ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 7 பேரின் விடுதலைக்கு எதிராக தமிழக ஆளுநர்?

பட மூலாதாரம், TNRAJBHAVAN.GOV.IN
நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம்.
தி ஹிந்து (ஆங்கிலம்): ராஜீவ் காந்தி வழக்கு குற்றவாளிகளை விடுவிப்பதற்கு எதிராக தமிழக ஆளுநர்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற ஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிராக இருப்பதாக தி ஹிந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் தமிழக அமைச்சரவையின் நிலைப்பாட்டை அவர் நிராகரித்துள்ளார்.
ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தெரிவித்த பரிந்துரைகளை ஏற்கவில்லை என்று அதிகாரபூர்வமற்ற வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
தன்னுடைய முடிவு குறித்து அரசுக்கு அவர் எழுத்துபூர்வமாக எதையும் இன்னும் வழங்கவில்லை என்று தி ஹிந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

தினமலர்: வங்கதேச படையினர் சுட்டதில் இந்திய வீரர் பலி

பட மூலாதாரம், SOPA IMAGES
மேற்கு வங்க மாநிலத்திலுள்ள இந்திய - வங்கதேச எல்லையில், அந்நாட்டு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டார் என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய - வங்கதேச எல்லையில் உள்ள பத்மா ஆற்றில் மூன்று இந்திய மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அவர்களை வங்கதேச எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் சமீபத்தில் கைதுசெய்தனர்.
அதில் இருவரை விடுவித்துவிட்டனர். வங்கதேச வீர்ர்களின் பிடியிலுள்ள மீனவரை விடுவிக்க பேச்சு நடத்துவதற்காக முர்ஷிதாபாத் மாவட்டத்தின் கக்மரிச் சார் எல்லையிலுள்ள பத்மா ஆற்றின் மையப்பகுதிக்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையைச் சோந்த 6 வீரர்கள், நேற்று காலை விசைப்படகில் சென்றனர்.
அப்போது, சற்று எதிர்பாராத விதமாக, வங்கதேச படையை சோந்த சயீத் என்ற வீர்ர் உல்.கே 47 ரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதில். இந்திய படையை சாந்த விஜய் பான் சிங் என்றந வீர்ரின் தலையில் குண்டு பய்ந்தது, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: இந்திய பார்வையில் வரலாறு எழுதப்பட வேண்டும் - அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images
இந்திய பார்வையில் வரலாறு எழுதப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், இந்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளதாக தி நியூ இந்திய எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
1857ம் ஆண்டு நிகழ்ந்த இந்திய சுதந்திரத்திற்கான முதல் போரை கலகம் என்று சுருக்கிவிட முடியாது. விநாயக் தாமோதர் சவர்கார் இல்லாமல் இருந்திருந்தால் அவ்வாறுதான் நடந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிடடுள்ளார்.
“இது கலகம் என்பது பிரிட்டிஷ் பார்வை. விநாயக் தாமோதர் சவர்கார் இல்லாமல் இருந்திருந்தால் இந்தப் பார்வையிலேயே முடங்கியிருப்போம்” என்று பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் இரண்டு நாட்கள் சர்வதேச கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில் அமித் ஷா தெரிவித்துள்ளதாக த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்:
- மதுரையில் தலித் சிறுவனின் முதுகில் பிளேடால் கீறிய சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன? #BBCGroundReport
- ப. சிதம்பரம் கைதின் நோக்கம் என்ன?- மூத்த வழக்கறிஞர்கள் அலசல்
- ஏ.டி.எம். பற்றி தெரியாது - சிம் கார்டுகள் தங்கத் துகள் போல - இது எரித்ரியாவில்
- சிரியாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்டது துருக்கி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












