ராகுல், மோதி பேச்சு: பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அரசியலாக்கப்படுகிறதா?

பட மூலாதாரம், Gettyimages
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி டெல்லி
இந்தியாவில் நடைபெறும் பாலியல் வல்லுறவு குறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் கூறியதால் வெள்ளிகிழமை மக்களவையில் அமளி ஏற்பட்டது.
வியாழக்கிழமையன்று ஜார்கண்ட்டில் உள்ள கோடாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், 'பிரதமர் நரேந்திர மோதி 'மேக் இன் இந்தியா' (இந்தியாவில் தயாரிப்போம்) என்ற கோஷத்தை முன்பு முன்வைத்தார். ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் 'ரேப் இன் இந்தியா' (நாட்டில் நடக்கும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள்) என்ற நிலையே உள்ளது' என்றார்.
"இந்திய வரலாற்றில், முதல் முறையாக ஒரு தலைவர் இந்தியாவில் உள்ள பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்." என்று இதுகுறித்து கருத்து கூறியுள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி
அதனை தொடர்ந்து பாஜக உறுப்பினர்களும் ஆக்ரோஷமாக ராகுல் காந்திக்கு எதிரான தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் அவர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில், தான் மன்னிப்பு கோரமாட்டேன் என தெரிவித்திருந்த ராகுல்காந்தி, 2014க்கு முன்பு தேர்தல் பிரசாரத்தின்போது டெல்லியை `ரேப் கேபிடல்` என்று மோதி பேசிய காணொளியை டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மேலும் பாஜக உறுப்பினர்கள், அவர்மீது குற்றம் சாட்டி மக்களின் பிரச்சனையான பொருளாதார மந்தம் மற்றும் சர்ச்சைக்குரிய சட்டமான சிஏபி அமலாக்கம் ஆகியவை குறித்து பேசாமல் திசை திருப்புவுவதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் தொடர்ந்து சில வாரங்களாக பாலியல் வல்லுறவு தொடர்பான செய்திகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக ஹைதராபாத்தில் 27 வயதான பெண் கால்நடை மருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பிறகு அவர் உடல் எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்குபின் இந்தியாவில் பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்து உலகளவில் கேள்விகள் எழுந்தன.
இந்த சம்பவம் குறித்து மக்களவையில் விவாதிக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். ஒரு மத்திய அமைச்சர் குற்றவாளிகளை கும்பல் கொலை செய்ய வேண்டும் எனக் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இதன்பிறகு, கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக கூறப்படும் ஒரு பெண் நீதிமன்ற விசாரணைக்கு செல்லும்போது உயிரோடு எரிக்கப்பட்டார்.
மேலும் உத்தரபிரதேசத்தில் நரேந்திர மோதியின் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார். பின்னர் அந்த பெண் ஒரு விபத்தையும் சந்திக்க நேர்ந்தது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு கருத்தையும் நரேந்திர மோதி கூறவில்லை என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
இந்த குற்றசாட்டில் சில உண்மைகள் இருக்கதான் செய்கிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் குறித்து பிரதமர் மோதி எந்த கருத்தும் கூறவில்லை.
ஹைதராபாத் பாலியல் வல்லுறவு குறித்து மக்களவையில் கேள்விகள் எழுப்பப்படும்போதும் பிரதமர் மோதி அன்று அங்கு இல்லை.
ஆனால் 2014 தேர்தலுக்கு முன்பு நரேந்திர மோதி பெண்களின் பாதுகாப்பு குறித்து அடிக்கடி பேசி வந்தார். டிசம்பர் 2013ல் அவர் பேசியபோது டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவை நினைவு வைத்து கொண்டு வாக்களியுங்கள் என மோதி கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
2014ல் பதவியேற்றபோதுகூட தங்கள் ஆட்சி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை பொறுத்துக்கொள்ளாது எனவும் கூறியிருந்தார்.
2014 ஆகஸ்ட் சுதந்திரதினத்தன்று பேசும்போதுகூட ஆண் பிள்ளைகளை கட்டுபாட்டுடன் வளர்க்கவேண்டும் என்றும் அவர்களை சிறந்த குடிமக்களாக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். பாலியல் வல்லுறவு தொடர்பான சம்பங்களை சமுதாயம் மற்றும் குடும்பத்தின் சார்பிலும் சில பொறுப்புகள் உள்ளது என கூறியிருந்தார். இதனால் ஆண் பிள்ளைகள் கேள்வி கேட்கப்பட வேண்டும் என நரேந்திர மோதி கூறியிருந்தார்.
அவரின் அந்த பேச்சு, மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது. ஆனால் அரசு வெளியிட்ட குற்றவழக்குகளின் தரவுகள்படி, 2017ல் இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்.
இதனால் பிரதமர் மோதி பேசிய அனைத்தும் வெறும் வார்த்தைகளே என்பதுபோல் மக்களில் சிலர் சிந்திக்க தொடங்கியுள்ளனர்.
ஆனால் இந்திய பெண்களுக்கு இப்போது தேவை பாதுகாப்பே தவிர அரசியல் சர்ச்சைகள் அல்ல.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












