குடியுரிமை திருத்த சட்டம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் மத்திய அரசு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
ஜனவரி இரண்டாம் வாரத்திற்குள் இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், எம்பி அசாதுதீன் ஒவைசி, இந்திய ஐக்கிய முஸ்லிம் லீக் கட்சி மற்றும் அதன் நான்கு எம்பிக்கள் உள்ளிட்ட மொத்தம் 60 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதிகள் கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மத ரீதியாக பாரபட்சம் காட்டப்படுவதாகவும், இது அரசிமைப்பின் சட்டப்பிரிவு 14ன் கீழ் தவறு என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்தியாவின் மதசார்பற்ற அடையாளத்தை பாதிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அப்போது வாதாடிய அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை விதிக்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் அனைத்து அசாம் மாணவர்கள் யூனியன், அசாமின் எதிர்க்கட்சி தலைவர் டெபப்ரடா சைகியா, அசாம் கனா பரிஷத் போன்ற அசாமின் பல தரப்புகளும் வழக்கு தொடர்ந்துள்ளன.
1986 அசாம் ஒப்பந்தத்தை மீறும் விதமாக இது அமைந்துள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
- 5ஜி, செயற்கை நுண்ணறிவு: 2020இல் நடக்கப்போகும் தொழில்நுட்ப பாய்ச்சல்கள் என்னென்ன?
- மலேசிய உச்சி மாநாட்டில் பங்கேற்காத இம்ரான்கான்: சௌதி நிர்பந்தம் காரணமா?
- குடியுரிமை சட்டத் திருத்தம்: சென்னை பல்கலைக்கழகத்தில் வலுக்கும் போராட்டம்
- மரண தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் ராணுவ சர்வாதிகாரி: யார் இந்த முஷாரஃப்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












