சிறுவன் சுஜித்தை பத்திரமாக மீட்க 98 அடி இலக்கு வைக்கும் பேரிடர் மீட்பு குழு

குழிக்குள் சிறுவன் சுஜித்
படக்குறிப்பு, குழிக்குள் சிறுவன் சுஜித்

சிறுவன் சுஜித் விழுந்த இடத்துற்கு அருகே தோண்டப்படும் பகுதியில் 98 அடி வரை குழி தோண்டி பின்பு அதை சுஜித் விழுந்த பள்ளத்தோடு இணைக்கப்படும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிறுவன் சுஜித்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சுஜித்தை மீட்பதற்கான நிலையான நடைமுறைகளை நாம் பின்பற்றி வருகிறோம். அதே சமயம், அவருடைய உடல் மேலும் கீழே இறங்காமல் தடுத்திருக்கிறோம். ஆழ்துளைகளை தோண்டும் ரிக் இயந்திரத்தை கொண்டு இதுவரை 27 அடி வரை தோண்டியுள்ளோம். பள்ளம் தோண்டுவதை மிக எளிதாக்கும் நவீன ரிக் இயந்திரம் வந்து கொண்டிருக்கிறது. சுஜித் பாறைகளுக்கு நடுவே சிக்கியுள்ளார். அதனால், இணையதளங்களில் சொல்லப்படுவது போல் நம்மால் அனைத்து நுட்பங்களையும் இங்கு பயன்படுத்தி பார்க்க முடியாது. பாறைகள் இருப்பதால் சீராக தோண்டுவதில் சிக்கல் இருக்கிறது. சுஜித் சுமார் 85 அடி ஆழத்தில் சிக்கி கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. 98 அடி வரை தோண்டி அதன்பிறகு சுஜித் சிக்கிக் கொண்டிருக்கும் துளையை இணைக்க திட்டமிட்டுள்ளோம். 98 அடியை எட்டியவுடன் அரைமணி நேரத்தில் சுஜித்தை பேரிடர் மீட்புக்குழுவால் மீட்டுவிட முடியும்," என்றார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்
படக்குறிப்பு, மீட்பு பணியில் அமைச்சர் விஜயபாஸ்கர்

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இன்னும் சில மணிநேரத்தில் அதிநவீன ரிக் இயந்திரம் வந்துவிடும் என்றும், 27 மீட்டரில் குழந்தையின் கைகள் ஏர் லாக் மூலம் இறுக்கமாக பிடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சுஜித்தின் நிலை குறித்து தெரிவித்த அவர், கேமரா மூலம் பார்க்கையில் குழந்தையின் கைகள் தெரிவதாகவும், உள்ளே வழங்கப்பட்டு வரும் ஆக்ஸிஜனை குழந்தை எடுத்து கொள்கிறானா என்பது தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் கேள்வி

நிலவில் நீர்,செவ்வாயில் குடியிருப்பு,எதற்காக இத்துணைக் கண்டுபிடிப்புகள்? நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு? என ட்விட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பகிர்ந்துள்ள ஒரு ட்வீட்டில், "ஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழத்தில் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

குழிக்குள் சுஜத் விழுந்தது எப்படி?

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே விவசாயமும் செய்து வந்தார். இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2).

பிரிட்டோ தனது வீட்டு உபயோகத்திற்கான தண்ணீர் தேவைக்காக, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்திருந்தார். சுமார் 400 அடி ஆழத்திற்கு அந்த ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

ஒரு ஆண்டு வரை அந்த ஆழ்துளை கிணறு பயன்பாட்டில் இருந்தது. பின்னர் தண்ணீர் இல்லாத நிலையில், அந்த ஆழ்துளை கிணறு பயன்பாடின்றி இருந்தது. இதனால் ஆழ்துளை கிணற்றை மூடும் வகையில், மேல்மட்டம் வரை மண்ணை கொட்டியுள்ளனர். தற்போது அந்த பகுதியில் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழை பெய்ததால் ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் சுமார் 30 அடி ஆழம் வரை கீழே இறங்கியது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பிரிட்டோ வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் கலாமேரி, சுஜித்வில்சனுடன் இருந்தார். மாலை சுமார் 5.30 மணியளவில் சுஜித்வில்சன் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவன் சோளம் சாகுபடி செய்யப்பட்ட பகுதியில் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதில் மண்ணில் உராய்ந்தபடி சென்று அடிப்பகுதியில் சிக்கினான்.

இதைக்கண்ட கலாமேரி அலறியடித்துக்கொண்டு அங்கு ஓடிச்சென்றார். குழந்தை அடிப்பகுதியில் சிக்கியிருப்பதை கண்டு அவர் சத்தம்போட்டார். இதனால் அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். மேலும் உடனடியாக இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் பிரிட்டோவுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வேலைக்கு சென்ற இடத்தில் இருந்து, பிரிட்டோ பதறியடித்துக்கொண்டு அங்கு வந்தார்.

மேலும் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் மற்றும் போலீசார், மணப்பாறை மற்றும் திருச்சியில் இருந்து தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து பார்த்து, குழந்தையை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மிகவும் குறுகலான அந்த ஆழ்துளை கிணற்றில், ஆட்கள் யாரும் இறங்க முடியாத நிலையில், கிணற்றின் அருகே குழிதோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்தனர்.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :