா...? சிசிஏவா...? ஒற்றை எழுத்தில் கேலிக்குள்ளான பாஜகவின் ட்விட்டர் டிரெண்ட்
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அந்த சட்டத்துக்கு ஆதரவாக இணையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மேற்கொண்ட பிரசாரம் பெரும் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) ஆதரவாகவும், எதிராகவும் ட்விட்டரில் பல ஹாஷ்டேகுகள் கடந்த சில தினங்களாக டிரெண்டாகி வந்தன.
இந்த சூழலில், #IndiaSupportsCCA என்ற ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இந்த டிரெண்டை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த குறிப்பிட்ட ஹாஷ்டேக் #IndiaSupportsCAA என்று இருந்திருக்க வேண்டும். ஒரே ஒரு எழுத்து மாறியதால் பெரும் நையாண்டிக்கு உள்ளாகி வருகிறது பாஜக.
ட்விட்டர் பயனர்கள் பலரும் பாஜக ஐ.டி விங்கின் தவறை சுட்டிக்காட்டி கேலி செய்து வருகின்றனர்.
சிலர் CCAவுக்கான குசும்புத்தனமான விளக்கங்களையும் பதிந்து வருகின்றனர்.
போலிச் செய்திகளை பகுப்பாய்வு செய்யும் ஆல்ட் நியூஸின் துணை நிறுவனர் பிரதிக் சின்ஹா சிசிஏ என்பதற்கு 'காப்பி கேட் அசோசியேஷன்' என்று பரிகாசம் செய்து ஒரு ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளார்.
அதில், பாஜகவின் தகவல் மற்றும் தொழில்நுட்ப பொறுப்பாளர் அமித் மால்வியாவின் ட்வீட்டும், குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜகதீஷ் விஷ்வகர்மாவின் ட்வீட்டும் இடம்பெற்றுள்ளன.
இருவரும் ஒரே ட்வீட்டை தங்கள் கணக்குகளில் பகிர்ந்துள்ளார். அதில், சிஏஏவுக்கு பதில் சிசிஏ என்று எழுத்து மாறி வந்ததால் சிசிஏ தற்போது இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.
தவறாக பதிவிட்ட ட்வீட்களை பாஜக தலைவர்கள் தற்போது நீக்கி வருகின்றனர்.
ட்விட்டர் பயனர்களின் சில ட்வீட்களை இங்கு தொகுத்துள்ளோம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: