சமஸ்கிருத துறையில் முஸ்லிம் பேராசிரியர்: எதிர்க்கும் பனாரஸ் இந்து பல்கலை. மாணவர்கள்

ஃபராஸ்கான்

பட மூலாதாரம், FIROZ KHAN

    • எழுதியவர், ரஜனீஷ்
    • பதவி, பிபிசி ஹிந்தி

பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள், ஃபரோஸ் கான் போன்ற முஸ்லிம் அறிஞர்கள் சமஸ்கிருதம் கற்று கொடுப்பதை விரும்பவில்லை. இது தொடர்பாக நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டம் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

ஃபரோஸ் கான் ஒரு முஸ்லிம். அவர் எவ்வாறு சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்க முடியும்? அவர் எவ்வாறு பகவத்கீதை மற்றும் வேதங்களை கற்று கொடுக்க முடியும்? என்று இந்தப் போராடும் மாணவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஃபரோஸ் கான் ராஜஸ்தான் முதலமைச்சரிடம் இருந்து மாநில நிலை சமஸ்கிருத அறிஞருக்கான விருதை பெற்றவர்.

சமஸ்கிருதத்தில் சாஸ்திரி நிலை வரை கற்றிருக்கும் தனது தந்தை, சமஸ்கிருதம் பாடமாக இருந்த அரசுப் பள்ளியில் தன்னை சேர்த்தது தொடங்கி இந்த மொழியை கற்று கொள்ளும் பயணம் தொடங்கியதாக ஃபரோஸ் கான் தெரிவிக்கிறார்,

இவ்வாறு சமஸ்கிருதம் கற்றுகொள்ள தொடங்கிய ஃபரோஸ் கான், கற்று தேர்ந்து, ராஜஸ்தானின் ஜெய்பூரில் இருந்து இந்து பல்கலைக்கழகமான பனாரஸ் வந்தடைந்துள்ளார்.

ஃபரோஸ் கானின் தந்தையான ரம்சான் கானும் சமஸ்கிருதம் கற்றவர்தான். அவர் "முன்னா மாஸ்டர்" என்று அறியப்படுகிறார். ஜெய்பூரில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாக்குரு கிராமத்தை சேர்ந்தவர் முன்னா மாஸ்டர்.

ஃபரோஸ் கான் ராஜஸ்தான் முதலமைச்சரிடம் இருந்து மாநில நிலை சமஸ்கிருத அறிஞருக்கான விருதை பெற்றவர்

பட மூலாதாரம், FIROZ KHAN

படக்குறிப்பு, ஃபரோஸ் கான் ராஜஸ்தான் முதலமைச்சரிடம் இருந்து மாநில நிலை சமஸ்கிருத அறிஞருக்கான விருதை பெற்றவர்

இசை கற்று கொடுக்கும் முன்னா மாஸ்டர் நன்றாகவே பாடுகிறார். முன்னா மாஸ்டரின் தந்தை கோயில்களில் பஜனை பாடல்களை பாடியிருக்கிறார். முன்னா மாஸ்டரின் பாடலையும், பஜனைகளையும் கேட்பவர்கள் பக்தியோடு கேட்பார்கள்.

முன்னா மாஸ்டரின் 3வது மகன்தான் ஃபரோஸ் கான். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத அறிவியல் மற்றும் இறையியல் துணை பேராசிரியர் வேலைக்கு நவம்பர் 5ம் தேதி நடைபெற்ற நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்களில் ஃபரோஸ் கானும் ஒருவர். இந்த பணி நியமண கடிதத்தை அவர் 6ம் தேதி பெற்றுள்ளார்.

நவம்பர் 7ம் தேதி வேலையில் சேர ஃபரோஸ் கான் சென்றபோது. சமஸ்கிருத அறிவியல் மற்றும் மதத்துறை மாணவர்கள் ஏற்கெனவே போரட்டத்தை தொடங்கியிருந்தனர்.

நவம்பர் 7ம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறவில்லை. போராட்டம் தொடர்ந்து வருகிறது.

"நான் அங்கு சென்றேன். நுழைவாயில் மூடியிருந்ததை கண்டேன். மாணவர்கள் தர்ணாவில் அமர்ந்திருந்தனர்" என்கிறார் ஃபரோஸ் கான்.

"எங்களுக்கு இது மிகவும் வருத்தம் அளிக்கிறது" என்று கூறுகிற முன்னா மாஸ்டர் "முதல் முறையாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதை பனாரஸ் உணர்ந்துள்ளது. இதுவரை நான் உணரவில்லை" என்கிறார்.

எந்த மத்தை சேர்ந்தவராக இருந்தாலும், ஏதாவது ஒரு மொழியை படித்து, கற்று கொடுக்க என்ன பிரச்சனை இருக்க முடியும்? என்று கேள்வி கேட்கிறார் ஃபரோஸ் கான்.

ஜெய்பூர் சவாய் மன்சிங்கில் பாடும் ஃபராஸ் கான்

பட மூலாதாரம், FIROZ KHAN

படக்குறிப்பு, ஜெய்பூர் சவாய் மன்சிங் ஸ்டேடியத்தில் பாடும் ஃபராஸ் கான்

சமஸ்கிருத இலக்கியத்தை புரிந்து கொண்டு நான் சமஸ்கிருதம் கற்றேன். சமஸ்கிருதம் மற்றும் கலாசாரம் என இரண்டு நிலைகளில் இந்தியாவின் நற்பெயர் உள்ளது. இந்தியாவை பற்றி முழுமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால், சமஸ்கிருதம் கற்று கொள்ளாமல் முடியாது" என்கிறார் ஃபரோஸ் கான்.

சமஸ்கிருதம் இந்துக்கள் குறிப்பாக பிராணமர்களின் மொழி என்றும், உருது முஸ்லிம்களின் மொழி என்றும் இந்தியாவில் பொதுவாக கருதப்படுகிறது.

போராட்டம் நடத்தும் மாணவர்கள் கூறுவது என்ன?

"ஃபரோஸ் கான் சமஸ்கிருதத்தை கற்றுக் கொண்டதிலும், கற்று கொடுப்பதிலும் என்ற பிரச்சனையும் இல்லை" என்கிறார் இந்தப் போராட்டத்தை வழிநடத்தும் சக்கரபாணி ஓஜா.

இங்கு சமஸ்கிருத்தில் இரண்டு துறைகள் உள்ளன. ஒன்று சமஸ்கிருத துறை. இன்னொன்று சமஸ்கிருத அறிவியல் மற்றும் மதத்துறை. சமஸ்கிருத துறையில் ஃபரோஸ் கான் பணியில் அமர்த்தப்பட்டிருந்தால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த துறையில் மதம் கற்று கொடுக்கப்படுகிறது. இவர் எப்படி மதத்தை கற்று கொடுப்பார் என்கிறார் சக்கரபாணி.

இரண்டாவதாக, பல்கலைக்கழக சட்டபடி ஃபரோஸ் கானின் நியமனத்தில் சட்டமீறல் நடைபெற்றுள்ளது. இந்து மதத்தை பின்பற்றுபவர் மட்டுமே இறையியல் கற்று கொடுக்க முடியும்" என்பது அவரது வாதமாக உள்ளது.

பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிரான இந்த நியமனம் பற்றி பல்கலைக்கழக துணை வேந்தர் ராகேஷ் பட்நகரிடம் பேசிய பிறகும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

தான் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்தவர் என்று சக்கரபாணி தெரிவித்தார்.

பாடும் ஃபராஸ்கான்

பட மூலாதாரம், FIROZ KHAN

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் இந்தி மொழித்துறை பேராசிரியர் அஷிஸ் திருப்பதி இது பற்றி தெரிவிக்கையில், 1950ம் ஆண்டு தொடங்கி இந்தியா அரசியல் சாசனப்படி இயங்கி வருகிறது. விதிமுறைகள், பாரம்பரியங்கள், நிறுவன விதிகள் ஆகியவற்றில் ஏதாவது முரண்பாடு ஏற்பட்டால், தயக்கமின்றி அரசியல் சாசனம் சொல்வதை ஏற்க வேண்டும். நாடாளுமன்றத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் வேறுபாடுகள் எழுந்தால், அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருப்பதுதான் ஏற்று கொள்ளப்படும். ஃபரோஸ் கானின் நியமனம் அரசியல் சாசனப்படியானது. இவரது நியமனத்தில் பல்கலைக்கழக சட்டங்கள் ஏதும் மீறப்படவில்லை" என்கிறார்.

பல்கலைக்கழம் நிர்வாகத்தின் பதில்?

பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தரின் இல்லத்தின் முன்பு, ஃபரோஸ் கானை சமஸ்கிருத அறிவியல் துறையில் துணை பேராசிரியர் வேலைக்கு அமர்த்தியதற்கு எதிராக சிலர் இந்தப் போராட்டத்தை நடத்துவதை உறுதி செய்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம், சிறந்த நபரை சட்டப்படி பல்கலைக்கழகம் ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :