அயோத்தி, பாபர் மசூதி மற்றும் ராம் ஜென்மபூமி: இதுவரை பிபிசி தமிழ் இணையளத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு

ராமஜென்ம பூமி என்று பரவலாக அறியப்படும் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், இவை குறித்து பிபிசி தமிழ் இணையதளத்தில் வெளியான கட்டுரைகளை இங்கு முழுமையாக தொகுத்துள்ளோம்.

அயோத்தி பாபர் மசூதியை இடிக்க ஒத்திகை நடந்தது எப்படி?

டிசம்பர் 6, 1992 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில், 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இந்துத்துவா கும்பலால் இடித்துத் தள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில், 2,000 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நடைபெறும் ஒரு நாள் முன்பாக, இந்து தன்னார்வலர்களுடன் இருந்த புகைப்பட கலைஞர் ப்ரவீன் ஜெயின் தனது புகைப்படங்களையும், அன்று நடந்த நிகழ்வுகளையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி பனி மாலைப் பொழுதில் அயோத்தியா சென்றடைந்தேன்.

அயோத்தி வழக்கின் தீர்ப்பை எழுதப்போகும் 5 நீதிபதிகள் யார்?

இந்தியாவில் மிகவும் உற்று கவனிக்கப்பட்ட அயோத்தி நிலத்தகராறு வழக்கை இந்திய உச்ச நீதிமன்றத்தை சேர்ந்த 5 நீதிபதிகள் விசாரித்தனர்.

அவர்களை பற்றிய தகவல்களை இந்த கட்டுரையில் தொகுத்து வழங்குகின்றோம்.

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு முதல் இதுவரை: 7 கேள்விகள், 7 பதில்கள்

1992ம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்நிலையில், பாபர் மசூதியின் வரலாறு முதல் அது குறித்த பல்லாண்டுகால வழக்கின் தற்போதைய நிலை வரையுள்ள பல்வேறு விடயங்களை விளக்குகிறது இந்த கட்டுரை.

அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு பின் என்ன நடக்கலாம்?

இரண்டு கால்பந்து மைதானங்களின் அளவிலான நிலம் தொடர்பான சர்ச்சை இந்தியாவின் வரலாற்றில் நீண்டகால சர்ச்சையாக இருந்து வருகிறது. ஆனால் அது சாதாரண நிலம் அல்ல.

அயோத்தியில் 2.77 ஏக்கர் அளவுள்ள அந்த நிலம் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் ஆழமான நம்பிக்கை சார்ந்த இடமாக அமைந்துள்ளது.

பல ஆண்டுகளாக இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால், இந்தப் பிரச்சினையில் தீர்ப்பு கூறுவதற்கான நேரம் நெருங்கிவிட்டதைப் போலத் தெரிகிறது.

அயோத்தி: ராமர் பிறந்த இடமா? பாபர் கட்டிய மசூதியா?

அடுத்த 30 நாட்களில், ஒரு முக்கிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இருக்கும் என்று கருதப்படும் அயோத்தி வழக்கின் தீர்ப்பு வரவிருக்கிறது. ராமர் கோயில் மற்றும் பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் மேல் முறையீட்டு மனுக்களின் விசாரணை இன்று (புதன்கிழமை) முடிவடைந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு, 40

அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் - இந்து தேசியவாதம் வளர்ந்தது எப்படி?

26 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் வலதுசாரி இந்துத்துவா கும்பலால், 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்டது. முஸ்லிம் ஆட்சியாளர்களால் இங்கிருந்த கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக அவர்கள் கூறினர்.

1992-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்த நாளில் இருந்து, இந்து தேசியவாத கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சியை பிபிசியின் முன்னாள் இந்திய செய்தியாளர் மார்க் டல்லி விவரிக்கிறார்.

2000 ஆண்டுகளுக்கு முன் கொரியாவின் அரசியான இந்திய இளவரசி

அயோத்தியில் இருந்து வெளியேறி வனவாசம் சென்ற இளவரசர் ராமர் 14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பினார் என்று இந்திய இதிகாசம் ராமாயணம் கூறுகிறது. ஆனால், அதே அயோத்தியில் இருந்து சென்ற இளவரசி ஒருவர் திரும்பி வரவேயில்லை. வெளிநாட்டின் அரசியாகிவிட்டார்.

"இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 'ஹு ஹவாங் ஓக் அயுதா'வில் இருந்து தென்கொரியாவின் க்யோங்சாங் பிராந்தியத்தில் இருக்கும் கிம்ஹாயே நகருக்கு இந்திய இளவரசி வந்தார்," என்று கொரியா வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவுள்ள நிலையில் மக்களின் மனநிலை என்ன?

ராமஜென்ம பூமி என்று பரவலாக அறியப்படும் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், அயோத்தியில் வசிக்கும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் மனநிலையை பதிவு செய்கிறது பிபிசி.

வனவாசம் முடிந்து ராமர் அயோத்திக்கு திரும்பியதாக கூறப்படும் நாளன்று ராம ஜென்மபூமியில் அமைந்துள்ள கோயிலில் பூசாரியாக இருக்கும் சத்யேந்திர தாஸ், 'அன்னகூட்' என்று அழைக்கப்படும் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் பாபர் மசூதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இக்பால் அன்சாரியும் கலந்துகொண்டு, அங்கு வழங்கப்பட்ட 56 விதமான உணவுப் பதார்த்தங்களையும் ரசித்து ருசித்து உண்டார். அது மட்டுமல்ல, திருவிழாவில் கலந்து கொண்ட இக்பால் அன்சாரிக்கு பண்டிகை நாள் பரிசாக 100 ரூபாய் அன்பளிப்பையும் சத்யேந்திர தாஸ் கொடுத்தார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :