கீழடி அகழாய்வு இந்திய வரலாற்றை திருத்தி எழுதுமா? - பிபிசி தமிழின் பிரத்யேக காணொளி

கீழடி அகழாய்வு

தென்னந்தோப்பு நிறைந்திருக்கும் ஒரு பகுதியில் இருந்த ஒரு தொல்லியல் மேடு இந்தியாவின் வரலாற்றையே மாற்றி எழுதுவதற்கான சூழலை உண்டாக்கக்கூடுமா என்பதை சில ஆண்டுகளுக்கு முன்பு எத்தனை பேர் கணித்திருப்பார்கள் என்பது தெரியவில்லை. 

மதுரை மாவட்டத்தின் அருகே இருக்கும் கீழடி எனும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. 

கீழடியின் முக்கியத்துவம் எவை? அதில் கிடைத்த முடிவுகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பிபிசி தமிழின் முரளிதரன் காசிவிஸ்வநாதன் கீழே இணைக்கப்பட்டிருக்கும் காணொளியில் விளக்குகிறார். 

கீழடியில் கிடைத்த பொருட்கள் ஏன்? அங்கு கிடைத்த விளையாட்டு பொருள்கள் எவை? ஒரு வளர்ச்சியடைந்த சமூகத்தில்தான் மக்கள் வேலை பார்த்து தம் உணவுத் தேவை, வசிப்பிடத் தேவை ஆகியவற்றை பூர்த்தி செய்தபின்னர் ஓய்வு நேரத்தில் விளையாடுவதற்கான நேரத்தை பெற்றிருப்பர். அப்படியானால் கீழடியில் கிடைத்த விளையாட்டு பொருள்கள் சொல்லும் கதை எது?

தமிழ் பிராமியின் வயது என்ன? மிகவும் அழகிய வேலைப்பாடு மிக்க ஆபரணங்கள் கிடைத்திருக்கின்றன. இது சொல்லும் சேதி என்ன? கட்டட தொகுதிகள் கிடைத்துள்ளன. இது ஏன் முக்கியமானது?

இப்படிப் பலப்பல கேள்விகள் - இதற்கான விடைகள் என்ன? பிபிசி தமிழின் யு டியூப் சேனலில் வெளியாகியிருக்கும் சிறப்பு காணொளியை மறக்காமல் பாருங்கள். உங்கள் கருத்துக்களையும் பிபிசி தமிழின் யு டியூப் சேனலின் வாயிலாக எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். கீழடி குறித்த மேலதிக தகவல்கள் அறிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும் மறக்காதீர்கள். 

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :