“இந்திய மீனவர்களின் படகுகளை திரும்பக் கொடுப்போம்” - கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம், MONEY SHARMA/Getty Images
"இலங்கையால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளை திரும்பக் கொடுக்க முயற்சிகளை எடுப்போம்,” என்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இலங்கை ஜனாதிபதி இடையே, இன்று டெல்லியில் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“இந்தியாவும், இலங்கையும் வலுவான நட்புறவை பேணி வருகின்றன. 'அண்டை நாட்டுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையின்படி இலங்கையோடு பேணிவரும் நட்புறவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,” என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் நரேந்திர மோதி இவ்வாறு தெரிவித்தார்.
“இலங்கையை வலுவாக கட்டியெழுப்பும் கடமை உங்களுக்கு (கோட்டாபய ராஜபகஷாவுக்கு) வழங்கப்பட்டுள்ளது. வலுவான இலங்கை இந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துக்கே நன்மை பயக்கும்” என்றும் மோதி கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
"இலங்கையில் தமிழர்களின் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் மரியாதை ஆகியவற்றை நிலைநாட்ட இலங்கை அரசு நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று நான் நம்புகிறேன், இந்த நல்லிணக்க வழிமுறையில் 13ம் சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதும் அடங்குகிறது” என்றும் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவும் டெல்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பட மூலாதாரம், ANI
“இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள இந்நேரத்தில் இலங்கை-இந்திய உறவை உயரிய நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். இரு நாடுகளும் நீண்டகால நட்புறவை கொண்டுள்ளன. நம் மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்காக இணைந்து பணியாற்றுவது அவசியம்” என்று கோட்டாய ராஜபக்ஷ முன்னதாக குறிப்பிட்டார்.
இந்திய குடியரசு தலைவர் மாளிகையில் இலங்கை ஜனாதிபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்புக்கு பின்னர் ஊடகங்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANI
பின்னர் டெல்லிலுள்ள ராஜ்காட் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, மகாத்மா காந்தியின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

பட மூலாதாரம், ANI
டெல்லியிலுள்ள குடியரசு தலைவர் மாளிகைக்கு இன்று வெள்ளிக்கிழமை வருகை தந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷயை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி கைக்குலுக்கி வரவேற்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
முன்னதாக, இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் வந்துள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷயை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை டெல்லியில் சந்தித்து பேசினார்.

பட மூலாதாரம், ANI
வியாழக்கிழமை மாலை இந்திய தலைநகர் டெல்லி வந்தடைந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நவம்பர் 30ம் நாள் வரை 3 நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
நேற்று மாலை இந்தியா வந்தடைய கோட்டாபயவை மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங் வரவேற்றார்.
இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு கோட்டாபய மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணம் இது.
அண்மையில் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வென்ற கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் என்ற நிலையிலும், இந்தியா - இலங்கை - சீனா ஆகிய 3 நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையிலும் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
இலங்கை உள்நாட்டுப் போரில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நடந்த காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் கோட்டாபய.
அப்போது, பல்லாயிரம் தமிழர்கள் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதாக புகார்கள் உண்டு.
இந்தப் பின்னணியில் கோட்டாபயவின் இந்திய வருகையை ஒட்டி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தி கைதானார்.

பட மூலாதாரம், ANI
கோட்டாபய இலங்கையின் புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் இலங்கைக்கு நேரடியாக சென்று வாழ்த்துத் தெரிவித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அளித்த வாழ்த்துக் கடிதத்தையம் அவர் அப்போது கோட்டாபயவிடம் அளித்தார். அத்துடன் மோதியின் அழைப்பை ஏற்று உடனடியாக இந்தியா வருகை தரவும் அவர் ஒப்புக்கொண்டார்.
ராஜபக்ஷ குடும்பத்தினர் சீன ஆதரவுப் போக்கு உடையவர்கள் என்று கருத்து நிலவி வந்த நிலையில், அவரை இந்திய வெளியுறவு அமைச்சர் நேரில் சென்று சந்தித்ததும், உடனடியாக அவர் இந்தியா வர ஒப்புக்கொண்டதும் அரசியல் நோக்கர்களை இந்த விஷயத்தை கூர்ந்து கவனிக்க வைத்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியை கோட்டாபய வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசுவார். அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்திப்பார். குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு வெள்ளிக்கிழமை முறைப்படியான வரவேற்பு அளிக்கப்படும். காந்தியடிகள் நினைவிடமான ராஜ்காட்டுக்கும் செல்வார் கோட்டாபய.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
பிற செய்திகள்:
- பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர்
- 'எனை நோக்கி பாயும் தோட்டா' நாளை பாய்கிறது; 4 ஆண்டுகள் காத்திருந்த சினிமா
- உணவுக் காடு: விவசாயம் வெற்றிகரமான தொழில்தான் - சாதித்த சரோஜாவின் கதை
- ரயில்வே வேலைக்கான தேர்வில் தமிழை தேர்வு செய்தோர் எத்தனை பேர்?
- சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 18,000 ஆண்டுகள் முந்தைய விலங்கினம்: நாயா, ஓநாயா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்