குடியுரிமை திருத்த சட்டம்: சென்னை பல்கலைக்கழகத்தில் வலுக்கும் போராட்டம் - நடப்பது என்ன?

டெல்லி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் சென்னை பல்கலைக்கழகத்தை சேர்ந்த கார்த்திகேயன், சுப்பையா என்ற இந்த இரு மாணவர்களை போலீசார் கைது செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அவர்களை விடுவிக்கக்கோரியும் போராட்டத்தை ஒடுக்கும் செயலில் ஈடுபடும் போலீசாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கல்வி நிலையத்திற்குள் நுழைந்த போலீஸார்

இதற்கு மத்தியில் பல்கலைக்கழகத்திற்குள் போலீஸார் நுழைந்தனர்.

போலீஸாரை எதிர்த்து மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.

மாணவர்களிடம் பேசிய பல்கலைக்கழக தரப்பு, இது மத்திய அரசு கொண்டுவந்த சட்டமென்றும், தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும், போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து செல்லும்படியும் வலியுறுத்தினர்.

ஆனால், கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களை விடுவிக்காமல் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர் மாணவர்கள்.

இதனை அடுத்து போலீஸார் பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேறினர்.

போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: